வயதானவர்களுக்கிடையில் ஆர்த்ரிடிஸ் என்ற சொல் பரவலாகக் கேட்கப்படுகிறது. ‘எனக்கு ஆத்ரிடிஸ் கம்ப்ளைன்ட் இருக்கு’ என்றும், ‘ஆர்த்ரிடிஸுக்கு டிரீட்மென்ட் எடுத்துகிட்டிருக்கேன்’ என்றும் பலர் சொல்லக் கேட்கிறோம். உண்மையில் ஆர்த்ரிடிஸ் என்றால் என்ன? அதற்குத் தமிழில் என்ன மீனிங் என்று இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம். ஆர்த்ரிடிஸைத் தமிழில் மூட்டழற்சி என்று அழைக்கிறார்கள். இதைப் பொதுவாக மூட்டுவலி என்று சொல்வதும் உண்டு. இந்தச் சொற்களை நாம் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், மூட்டு என்றால் என்ன என்று முதலில் கற்கவேண்டும். மூட்டு என்பது இரண்டு எலும்புகள் […]