மனிதகுலத்தைத் தாக்கும் கொடிய நோய்களில் இதய நோய்களுக்கு அடுத்தபடியாக புற்றுநோய்களே இருக்கின்றன. உலகில் ஏற்படும் மரணங்களில் ஆறில் ஒன்றுக்குப் புற்றுநோயே காரணமாக அமைகிறது என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவில் பதினைந்து பேரில் ஒருவருக்கு புற்றுநோய் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பத்து நிமிடங்களில் இரண்டு பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதும் அவர்களில் ஒருவருக்கு அது முற்றிய நிலையில் இருப்பதும் கண்டறியப்படுவதால் இருவரில் ஒருவர் இறந்து விடுகிறார் என்று கூறப்படுவது இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. புகையிலைப் பொருள்கள் […]
குடிப்பழக்கத்தால் ஆண்களை விட பெண்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது எனப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மது அருந்துவதால் உயிர் இழப்பதில் பெண்களை விட ஆண்கள் மூன்று மடங்கு அதிகம் என்றாலும் பெண்களின் இறப்பு விகிதம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது என்றும் 2018 லிருந்து 2020 க்கு இடையில் ஆல்கஹால் தொடர்பான உயிரிழப்புகள் ஆண்களிடையே 12.5 சதவீதமும் பெண்களிடையே 15 சதவீதமும் அதிகரித்துள்ளது என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த ஆய்வை நிகழ்த்திய நியூயார்க்கிலுள்ள ஹோப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகை சுகாதார உதவிப் பேராசிரியரும் […]
எங்கெங்கோ கேள்விப்பட்ட கஞ்சா புழக்கம் என்பது இப்போது நம் கால்களுக்கடியில் நமது சுற்றுப்புறங்களிலேயே நிகழத்தொடங்கி உள்ளது. கல்லூரி பள்ளி மாணவர்களுக்கிடையே கஞ்சா வெகு சாதாரணமாகப் புழங்குகிறது. சாராயம் குடித்துச் சலம்பிக்கொண்டிருந்த முந்தைய தலைமுறையைப் போல இல்லாமல் இந்த கஞ்சா தலைமுறை போதையின் பாதியில் வெகுவேகமான முன்னேற்றத்தைக் காட்டுகிறது. தற்போது, சிறார் குற்றவாளிகள் மற்றும் கொலை போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுவோர் கஞ்சா போதையில் இருந்ததாகவும் அவர்களுக்கு இந்த பழக்கம் வெகுநாட்களாக இருப்பதாகவும் வாக்குமூலத்தில் தெரிவிப்பது வாடிக்கையாகியுள்ளது. உண்மையில் […]
செய்தி சுருக்கம்: அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உங்கள் உடலை உடலுறவுக்கு ஒத்துழைக்க மறுக்க வைப்பதுடன் வருங்காலத்தில் உங்கள் உடலுறவு நாட்டத்தையே அடியோடு மறக்கச் செய்துவிடும். கெடுதல் நிறைந்த இந்த குடிப்பழக்கம் ஆரம்பத்தில் சிறந்த உடலுறவுக்கு உதவி செய்வதுபோல தோன்றினாலும் இப்பழக்கம் தினசரி வாடிக்கை ஆகும் பொழுது உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியாமல் செய்து நாளடைவில் உடலுறவின் மீதே வெறுப்பை உருவாக்க செய்யும், இதற்காக மருத்துவர்களை நாடி பலப்படுத்தும் மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் தினசரி குடிக்கும் […]
செய்திச் சுருக்கம் தமிழகத்தில் 5,329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்படும் நிலையில் அதில் தகுதியான 500 கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று துறை அமைச்சரான செந்தில்பாலாஜி முன்னரே அறிவித்திருந்த நிலையில் அதற்கான அறிவிப்பு கடந்த 22-06-2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? முன்னரே தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்திருந்தபடி, நாடு முழுவதும் உள்ல 500 டாஸ்மாக் மதுக்கடைகள் 22-06-2023 முதல் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. உள்துறை சார்பில் இதற்கான அரசாணை கடந்த ஏப்.20-ம் தேதி […]