English: anxiety Tamil: மனப்பதற்றம், பதற்றம், பதட்டம் (பேச்சுவழக்கு), எதிர்காலம் பற்றிய அச்சம்/கவலை Explanation: பதற்றம் என்பது எதிர்மறையானதை எதிர்பார்க்கும் மனநிலை/உடல்நிலை. மனரீதியாக, பதற்றம் என்பது அதிகரித்த விழிப்புணர்வாலும் பயத்தாலும் உருவாகும் கவலையில் நேரும் சித்திரவதை எனக் கூறப்படுகிறது. உடல்ரீதியாக, பதற்றம் என்பது உடல் மண்டலங்களின் இதமற்ற செயல்பாடுகள் (படபடக்கும் இதயம் போன்றவை) மூலம் விவரிக்கப்படுகிறது. உண்மையானதா அல்லது கற்பனையானதா என்று தெரியாத ஒரு ஆபத்துக்கு நமது மனமோ உடலோ எதிர்ச்செயல் புரிவதால் இந்த செயல்பாடுகள் நேர்கின்றன. […]