பீட்ஸா, பர்கர் போன்ற மாவுப்பொருட்களை விரும்பி உண்ணும் இந்த தலைமுறைக்கு நார்சத்து என்றால் என்னவென்றே தெரியாமல் போவதில் ஆச்சரியமில்லை. இயற்கையில் நார்ச்சத்து கொண்ட உணவுப்பொருட்களும்கூட நவீனமயமான பதப்படுத்துதல் முறைகளால் தனது தன்மை பிறழ்ந்து, அதன் நார்ச்சத்துக்களை முழுமையாக இழந்தபிறகே நம் கைகளுக்குக் கிடைக்கின்றன. வைட்டமின்கள் தாதுஉப்புக்களைப் போல இந்த நார்ச்சத்தானது முழுமையாக உடலால் கிரகிக்கப்படுவதில்லை. உண்மையில் இந்த நார்ச்சத்தானது செரிமானத்திற்கும், உடலில் தேவையில்லாத கொழுப்புகளையும், கழிவுகளையும் வெளியேற்றுவதிலேயே பெரும்பங்காற்றுகிறது. ஓரிடத்தில் தேவையின்றி வைக்கப்பட்டிருக்கும் அனைத்தும் ஒருநாள் பிரச்சனையை […]
எவ்வளவோ முற்போக்கு கருத்துகள் இம்மண்ணில் தோன்றி வேரூன்றி வளர்ந்துவிட்ட போதும், இன்னும் ஓரினச்சேர்க்கை பற்றி நம் மக்களுக்கு முழுமையான புரிதல் இல்லை என்பதே உண்மை. இது இயற்கைக்கு மாறானது என்று கூக்குரல் இடுவதில் தொடங்கி ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டங்களைக் கொண்டிருப்பது வரை இதற்கு எதிரான நிலைப்பாடு இருக்கிறது. ஓரினச்சேர்க்கைக்கு எதிரானவர்கள் சொல்வதெல்லாம், ‘இது இயற்கைக்கு எதிரானது, இயற்கையான விலங்குகளிலும் பறவைகளிலும் இந்த பழக்கம் இல்லை. இது இனப்பெருக்கத்திற்கு உதவாத ஒன்று’ என்பதுதான். விலங்குகளில் இருக்கும் […]
சிறுநீர்பாதையின் முக்கியத்துவத்தையும் அதில் ஏற்படும் அசாதாரணமான தொற்றுகளையும் முழுமையாக தெரிந்துகொண்டால் அதை சிறுநீர் பாதையல்ல, பெருநீர் பாதை என்று பெயர்சூட்ட விழைவீர்கள்! உடலின் கழிவுகளை வெளியேற்றுவதோடு உடலின் வெப்பநிலை சமன்பாட்டிற்கு முக்கியமான ஒரு பாகமாக உடலில் திகழ்வது இந்த சிறுநீர் பாதையாகும். இத்தகைய சிறுநீர் பாதைத் தொற்று என்பது இன்றைய காலகட்டங்களில் மிகவும் சாதாரணமாக நம்மிடையே காணப்படுகிறது. சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் என்ற சாதாரணமான அறிகுறியில் தொடங்கை சிறுநீர் பாதையில் வீக்கம் – ரத்தம் வருதல் என்ற […]
செய்தி சுருக்கம்: 1960 முதல் லட்சக்கணக்கான பெண்கள் ஹார்மோன் அடிப்படையிலான கருத்தடை மாத்திரைகளை பலகாலமாகவே பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை இது மிகவும் சகஜமான கருத்தடை வடிவமாகும். ஆனால் இந்த கருத்தடை மாத்திரைகளை யார் வேண்டுமானாலும் வாங்கி விட முடியாது. அதற்கு மருத்துவரிடமிருந்து பெற்ற மருந்து சீட்டு அவசியமாகும். இப்பொழுது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அமைப்பு மருந்துச்சீட்டு இல்லாமல் ஒரு நாளைக்கு ஒரு முறை ஓபில் என்று அழைக்கப்படும் இந்த கருத்தடை மருந்தை […]
செய்திச் சுருக்கம் தூக்கத்தைப்போல உடலுக்கு ஓய்வு தரும் வேறு உண்டா இவ்வுலகில்? அமைதியான சூழலில் ஒரு 20 நிமிடங்கள் உறங்கி எழுவது நமது ஆற்றலைப் புதுப்பிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வில், 20 நிமிட குட்டித் தூக்கம் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கண்டறிந்துள்ளனர். ஸ்லீப் ஹெல்த் ஜர்னலில் சமீபத்தில் வெளியிட்ட, UCL மற்றும் உருகுவேயில் உள்ள குடியரசு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களின் […]