மனிதன் கண்டுபிடித்த ஆகச்சிறந்த அழிவுப் பொருள் எது என்று கேட்டால், அது பிஸாஸ்டிக் என்றுதான் சொல்லவேண்டும். பிஸாஸ்டிக் இந்த உலகில் மண்ணை மட்டும் மலடாக்கவில்லை, மனித உடல்களையும் தடம் மாற்றுகிறது. சிறு சிறு துகள்களாக உடைந்து சிதைந்த மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இந்த பூமி முழுவதும் பரவிக் கிடக்கிறன. பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கழிவுகள் மண்ணில் மழைநீரைச் சார விடாமல் தடுத்து மண்ணுக்கும் மண்ணைச் சார்ந்திருக்கும் நுண்ணுயிர்களுக்கும் பெரும் பாதிப்பை உண்டு செய்கிறது என்பது இத்தனை வருடங்களில் நாம் […]
ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணின் மூளையிலிருந்து 8 சென்டிமீட்டர் நீளமுள்ள புழு ஒன்று உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகில் முதல்முறையாக நடைபெற்றிருக்கும் இந்த அதிசயம் பிரிட்டனில் பிறந்த பெண் ஒருவர் ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது நிகழ்ந்திருக்கிறது. அப்பெண்ணின் சேதமடைந்த முன்மூளைத் திசுக்களிலிருந்து நீண்ட சரம் போல இருந்த வெளிர் சிவப்பு நிற ஒட்டுண்ணி ஒன்று வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டுண்ணிப் புழுவானது இரண்டு மாதங்கள் வரை அந்தப் பெண்ணின் மூளையில் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் […]
மருத்துவம் தோன்றிய காலத்தில் இருந்தே வலி மறப்பு மருந்துகள் மற்றும் மயக்க மருந்துகள் குறித்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. இன்று போதை மருந்துகளாக கருதப்படும் பல ஆங்கில மருந்துகளும், கஞ்சா போன்ற இயற்கைப் பொருட்களும் ஆரம்ப காலத்தில் மருத்துவத்தில் மயக்க மருந்தாக பயன்பட்டவைதான். மயக்க மருந்துகளைப் பயன்படுத்துகையில் ஏற்படும் ஒரு அனுபவம் எந்த மருந்தையும் பயன்படுத்தாதவர்களுக்கும் ஏற்பட்டதைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் அத்தகைய உணர்வு ஏற்படக் காரணம் என்ன என்று ஆராய முற்பட்டனர். முடிவில் அதற்குக் காரணம் மூளையின் […]
தலையில் காயங்கள் ஏற்படுவது என்பது ஒருவரது மூளை, மண்டை ஓடு அல்லது உச்சந்தலையில் ஏற்படும் காயங்கள் ஆகும். அவை மூளையில் ஏற்படும் அதிர்ச்சிகள், எலும்பு முறிவுகள் மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் காயங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. குழந்தைகளுக்கு இந்த வகையான காயங்கள் ஏற்படும்போது பெற்றோர்களுக்கு ஏற்படும் கவலை சொல்லிமாளாது. அந்தக் காயங்கள் மூளை அதிர்ச்சியையும் உள்ளடக்கியிருக்கும் போது அவர்களின் கவலை இன்னும் அதிகரிக்கும். ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள கால்கரி பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு இப்படிக் கவலைப்படும் பெற்றோர்களின் மனதுக்குச் […]
பொதுவாகப் பற்களைச் சுத்தமாக வைத்திராவிட்டால் சொத்தைப்பல், பற்சிதைவு, ஈறுகளில் இரத்தம் கசிதல், துர்நாற்றம் வீசுதல் ஆகியவை ஏற்படுமென்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், இல்லையா? ஆனால் பற்களைச் சுத்தமாக வைத்திராவிட்டால் மூளைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் வாயில் உருவாகும் பாக்டீரியாக்கள் உடலின் பல பகுதிகளுக்கும் சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பாக மூளையையும் பாதிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். பற்களின் எண்ணிக்கை மற்றும் ஈறுகளில் ஏற்படும் […]