பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியால் பனாமா கால்வாயின் நீர்மட்டம் குறைந்துள்ளது. போதுமான ஆழம் இல்லாததால் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் இரு பக்கங்களிலும் 135க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் முடங்கிக் கிடப்பதாகத் தெரியவந்துள்ளது. பனாமா கால்வாய் பசிபிக் பெருங்கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் ஒரு செயற்கை கால்வாய். அமெரிக்கக் கண்டத்தின் நடுவில் இருக்கும் குறுகிய நிலப்பரப்பு வழியாக இந்தக் கால்வாய் அமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு நகரிலிருந்து அதற்கு எதிர் […]