fbpx
LOADING

Type to search

இந்தியா தொழில்நுட்பம்

வேளாண்மையை விரிவாக்கம் செய்ய ஸ்டார்ட் ஆப் நிறுவங்களா! விவசாயத்தைக் காப்பாற்றுமா கம்பெனிகள்.

செய்தி சுருக்கம்:

இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் ஆப் நிறுவங்களை வேளாண்மை பக்கம் திருப்ப வேளாண் விரைவுசார் நிதி என்னும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. வேளாண் சார்ந்த பிரச்சனைகளை விரைந்து சரிசெய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

“வேளாண் தொழிலே இந்திய நாட்டின் முதுகெலும்பாகும்” இந்த வாசகத்தை கேட்டிராத இந்தியர்களே இருக்க முடியாது. இதற்கு காரணம், பெரும்பான்மையான இந்தியர்கள் தங்களை வேளாண்சார் தொழில்களில் ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். இந்தியாவில் சுமார் 50 சதவீதத்திற்கும் மேலாக வேளாண் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் விவசாயத்தால் வரும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 18 சதவீதமே உள்ளது. எதிர்மாறாக, சேவைத் துறையில் வெறும் 28 சதவீதத்தினரே உள்ளனர். ஆனால் அத்துறையின் பங்களிப்பு 60 சதவீதத்திற்கு மேலாக உள்ளது. ஆகவே இந்த நிலையை மேம்படுத்த, வேளாண் துறையில் தொழில்நுட்பத்தை ஒன்றிணைக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டுகிறது. அதன் வெளிப்பாடாகத் தான் வேளாண் சார் விரைவு நிதி என்னும் திட்டத்தைத் துவங்கியுள்ளது.

பின்னணி:

இந்தியாவில் வேளாண்மை பருவகால மழைப் பொழிவை நம்பியுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஒரு வருடம் சரியான மழைப் பொழிவு இல்லையென்றால் கூட அந்த வருடம் விவசாயிகள் நட்டம் அடைந்து விடுகிறார்கள். மேலும் உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொடுகிறது. இது மழைப் பொழிவு இல்லாத காலத்தே மட்டும் அல்லாமல் மிகுதியான அளவு மழைப் பொழியும் காலத்திலும் நடக்கிறது. தற்போது இந்தியாவில் அதுபோன்ற நிலை தொடர்கிறது. இந்த வருடத்தில் தக்காளி விளையும் மாநிலங்களில் பெய்த அதீத மழைப்பொழிவின் காரணமாக தக்காளிகள் சேதமடைந்து விடுகிறது. இதனால் சந்தையில் அதற்கு தேவை அதிகரிக்கிறது. அதன் விளைவாக அதன் விலை பலமடங்கு எகிறியுள்ளது. இவ்வாறு பல பயிர்களுக்கு இந்த நிலை ஏற்படுவாதால் பணவீக்கம் எளிதாக மேலோங்கி செல்கிறது. இதையெல்லாம் எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவருவது என சிந்தித்து செயல்பட பல தனியார் நிறுவங்கள் தேவைப்படுகிறது.

இந்தியாவின் ஸ்டார்ட் ஆப் கலாச்சாரம் இந்தியாவின் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கேற்ற சேவைகளை தொழில்களாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தகவல் தொழில் நுட்பம் மட்டுமல்லாமல் வேளாண் துறையில் விவசாயிகளுக்கு ஏற்படும் குறைகளை தீர்க்கவும் இந்த ஸ்டார்ட் ஆப் நிறுவங்கள் வேலைசெய்கிறது. இவ்வாறு வரும் நிறுவங்களை ஊக்கப்படுத்த இந்த வேளாண் விரைவு சார் நிதி உதவியாக இருக்கும்.

உலகளவில் இந்திய வேளாண் துறையின் பங்களிப்பை வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் ஐந்து டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பதே அரசின் நோக்கமாகும். பெரும் நாடுகளின் பொருளாதாரப் பட்டியலில் இந்தியா தற்போது மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் இருக்கும் சீனாவை பொருளாதாரத்தில் முந்த வேண்டும் என்றால் இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறிய நிலையில் இந்த விரைவு சார் நித்தியை ஏற்படுத்தித் தந்துள்ளது.

வேளாண் விரைவு சார் நிதியில் ஆரம்பகட்டமாக சுமார் 2,200 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 500 கோடி வரை விவசாயம்  சார்ந்த ஸ்டார்ட் ஆப் நிறுவங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு புதிய நிறுவங்கள் முன்வரவேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விவசாயத்தில் இருக்கும் குறைகளைக் களைவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது போன்ற நோக்கத்தை கொண்டு இந்நிறுவங்கள் தங்கள் தொழில் யூகத்தியைக் கையாள வேண்டும். அவ்வாறு செயல்படும் நிறுவங்களுக்கு இந்த வேளாண் விரைவு நிதி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

மக்கட் தொகையில் சீனாவை பின்னுக்குதள்ளி இந்தியா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை சுமார் 141 கோடியாகும். ஜான் மால்தஸ் என்பவரின் கூற்றுப்படி மக்கள் தொகை உயர்ந்துகொண்டே சென்றாலும், விளை நிலங்கள் அதிகரிப்பு அதற்கு ஏற்றவாறு அதிகரிக்காது. அதனால் உணவு உற்பத்தியின் தேவை அதிகமாக இருக்க வேண்டும். சுதந்தரதிற்குப் பின் இந்தியாவில் பஞ்சத்தால்  உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டாலும், பசுமைப் புரட்சிக்குப் பிறகு பெருமளவில் உணவுத் தேவை சரி செய்யப்பட்டது. தற்போதளவில் இந்தியாவில் உணவு உற்பத்தி மிகுதியாகவே உள்ளது என புள்ளியல் ஆய்வு தெரிவிக்கிறது. எனினும் இந்தியாவின் அந்நிய செலாவனியை அதிகரிக்க மிகுதியான ஏற்றுமதி தேவைப்படுகிறது. ஏற்றுமதியை அதிகப்படுத்தும்போது உள்நாட்டு தேவை அதிகரிக்கும் நிலை உருவாகும். எனவே தேவையை சரிசெய்யவும் ஏற்றுமதியை தூரிதப்படுத்தவும் ஸ்டார்ட் ஆப் நிறுவங்கள் செயல்பட வேண்டும்.

விவசாயத்தில் பயிர் சேதங்களை விளைவிக்கும் முக்கிய காரணிகளாக பருவ மழை, மற்றும் பூச்சிகளும் இருக்கின்றன. மேலும் எதிர்பாரா காரணிகள் நிறைய உள்ளன எனவே வேளாண்மையில் ஊகம் மிகவும் அவசியமாகிறது. இதனை வளர்ந்து வரும் ‘ஆர்டிபிசியல் இண்டெலிஜன்ஸ்’ தொழில்நுட்பத்தைக் கொண்டு சிறப்பாக கணிக்கலாம். நிலத்தின் தன்மை, அந்நிலத்திற்கு ஏற்ற பயிர், அந்நிலத்தின் நீர்வளம், பருவ காலநிலை என பல காரணிகளை யூகிக்கும்போது எந்த ஒரு இடையூறும் இல்லாமல் விவசயிகளால் பயிர் செய்யமுடியும். மேலும் செயலிகள் கொண்டு விவசாயிகளுக்கு அன்றாட தகவல்களை கொடுக்க அவர்களது அறுவடை மற்றும் சந்தை நிலவரம் சிறப்பாக பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். வேளாண்மையில் டிரோன் தொழில்நுட்பத்தைக் கொண்டு எந்த இடத்திற்கு எவ்வளவு பூச்சிக்கொல்லி தேவைப்படும் என கணித்து பூச்சிக்கொல்லியின் பயன்பாட்டைக் குறைக்கலாம். இது பயிர் சேதாரத்தைக் காக்கும் மற்றும் அளவான பூச்சிக்கொல்லியை பயன்படுத்த வகை செய்யும்.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகள் ஏற்கனவே தங்கள் விவசாய திட்டத்தில் பல தொழில்நுட்பதத்தை உட்புகுத்தி வெற்றிகண்டுள்ளார்கள். இதனை எல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்த வேளாண் விரைவுசார் நிதியைக் கொண்டு தன் முதுகெலும்பை உறுதியாக்க முன்வந்துள்ளது இந்தியா.

தொடர்புடைய பதிவுகள் :

சேமிக்கும் பழக்கம் அதிகம் கொண்ட  புத்திசாலி தலைமுறை 90ஸ் கிட்ஸ்
அமெரிக்காவில் இந்துக்கள் மீதான வெறுப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரிப்பு - அமெரிக்க சட்டமன்றத்தின் உதவி...
சென்னையின் காற்றில் பாதுகாப்பான அளவை விட பல மடங்கு துகள்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்...
இந்தியாவின் உள்நாட்டில் தயாராகும் நீண்டதூர நிலப்பரப்பு ஏவுகணை! 400 கி.மீ தூரத்தில் விமானங்கள் மற்றும...
மிகப்பெரும் இந்திய - அமெரிக்கா ஒப்பந்தங்கள்: H-1B விசா விதிகளில் மாற்றங்கள், விண்வெளித் துறையில் ஒரு...
ஆன்ட்ராய்ட் கிட்கேட் நியாபகம் இருக்கிறதா? இழுத்து மூடுகிறது கூகுள்.
சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் மரபணு ரீதியாக ஒத்திருக்கிறார்கள்: டிஎன்ஏ விஞ்ஞானிகள் கண்டுபிடிப்...
வறுமையின் பிடியிலிருந்து விடுபடும் இந்திய தேசம்! உலக வறுமைக் குறியீடு இந்தியாவைப் பற்றிக் கூறுவது என...
குடிப்பழக்கத்தால் ஆண்களை விட பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிப்பு: அதிர்ச்சித் தகவல்
கீழே வரும் ட்விட்டர் குருவி.  உயர எழும் ப்ளூ ஸ்கை!  எலான் மஸ்க் விதிக்கும் கட்டுப்பாடுகளின் விளைவுகள...
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *