ஓரு பொருள் உற்பத்தியாகும் இடம் உங்களுக்குத் தெரியவில்லை என்றால் அதை உண்ணாதீர்கள் என்பார் நம்மாழ்வார் ஐயா. ஒரு உணவுப்பொருளில் என்னென்ன இருக்கின்றன அதை எப்படித் தயாரிக்கின்றனர், அதில் உள்ள மூலப்பொருட்கள் எங்கே கிடைக்கின்றன போன்ற தரவுகள் தெரியாத ஒரு உணவை நாம் அடியோடு மறுத்தால் மட்டுமே நம் ஆரோக்கியத்திய நம்மால் பேணிக்காக்க முடியும். ஒரு தளபதி ஒரு நாள் சாப்பிட அமர்கிறான். அவனுக்கு ஒரு உணவு பரிமாறப்படுகிறது. அதை அவன் முழுவதுமாக உண்கிறான். சற்று நேரத்திற்கெல்லாம் அவன் […]
பீட்ஸா, பர்கர் போன்ற மாவுப்பொருட்களை விரும்பி உண்ணும் இந்த தலைமுறைக்கு நார்சத்து என்றால் என்னவென்றே தெரியாமல் போவதில் ஆச்சரியமில்லை. இயற்கையில் நார்ச்சத்து கொண்ட உணவுப்பொருட்களும்கூட நவீனமயமான பதப்படுத்துதல் முறைகளால் தனது தன்மை பிறழ்ந்து, அதன் நார்ச்சத்துக்களை முழுமையாக இழந்தபிறகே நம் கைகளுக்குக் கிடைக்கின்றன. வைட்டமின்கள் தாதுஉப்புக்களைப் போல இந்த நார்ச்சத்தானது முழுமையாக உடலால் கிரகிக்கப்படுவதில்லை. உண்மையில் இந்த நார்ச்சத்தானது செரிமானத்திற்கும், உடலில் தேவையில்லாத கொழுப்புகளையும், கழிவுகளையும் வெளியேற்றுவதிலேயே பெரும்பங்காற்றுகிறது. ஓரிடத்தில் தேவையின்றி வைக்கப்பட்டிருக்கும் அனைத்தும் ஒருநாள் பிரச்சனையை […]