அன்றாட இன்பங்கள் என்னென்ன? உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்பார்கள். என்னதான் ஒரு அடிமையாக இருந்தாலும் அவனுக்கும் தனிப்பட்ட இன்பங்களும் ஓய்வும் அவசியம் என்பதற்கான சொல்லப்படும் பழமொழி இது. இதயமும் மூளையும் நாம் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை இடைவிடாது செயல்பட்டாலும் அவற்றிற்கும் சிறிது ஓய்வும் இன்பம் அளிக்கும் இடைவெளியும் தேவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிடித்த இசையைக் கேட்பது மற்றும் காபி குடிப்பது போன்ற சிறிய செயல்பாடுகள் கூட ஒரு நபரின் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துமாம். […]