fbpx
LOADING

Type to search

இலங்கை தெரிவு பல்பொருள்

வதந்தி பரவும் வேகத்தைப் பாருங்கள்! இலங்கையின் புனிதமான போதிமரத்தை மொபைல் சிக்னல்கள் பாதிக்கின்றன என்ற புரளியும் விளைவுகளும்!!

செய்தி சுருக்கம்:

இலங்கையில் இருக்கும் பௌத்தரக்ளின் புனித மரமான ஸ்ரீ மஹா போதிக்கு அங்கு நிலவும் 5ஜி மொலைல் சினல்களால் தீங்கு விளைகிறது என்ற செய்தி கடந்த சில நாட்களாக இலங்கை என்றும் உலவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி ரனில் விகிரமசிங்க ஒரு உயர்மட்ட வல்லுநர் குழுவை அங்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஸ்ரீ மஹா போதி! 

இலங்கையின் புராதானமான நகரமான அனுராதபுரத்தில் 2,300 வருடங்கள் பழமையான போதி மரம் உள்ளது. இந்தியாவில் புத்தர் 2500 ஆண்டுகளுக்கு முன்பு ஞானம் அடைந்த போதி மரத்தின் ஒரு கிளை வெட்டப்பட்டு இங்கு இலங்கையில் நடப்பட்டு வளர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 

புத்தத் துறவியான இந்தியப் பேரரசர் அசோகரின் மகள் சங்கமித்தா மகா தேரி , கிமு 288 இல், சிங்கள மன்னன் தேவநம்பிய திஸ்ஸாவின் ஆட்சியின் போது இம்மரம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது என்பது பரவலான நம்பிக்கை. 

பௌத்த பெரும்பான்மை கொண்ட இலங்கையில் இந்த ஸ்ரீ மஹா போதியானது அந்நாட்டின் வழிபாட்டு மையமாகவும், தேசிய இறையாண்மையின் சின்னமாகவும் விளங்கி வருகிறது. 

இந்தியாவில் உள்ள அசல் மரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இறந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு இம்மரத்திற்கு நிகழ்ந்த பாதிப்புகள்

1907 மற்றும் 1911 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல்களின் போது இந்த புனித போதி மரத்தின் இரண்டு கிளைகள் உடைந்தன. 1929 ஆம் ஆண்டு கட்டுவாவல ஜாமிஸ் என்ற நபர் ஒரு கிளையை வெட்டி வீழ்த்தினார். 

1985 மார்ச் மாதம் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 120க்கும் மேற்பட்டவர்கள் இவ்விடத்தில் கொல்லப்பட்டனர். அதன்பின்னர், புனித போதி மரம் அமைந்துள்ள மேல் மொட்டை மாடிக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது

மஹா போதி மரத்திற்கான பாதுகாப்புகள்

கிர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னன் (ஆர். 1747-1782) காலத்தில் மரத்தை சேதப்படுத்தக்கூடிய காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்க இலுப்பந்தேனிய அத்ததஸ்சி தேரோவால் தற்போதைய மதில் கட்டப்பட்டது .

புனித மரத்தைச் சுற்றி 1969 ஆம் ஆண்டு யதிரவன நாரத தேரரின் வழிகாட்டுதலின் கீழ் சில பௌத்தப் பின்பற்றுபவர்களால் புனித மரத்தைச் சுற்றி முதல் தங்க வேலி நிர்மாணிக்கப்பட்டது. மேற்கூறிய தங்க வேலிக்கு கீழே உள்ள இரும்பு வேலி யகிரல பன்னாநந்த தேரரின் வழிகாட்டுதலின் கீழ் கோனகல மக்களால் உருவாக்கப்பட்டது .

1985 புலிகள் தாக்குதலுக்குப் பிறகு, ஸ்ரீ போதி மரத்திற்கு விமான நிலைய பாணி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, பார்வையாளர்கள் மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் பேட்-டவுன்கள் வழியாகச் செல்கிறார்கள். 

இரண்டு தங்க முலாம் பூசப்பட்ட வேலிகளால் சூழப்பட்டுள்ளது மற்றும் துறவிகள், காவல்துறை மற்றும் ஆயுதம் ஏந்திய துருப்புக்களால் 24 மணிநேரமும் பாதுகாக்கப்படுகிறது.

மரத்தை அச்சுறுத்தும் அணில்கள், பறவைகள் மற்றும் குரங்குகளை விரட்டுவதற்கும் கைதட்டி விரட்டுவதற்கும் பல ஆட்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

5 ஜி அலைக்கற்றையால் ஆபத்து! 

உள்ளூர் இணையதளத்தில் முதன்முறையாக இந்த புனித போதி மரத்தின் அருகில் இருக்கும் மொபைல் கோபுரங்களில் இருந்து வெளிப்படும் 5ஜி கதிர்வீச்சால் இந்த மரம் பாதிக்கப்பட்டு அதன் இலைகள் கருப்பாக மாறிவருவதாக அறிவிக்கப்பட்டது. 

‘பெரும் ஆபத்து’ என்ற தலைப்பில் இந்த செய்தி தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் மீம்ஸ்கள் பரவலாகப் பகிரப்பட்டன, மேலும் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் தனது யூடியூப் சேனலில் தன் பங்கிற்கு இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். 

அனுராதபுரத்தில் இந்த புனித  மரத்தை வைத்திருக்கும் பொமலுவ கோவிலின் பிரதம பிக்கு, 5G கோபுரங்களை நிறுவுவதற்கு தொலைபேசி ஆபரேட்டர்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.

புனித போதிமரத்தைக் காக்க அரசின் நடவடிக்கை

68 வயதான பிக்கு பல்லேகம ஹேமரதன, கூறுகையில் “நான் ஒரு விஞ்ஞானியோ, தாவரவியலாளனோ அல்ல, எனவே நான் ஜனாதிபதியிடம் இந்த பிரச்சினையை முன்வைத்தேன். அவர் உடனடியாக ஒரு நிபுணர் குழுவை நியமித்தார்.”

இந்தக் குழுவில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர், அவரது தொழில்நுட்பத் தலைவர் மற்றும் தேசிய தாவரவியல் பூங்காவின் இயக்குநர், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் அடங்குவர்.

இக்குழுவினர் பலதடவைகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இறுதியாக இந்த பகுதில் 5ஜி சிக்னல்கள் இல்லை என்று அறிவித்தனர். 

இப்பகுதியில் கதிர்வீச்சு உலக சுகாதார அமைப்பின் வரம்புகளை விட மிகக் குறைவாக உள்ளது, மேலும் தற்போதுள்ள 2G, 3G அல்லது 4G கவரேஜிலிருந்து எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று தாவரவியல் வல்லுநர்கள் தெரிவித்தனர். 

இருப்பினும் இந்த பகுதியில் செல்போன் பயன்பாட்டை குறைக்க அக்குழுவினர் வலியுறுத்தினர். ஏற்கனவே இங்கே செல்போன் பயன்படுத்தக் கூடாது என்ற அறிவிப்புப் பலகை பயணிகளால் கண்டுகொள்ளப்படுவதில்லை. 

புதிய தளிர்கள் வெளிப்படும் போதி மரம்

இப்பொழுது அரசின் உயர்மட்ட நிபுணர் குழுவின் அறிவிப்பை அடுத்து அனைவரும் நிம்மதி கொண்டுள்ளனர். இங்கு புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகள் இந்த அறிவிப்பை வரவேற்று மகிழ்ந்துள்ளனர். 

இப்புனித போதி மரத்தில் புதிய இளம் தளிர் இலைகள் பச்சை வண்ணத்தில் துளிர் விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுளளது. 

தொடர்புடைய பதிவுகள் :

அமேசான் மழைக்காடுகளில் எண்ணெய் எடுக்க நிரந்தர தடை - இயற்கையை மதித்து வாக்களித்த ஈக்வடார் நாட்டு மக்க...
விண்வெளியை கதிர்வீச்சால் நிரப்பும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள்!
வெப்பமா? குளிரா? செக்ஸ் உணர்வை அதிகரிக்க எந்த சூழல் பொருத்தமானது..?! 
Autism Meaning in Tamil
இந்தியாவில் காணாமல் போன பெண்கள் மற்றும் சிறுமிகளின் அதிர்ச்சியளிக்கும் எண்ணிக்கை! வெறும் எண்களாக பார...
கலவர பூமியாக மாறி இருக்கும் பிரான்ஸ்:  அழிக்கப்படும் வணிக நிறுவனங்கள்!
RIP Meaning in Tamil
இந்திரா காந்தி கொலைக் காட்சிப்படம் 'குற்றமல்ல': கனடா
உலக மக்கள் தொகையில் பாதி பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்தான்! 21 வருடங்களாக செய்யப்பட்ட ஆராய்ச்சி சொ...
பெண் ஏன் அடிமையானாள்..?
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *