அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனநிலை மோசமடைந்து வருவதாகவும் அதை அந்நாட்டு ஊடகங்கள் ஒத்துக் கொள்ளாமல் தவிர்த்து வருவதாகவும் ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபரான பைடன் பொது வெளிகளில் சில கேள்விகளுக்குச் சரியாகப் பதில் கூறவில்லை என்றும் சில கேள்விகளுக்கு எதிர்வினை கூட ஆற்றுவது இல்லை என்றும் எதிரே இருப்பவர்கள் குறித்து அவர் குழப்பம் அடைவதாகவும் மொத்தத்தில் அவர் யதார்த்தமாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய வெளியுறவுத்துறை […]
பணக்காரர்களுக்கானச் சொத்து மதிப்பு மற்றும் பணக்காரர்களாக மாற வேண்டுமாயின் அதற்குத் தேவைப்படும் நிகர சொத்து மதிப்பு ஆகியவை குறித்து அமெரிக்காவின் பிரபல நிதிச்சேவை நிறுவனமான சார்லஸ் ஷ்வாப் நிறுவனம் ஆயிரம் அமெரிக்கர்களிடம் ஒரு புதிய கணக்கெடுப்பை நிகழ்த்தியது. அந்நிறுவனத்திற்காக லாஜிக் ரிசர்ச் நடத்திய இந்தக் கணக்கெடுப்பில், ‘உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், நீங்கள் பணக்காரர்தானா, உங்களைப் பணக்காரர்களாகக் கருதுவதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பன போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது கணக்கெடுப்பில் இடம்பெற்ற மக்கள் […]
செய்தி சுருக்கம்: அமெரிக்காவிடம் இருந்து 31 ஆளில்லா ட்ரோன் விமானங்களை இந்தியா வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இப்பணிகள் வரும் ஜூலை முதல் துவங்க இருக்கிறது. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் பாதுகாப்புப் பணியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் இந்திய ராணுவமும் அதனை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அதன் படி அமெரிக்காவிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் இந்த ட்ரோன்கள் வாங்கப்படுகிறது. முக்கியமாக எல்லை ரோந்துப் பணியில் இவ்வகை விமானங்களை பயன்படுத்தப்படுகிறது. பின்னணி: […]
செய்தி சுருக்கம்: இந்தியாவில் இருந்து பல காலகட்டங்களில் திருடப்பட்ட பழமை வாய்ந்த பொருட்களை திரும்ப இந்தியாவிடமே ஒப்படைப்பதாக அமெரிக்கா அரசு தெரிவித்துள்ளது, என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் நிகழ்ந்த சந்திப்பில், இந்தியாவின் எதிர்காலம் குறித்த பல விஷயங்களை இருவரும் விவாதித்துள்ளனர். அச்சந்திப்பில், இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மிகப் பழமை வாய்ந்த […]