அரிசியை தொடர்ந்து சர்க்கரை ஏற்றுமதிக்கும் தடைவிதிக்கும் இந்தியா – கலக்கத்தில் உலக உணவு சந்தை.


செய்தி சுருக்கம்:
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய அரசின் சர்க்கரை ஏற்றுமதி 11.1 மில்லியன் டன்கள், ஆனால் நடப்பு காலாண்டில் வரை 6.1 மில்லியன் டன்கள் மட்டுமே சர்க்கரை ஏற்றுமதி செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற செப்டம்பர் 30 வரையிலும் மொத்தமாக இந்த நிதியாண்டில் 17.2 மில்லியன் டன்கள் சர்க்கரை இந்திய அரசு ஏற்றுமதி செய்யவுள்ளது, அதன் பின்னர் அக்டோபர் முதல் தேதி முதலாக சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. ஏழு ஆண்டுகள் கழித்து இந்திய அரசின் சர்க்கரை ஏற்றுமதி மீதான இந்த தடை உலக உணவு சந்தையை பெரிதும் பாதிக்கும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசு தரப்பில், இந்த ஆண்டு பருவமழை சரியாக இல்லாததால் கரும்பு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் உள்நாட்டு தேவைகளை கருத்தில் கொண்டும், போதுமான அளவு சர்க்கரை மற்றும் எத்தனால் கையிருப்பை உறுதி செய்யும் வகையிலும் வருகின்ற அக்டோபர் 1 முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க முடிவெடுத்து உள்ளதாகவும், செப்டம்பர் 30 வரை 6.1 மில்லியன் டன்கள் என்ற அளவோடு ஏற்றுமதியை நிறுத்திக்கொள்ள ஆலைகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இந்தியாவிலிருந்து உலகநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதியாவது நின்றால் அது உலக உணவு சந்தையில் பெரும் தாக்கத்தை உருவாக்கி அதனால் உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கும். நியூ யார்க் மற்றும் லண்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே பலமடங்கு விலைவாசி உயர்வை சந்தித்து வருகின்றன, தற்போதைய இந்திய அரசின் இந்த சர்க்கரை ஏற்றுமதி தடையானது உலக சந்தையில் மற்றுமொரு விலையுயர்வை உருவாக்கி விடும் என்ற அச்சத்தில் உள்ளனர் உலக மக்கள். இந்திய அரசுதரப்பு “நாங்கள் எங்களது உள்நாட்டு சர்க்கரை தேவையை பூர்த்தி செய்வதையே முதல் குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம், பருவமழையால் கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில் சர்க்கரை உற்பத்தி தவிர மீதமுள்ள கரும்புகளை கொண்டு எத்தனால் உற்பத்தியையும் தேவையான அளவு செய்ய வேண்டியது அவசியமாகிறது” என்று கூறியுள்ளது.
நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு (Oct 1 – Dec 31) நேரங்களில் ஏற்றுமதி செய்வதற்கு போதுமான அளவு சர்க்கரை கையிருப்பு இல்லை, எனவே இந்த நிதியாண்டில் செப்டம்பர் 30 வரை 17.2 மில்லியன் டன்கள் மட்டுமே ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு பயிரிடப்பட்ட கரும்புகள் பல இடங்களில் போதிய மழை இல்லாததால் வீணாகியுள்ளன, இப்போது வரை உற்பத்தியான கரும்புகளை கொண்டு நம் உள்நாட்டின் சர்க்கரை மற்றும் மெத்தனால் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும், ஆனால் ஏற்றுமதி செய்யக்கூடிய அளவில் இவ்வாண்டு சர்க்கரை உற்பத்தி இல்லை என்று கூறியுள்ளனர். இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு இந்திய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்கு 20% வரி விதித்து அதன் வெளிநாட்டு விநியோகத்தை கட்டுக்குள் வைத்திருந்தது, அதேபோன்ற நிலையை விட மோசமான நிலையில் தற்போது உள்ளதால் விரைவில் முற்றிலுமாக சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க அரசு முடிவெடுத்துள்ளது.
இந்தியாவின் கரும்பு உற்பத்தியில் பாதிக்கு மேல் விளைகின்ற மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களிலும், கர்நாடக மாநிலத்தின் தெற்கு மாவட்டங்களிலும் இவ்வாண்டு பருவமழை போதுமான மழைப்பொழிவு தராததால் அங்கு விளையும் சராசரி அளவை விட பாதியளவு தான் இந்த ஆண்டு விளைச்சல் வந்துள்ளது. இந்த ஆண்டின் பருவமழை பாதிப்பு இந்த ஆண்டின் விளைச்சலை பாதிப்பது மட்டுமன்றி அடுத்த ஆண்டு விளைச்சலுக்கு பயிரிடப்படும் காலத்தையும் தள்ளி வைக்க செய்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக இல்லாத அளவு உள்நாட்டில் சர்க்கரை விலை வெகு வேகமாக உயர்ந்து வருகிறது, இதன் காரணமாக ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் அடைய முடியும் என்பதால் பல சர்க்கரை ஆலைகள் தடையை ஒரு மாதம் தள்ளி வைக்க கேட்டுள்ளனர், ஆகஸ்ட் மாதத்தில் 200000 டன்கள் சர்க்கரை ஏற்றுமதி செய்துகொள்ள அனுமதிக்கும் படி அரசை நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர்.
இந்தியாவின் உள்நாட்டு சில்லறை வணிக பணவீக்கம் 15 மாதத்தில் உயர வேண்டிய அளவிற்கு ஒரே மாதத்தில் உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 7.44% ஆக இருந்த உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வு விகிதம் தற்போது 11.5% என்ற அளவை தொட்டுள்ளது, இது கடந்த மூன்று வருடத்தில் அடைந்துள்ள மிகப்பெரும் விலைவாசி உயர்வு ஆகும்.
இந்திய நாட்டில் உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு என்பது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும், சமீபத்தில் உயர்ந்து வருகின்ற சர்க்கரையின் விலை ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை வெகுவாக குறைதுவிட்டது என்று அரசு தரப்பில் கூறியுள்ளனர். கடந்த 2022/23 ஆண்டை விட 3.3% கரும்பு உற்பத்தி இந்த ஆண்டு குறைந்துள்ளது, மொத்தமே இதுவரை 31.7 மில்லியன் டன்கள் மட்டுமே இந்த ஆண்டு கரும்பு உற்பத்தி ஆகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
பின்னணி:
கடந்த இரண்டு வருடங்களாக சர்க்கரை உற்பத்தி ஆலைகளுக்கு பெரிய அளவுகளில் ஏற்றுமதி செய்துகொள்ள அனுமதி அளித்து வந்தது இந்திய அரசு, அப்போது நிறைவான உற்பத்தி இருந்தது அதனால் கையிருப்பும் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது பருவமழையால் விளைச்சல் குறைந்து உற்பத்தி போதுமான அளவில் இல்லாமல் போனதால் கையிருப்பு குறைந்துள்ளது, அதனால் சர்க்கரையின் உள்நாட்டு சந்தை விலையும் உயர்ந்து காணப்படுகிறது. எனவே அரசு தரப்பு சர்க்கரை ஏற்றுமதியை நிறுத்த முடிவெடுத்து உள்ளது.
சென்ற மாதம் சில குறிப்பிட்ட ரக அரிசிகளின் ஏற்றுமதிக்கு தடை விதித்து அரிசி வியாபாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது, அதுபோல இந்த மாதம் சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடை உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே நியூ டெல்லி வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரி விதித்து அதன் வெளிநாட்டு விநியோகத்தை கட்டுக்குள் வைத்துள்ளது. இதையெல்லாம் செய்வது வரவிருக்கும் மத்திய மாநில தேர்தல்களை கருத்தில் கொண்டு தான் என்கின்றனர் சிலர், உணவு பொருட்களின் விலை உள்நாட்டில் உயர்ந்து விடாமல் இருக்க ஆளும் அரசாங்கம் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்றும் கூறுகின்றனர்.
மும்பையை சேர்ந்த பன்னாட்டு வணிகர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் இதைப்பற்றி கூறும் போது “குறைந்த அளவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை கொண்டுள்ள தாய்லாந்து நாடும் இந்தியாவை தொடர்ந்து ஏற்றுமதியை குறைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது. இதனால் அதிக உற்பத்தியை கொண்டுள்ள பிரேசில் மட்டுமே உலக உணவு தேவைக்கு தற்போது எல்லோராலும் எதிர்பார்க்க படுகிறது. ஆனாலும் இந்திய அரசின் தடைகளால் உணவுப்பொருள் ஏற்றுமதி சந்தையில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம் எளிதில் நிரப்ப முடியாதது.
தற்போது நிலவி வரும் அடிப்படை தேவையான உணவுப்பொருட்களின் தட்டுப்பாடும், பற்றாக்குறையும் உலக மக்களுக்கும், புதிய தலைமுறைக்கும் பருவமழையின் அவசியத்தை பற்றியும் உலக வெப்பமயமாதலை தடுக்க வேண்டியதன் அவசியத்தை பற்றியும் விலைவாசி உயர்வு எனும் பாடத்தை கொண்டு புரிய வைக்கிறது.