முந்தைய தலைமுறை மண்ணில் புரண்டு விளையாடி, ஆற்றில் குளித்து, குளத்தில் நீந்தி, மரத்தடியில் கூட்டாஞ்சோறு சமைத்து வளர்ந்தது. நாகரீகம் மிகுந்து சொகுசு மலிந்திருக்கும் இந்த காலகட்டத்தில் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வருவதே பாதுகாப்பற்றது என்ற சூழல் உள்ளது. மாநகரங்களில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் மைதானங்களே இல்லை! தன் நாளில் பெரும்பகுதியைக் கழிக்கும் பள்ளிகளே வகுப்பறைகள் மட்டும் இருக்கும் சிறைச்சாலைகள் போல இருந்தால் அந்த பிள்ளைகள் எங்கே விளையாடுவார்கள், எப்படி ஆரோக்கியமாக வளர்வார்கள்..? புத்திசாலிக் குழந்தைகள் குறித்த புதிய […]
செய்தி சுருக்கம்: ஒன்றுக்கு மேற்பட்டோர் அல்லது குழுவினர் அமர்ந்து விளையாடக் கூடிய விளையாட்டுகள் போர்டு கேம், அதாவது அட்டையை பயன்படுத்தி விளையாடும் விளையாட்டு என்று அழைக்கப்படுகிறது. இவற்றை விளையாடும் குழந்தைகளின் கணித திறன் மேம்படுகிறது என்று ஆய்வு ஒன்றின் முடிவு தெரிவிக்கிறது. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? குழந்தைகள் பெரும்பாலும் ஸ்மார்ட் டி.வி மற்றும் ஸ்மார்ட் போன்களில் நேரத்தை செலவழிக்கின்றனர். அது அவர்களின் உடல் மற்றும் மன நலத்திற்கு உகந்தது அல்ல. இந்த போர்டு கேம்கள் பிள்ளைகள் […]
செய்தி சுருக்கம்: குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரில் 60 சதவீதம் பேர் தலைவலியால் அவதிப்படுவதாக கண் மருத்துவம் சார்ந்த ஒரு கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. குழந்தைகள் தலைவலி என்று கூறினால் அதை அலட்சியம் செய்யக்கூடாது என்றும், கண்களில் குறைபாடு இருப்பதால் தலைவலி ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? அமெரிக்காவில் 2 முதல் 18 வயது கொண்ட குழந்தைகள் மற்றும் […]
செய்தி சுருக்கம்: குழந்தை பராமரிப்பில் தந்தையரின் பங்களிப்பு குழந்தைகளின் நடத்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. குழந்தை பிறந்ததும் தாயின் பொறுப்பு மட்டுமே அதிகரிக்கிறது. வீட்டு வேலைகளோடு, குழந்தையை பராமரிக்கும் கடமையும் பெண்ணுக்குக் கூடுகிறது. குழந்தை பராமரித்தல் என்பது எளிதான வேலையல்ல. கடந்த 30 ஆண்டு காலமாக அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையங்கள், பெண்கள் கருவுறும் முன்னரும், கருவுற்றிருக்கும்போதும், பிரசவத்திற்கு பின்பும் கர்ப்பகால இடர் மதிப்பீடு கண்காணிப்பு […]