தொடர்ந்து நான்கு வருடங்களுக்கும் மேலாக அமில ரிப்ளக்ஸ் மருந்துகளை உட்கொள்பவர்கள் பிற்காலத்தில் டிமென்ஷியாவால் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் எனச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. நரம்பியல் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரையில் அமில மருந்துகள் டிமென்ஷியாவை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு முடிவுகள் நேரடியாக நிரூபிக்கவில்லை என்றாலும் அவற்றின் நீடித்த பயன்பாடு டிமென்ஷியாவை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்களில் குறிப்பாக எண்பத்தைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெரியவர்களில் மூன்றில் ஒருவரை டிமென்ஷியா பாதிக்கிறது என்பது […]