முந்தைய தலைமுறை மண்ணில் புரண்டு விளையாடி, ஆற்றில் குளித்து, குளத்தில் நீந்தி, மரத்தடியில் கூட்டாஞ்சோறு சமைத்து வளர்ந்தது. நாகரீகம் மிகுந்து சொகுசு மலிந்திருக்கும் இந்த காலகட்டத்தில் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வருவதே பாதுகாப்பற்றது என்ற சூழல் உள்ளது. மாநகரங்களில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் மைதானங்களே இல்லை! தன் நாளில் பெரும்பகுதியைக் கழிக்கும் பள்ளிகளே வகுப்பறைகள் மட்டும் இருக்கும் சிறைச்சாலைகள் போல இருந்தால் அந்த பிள்ளைகள் எங்கே விளையாடுவார்கள், எப்படி ஆரோக்கியமாக வளர்வார்கள்..? புத்திசாலிக் குழந்தைகள் குறித்த புதிய […]