முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மனித இனம் இப்போது மிகப்பெரிய அல்லாட்டத்திற்கு ஆளாகியுள்ளது. தேவையற்ற சபலம் மற்றும் முற்றிலுமான செக்ஸ் ஆசைக் குறைபாடு என்ற இரண்டு எல்லைகளுக்கு இடையில் நாம் இருக்கிறோம். சமூக வலைதளங்கள், ஆபாச வீடியோக்கள் மனிதர்களின் செக்ஸ் உந்துதலில் தேவையற்ற அழுத்தங்களை அளிக்கிறது. இன்னொருபக்கம் மோசமான உணவு வழக்கம் மற்றும் உறக்கச் சுற்று மனிதர்களின் சாதாரண செக்ஸ் வாழ்க்கையையே கடினமாக்கி உள்ளது. இந்த இரண்டு அதீத நிலையும் சரிசெய்யப்பட வேண்டியுள்ளது. எலிகளின் மீதான புதிய […]
முந்தானை முடிச்சு என்ற பாக்கியராஜின் படத்திற்குப் பிறகு முருங்கைக் காய்க்கு நம் ஊரில் மவுசு கூடிப்போனது. உண்மையில் முருங்கைக்காய்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறதா என்பது இன்னும் கேள்விக்குரியதுதான். ஆனால், ஆண்களின் விறைப்புக் குறைபாட்டிற்கும், விரைவில் சக்தியை இழக்கும் பிரச்சனைக்கும் நம்மிடம் உணவிலேயே தீர்வுகள் உள்ளன. நம் திருமணச் சடங்குகளில் புதுமணத் தம்பதிகளுக்கு அளிக்கப்படும் பாலும், பழமும், உளுந்து மற்றும் பயறு வகைகளில் செய்யப்படும் இனிப்புப் பண்டங்களும் தம்பதிகளின் நாவின் ருசிக்காக மட்டும் அளிக்கப்படுவதில்லை. ஆண்மையைத் தூண்டும், […]
உங்கள் துணையுடன் இணக்கமாக இருக்கவும் உறவில் நெருங்கி இருக்கவும் உடலுறவு ஒன்றுதான் ஒரே வழி என்று நீங்கள் கருதுகின்றீர்களா..? ஆரோக்கியமான பிணைப்புக்கு செக்ஸ் மட்டுமே காரணம் என்று நம்புகின்றீர்களா..? உங்கள் ஜோடியுடன் ஆரோக்கியமான மற்றும் வலுவான பிணைப்பை உருவாக்க உதவும் நான்கு நிலைகள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.. செக்ஸ் மற்றும் நெருக்கம் (Intimacy): செக்ஸ் மற்றும் நெருக்கம் பெரும்பாலும் வெவ்வேறு அர்த்தத்தை அளிக்கும் சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டு சொற்களும் முற்றிலும் வேறுபட்டவை என்பதும் உண்மைதான். உடலுறவு […]
சாப்பிடுவதையே மொபைலை நோண்டிக்கொண்டு ஏதோ கடமைக்கு செய்யும் இந்த தலைமுறை உடலுறவை எவ்வாறு அணுகுகிறது? தலை வாழை இலை போட்டு, எந்த பதார்த்தத்தை எங்கே வைக்கவேண்டும் என்பதிலிருந்து எதை முதலில் உண்ண வேண்டும் எதை கடைசியாக திண்ண வேண்டும் என்பது வரை அணு அணுவாக பகுத்து வைத்து வாழ்ந்த நாம் இன்று அவசர கதியில் ஏதோ ஒன்றை கடையில் வாங்கி கடைவாயில் போட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறோம். உடலுறவையும் இவ்வாறே அவசர கதியிலும் கடமையே என்றும் செய்வது சரியா? […]
உலகில் உள்ள எல்லா உயிரினமும் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடுகிறது. இதில் மனித இனம் மட்டும்தான் இனப்பெருக்கத்திற்கு அப்பாற்பட்டும் இன்பத்திற்கான இணைசேரும் ஒரே உயிரினம். மனிதர்களது மனநலம், மற்றும் குணநலம் ஆகியவை அவர்களது செக்ஸ் வாழ்க்கையைச் சார்ந்துள்ளது. மோசமான மற்றும் திருப்தியில்லாத செக்ஸ் வாழ்க்கையை வாழும் ஆணும் பெண்ணும் உணர்வுச்சிக்கலுக்கு உள்ளாவதைக் காண்கிறோம். திருப்தியான செக்ஸ் வாழ்க்கையானது மனிதர்களின் மனநிலையை உற்சாகமாக்கி அவர்களது செயல்திறனை அதிகரிக்கிறது. செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடும் அனைவரும் அதை ஒரே மாதிரி அணுகுவதில்லை. வெறும் […]