ஓரு கிரகத்தில் தற்போது காணப்படும் நில அமைப்புகளைக் கொண்டே அக்கிரகம் கடந்துவந்த பாதையை கணிக்க இயலும். அதீத வெப்பத்தாலும், விண்வெளி நிகழ்வுகளாலும் ஒரு கிரகத்தில் உள்ள நீர் நிலைகள் ஆவியாகி மறைந்து போயிருக்க வாய்ப்புண்டு. ஆனால், நீர் ஓடிய தடங்களும், தேங்கி நின்ற இடங்களும் அக்கிரகத்தில் நீர் வளம் ஒரு காலத்தில் இருந்ததை நமக்கு வெளிப்படுத்தும். நமது சூரியக் குடும்பத்திலேயே மிக உயரமான எரிமலை செவ்வாய் கிரகத்தில்தான் உள்ளது. ஒலிம்பஸ் மோன்ஸ் என்பது அவ்வெரிமலையின் பெயர். இந்த […]
உலக விண்வெளி அரங்கில் இந்தியா தனது சந்திராயன் -3 ஐ வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி சாதித்துள்ள இந்த சூழலில் செவ்வாய் கிரகத்தில் குடியேற்றங்களைச் செய்யத் தேவைப்படும் அடிப்படையான விசயங்களைப் பற்றிய புதிய ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. கணினி உருவகப்படுத்துதல் முறை மூலம் செவ்வாய் கிரகத்தில் 28 ஆண்டுகள் தங்கியிருக்க எந்தமாதிரியான குண நலன்களைக் கொண்ட மனிதர்கள் தேவை என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த முன்மாதிரி செவ்வாய் கிரக குடியேற்றத்திற்கு வெறும் 22 பேர் மட்டுமே இருந்தால் போதுமாம். […]