மனிதகுலத்தைத் தாக்கும் கொடிய நோய்களில் இதய நோய்களுக்கு அடுத்தபடியாக புற்றுநோய்களே இருக்கின்றன. உலகில் ஏற்படும் மரணங்களில் ஆறில் ஒன்றுக்குப் புற்றுநோயே காரணமாக அமைகிறது என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவில் பதினைந்து பேரில் ஒருவருக்கு புற்றுநோய் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பத்து நிமிடங்களில் இரண்டு பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதும் அவர்களில் ஒருவருக்கு அது முற்றிய நிலையில் இருப்பதும் கண்டறியப்படுவதால் இருவரில் ஒருவர் இறந்து விடுகிறார் என்று கூறப்படுவது இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. புகையிலைப் பொருள்கள் […]
ஓரு பொருள் உற்பத்தியாகும் இடம் உங்களுக்குத் தெரியவில்லை என்றால் அதை உண்ணாதீர்கள் என்பார் நம்மாழ்வார் ஐயா. ஒரு உணவுப்பொருளில் என்னென்ன இருக்கின்றன அதை எப்படித் தயாரிக்கின்றனர், அதில் உள்ள மூலப்பொருட்கள் எங்கே கிடைக்கின்றன போன்ற தரவுகள் தெரியாத ஒரு உணவை நாம் அடியோடு மறுத்தால் மட்டுமே நம் ஆரோக்கியத்திய நம்மால் பேணிக்காக்க முடியும். ஒரு தளபதி ஒரு நாள் சாப்பிட அமர்கிறான். அவனுக்கு ஒரு உணவு பரிமாறப்படுகிறது. அதை அவன் முழுவதுமாக உண்கிறான். சற்று நேரத்திற்கெல்லாம் அவன் […]
இலைக் காய்கறிகளான முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை உட்கொண்டால் நுரையீரல் பிரச்சினைகள் தீரும் எனச் சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. நேச்சுரல் என்னும் இதழில் வெளிவந்துள்ள இது பற்றய ஆய்வுக் கட்டுரையில், இலைக் காய்கறிகள் நார்ச்சத்து மிக்க உணவுகள் மட்டுமல்ல; அவை நுரையீரல் தொற்றுகளை எதிர்த்துப் போராடக் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை இலைக் காய்கறிகளில் உள்ள சில கலவைகள், குடல் மற்றும் நுரையீரல் போன்ற உடலிலுள்ள முக்கியமானப் புள்ளிகளைப் பாதுகாக்கும் ரகசியமாக […]
இ-சிகரெட்டைப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு முப்பதே நாட்களில் மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆன்லைன் ஆய்வுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற நான்கு வருடத் தரவுகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவை அறிவித்துள்ளார்கள். இந்த ஆய்வு ஓஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் விரிவான புற்றுநோய் மையம் மற்றும் தெற்கு கலிபோர்னியா ஸ்கூல் ஆப் மெடிசின் ஆகியவற்றிலுள்ள புகையிலை ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்களால் நிகழ்த்தப்பட்டது. இதில் இளைஞர்களின் இ-சிகரெட் பயன்பாடு […]
செய்தி சுருக்கம்: WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பு, செயற்கை இனிப்பூட்டிகளில் பயன்படுத்தப்படும் ‘அஸ்பார்டேம்’ என்ற பொருளை புற்றுநோயை விளைவிக்கும் ஒரு பொருளாக அறிவிக்க உள்ளது. அடுத்துவரும் வாரங்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரக்கூடும். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? ‘ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்பார்கள் நம் ஊரில். சர்க்கரை கிடைக்கவில்லை என்றாலோ இல்லை சர்க்கரை உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்றாலோ நாம் மீண்டும் இயற்கையாக கிடைக்கின்ற இனிப்பை நோக்கித்தான் நகர்ந்தாக […]