fbpx
LOADING

Type to search

இந்தியா இலங்கை வர்த்தகம்

கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு 12 வருடங்கள் கால அவகாசம் அளித்தது இந்தியா.

செய்தி சுருக்கம்:

இலங்கை அரசு கடந்த 70 ஆண்டுகளில் என்றுமில்லாத அளவில் தற்போது அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது, அந்நாட்டின் மொத்த கடன் தொகையான 7.1 பில்லியன் டாலர்கள் அளவிலான கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் தடுமாறி வருகிறது. இந்த கடன் தொகையில் சீனாவிற்கு மட்டும் 3 பில்லியன் டாலர்கள் தர வேண்டும், பாரிஸ் கிளப் மற்றும் இந்தியாவிற்கு முறையே 2.4 மற்றும் 1.6 பில்லியன் டாலர்கள் அளவிலான தொகையும் திருப்பிச் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.

ECGC (Export Credit Guarantee Corporation) நிறுவனத்தில் இந்திய கிளையில் தலைமை பொறுப்பு வகிக்கும் அதன் நிர்வாக இயக்குநர் M. Senthil Nathan கூறிய தகவலின்படி, இந்திய அரசு தனது கடன்களை திருப்பி செலுத்த இலங்கைக்கு 12 வருடங்கள் கால அவகாசம் அளித்துள்ளது, இதன் மூலமாக இலங்கை தற்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் சிக்கல்களில் இருந்து எளிதில் மீண்டு வர ஒரு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

இலங்கையின் தற்போதைய திருப்பி செலுத்த இயலாத கடன் தொகையின் அளவு மொத்தம் 7.1 பில்லியன் டாலர்கள் உள்ளது, இந்த மொத்த தொகையில் சீனாவிற்கு 3 பில்லியன் டாலர்களும், பாரிஸ் கிளப் அமைப்பிற்கு 2.4 பில்லியன் டாலர்களும், இந்தியாவிற்கு 1.6 பில்லியன் டாலர்களும் திருப்பி அளிக்க வேண்டிய நிலையில் இலங்கை உள்ளது. சுதந்திரம் அடைந்த பின்னர் இந்த 70 ஆண்டுகளில் தற்போது தான் மிக அதிகமான அரசியல் கலவரங்களாலும், பொருளாதார நெருக்கடிகளாலும் மீண்டுவர இயலாமல் இலங்கை அரசு சிக்கித்தவிக்கிறது.

IMF (International Monetory Fund) எனப்படும் சர்வதேச நிதி ஆணையத்திடம் இலங்கை அரசின் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகிறது, IMF இலங்கையின் நிதி நிலையையும், குடிமக்களின் முன்னேற்ற நடவடிக்கைகளை சீர் செய்யவும் அளிக்கப்போகும் நிதியுதவி கூடிய விரைவில் வரும் எனவும், அதன்பிறகு பொருளாதாரமும், காலசூழ்நிலையும் சீரானவுடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் எங்கள் கடன் தொகையை இலங்கையிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், வழக்கமாக மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் திரும்பி வரக்கூடிய கடனானது தற்போது பத்து முதல் பனிரெண்டு ஆண்டுகள் கழித்து திரும்பி வரும் நிலையில் உள்ளது எனவும், இந்த கால அவகாசம் தற்சமயம் இலங்கைக்கு இன்றியமையாத தேவையாகும் எனவும் தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் கடன்தொகை மீதான வட்டி விகிதமும் குறைக்கப்படும்.

தற்போதைய நிதி நெருக்கடிகள், பணவீக்க மாறுபாடு மற்றும் உற்பத்தி குறைவு ஆகிய காரணங்களினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ரஷ்யா உக்ரைன் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளும் இந்த நெருக்கடி உருவாக காரணமாக பார்க்கப்படுகிறது. இலங்கை அரசிற்கு ஐந்து அல்லது ஆறு வருடங்கள் கால அவகாசம் கிடைத்தால் அவர்களின் தற்போதைய சிக்கல்களை சீர் செய்து விரைவில் முன்னேற்றத்தை அடைந்து அதன்மூலம் சர்வதேச சந்தையில் இலங்கையின் தாக்கம் முன்போலவே நல்ல விதத்தில் உயரும் எனவும் செந்தில்நாதன் தெரிவித்தார்.

இதே ஆண்டின் ஆரம்ப மாதங்களில் இலங்கை அரசு அதன் பொருளாதார சரிவிலிருந்து மீள்வதற்காகவும், சேதமடைந்த நாட்டின் கட்டுமானங்களை சீர் செய்து கொள்வதற்கும் மேலும் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் IMF மூன்று பில்லியன் டாலர்களை ஒதுக்கி இலங்கை அரசிற்கு கடனாக வழங்க ஒப்புதல் அளித்திருந்தது. அந்த நிதியிலிருந்து முதல் தவணையாக 333 மில்லியன் டாலர்கள் உடனடியாக ஒதுக்கப்பட்டு இன்னும் நான்கு வருடங்களில் அனைத்து நெருக்கடிகளையும் சரி செய்வதற்கு IMF ஒப்புதல் அளித்துள்ளது.

செந்தில்நாதன் மேலும் அளித்த தகவல்களின் படி, ECGC அமைப்பினால் நிர்வகிக்கப்படும் (National Export Insurance Account) NEIA விற்கு இதுவரை 4500 கோடி ரூபாய் மதிப்பிலான இன்சூரன்ஸ் காப்பீட்டு தொகையை கோரி உலக நாடுகளின் ஏற்றுமதியாளர்களின் claim கள் வந்துள்ளன, கோவிட் முடக்கத்தாலும், ரஷ்யா உக்ரைன் போரினாலும் மிகுந்த பாதிப்பை அடைந்து, பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள Srilanka, Zambia, Suriname மற்றும் Ghana போன்ற சிறுநாடுகளின் ஏற்றுமதியாளர்கள் தாங்கள் அடைந்த நஷ்டங்களை ஈடுசெய்ய இந்த இன்சூரன்ஸ் தொகையினை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

தற்போது குறிப்பிடத்தக்க வகையில் இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருகிறது, இதற்கு காரணம் சமீபத்தில் இலங்கை அரசு இறக்குமதி செய்யும் 286 பொருட்களின் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தியதே ஆகும், இதற்கு முன்னதாக கடல் உணவு, எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் இசைக்கருவிகள் போன்ற 3200 வகையான பொருட்களின் மீது இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது இலங்கை அரசு. தற்போது அதில் 286 பொருட்களின் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

கடந்த மே மாத நிலவரப்படி, இலங்கை அரசு பொருளாதார சரிவிலிருந்து மீள்வதற்கு உகந்த முறையில் சீரமைக்கப்பட்ட மாற்றங்களினால், 17 மாத வரவு செலவு தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பானது 26% உயர்ந்து 3.5 பில்லியன் டாலர்களாக தற்போது உள்ளது. இதற்கு முக்கிய வருவாய் ஆதாரமாக இருப்பவை சுற்றுலா பயணிகளின் வருகையும் மற்றும் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதால் கிடைக்கும் வட்டியும் ஆகும்.

இதற்கு முன்னதாக இந்தியா இலங்கைக்கு ஒரு பில்லியன் டாலர் அளவிலான கடன் மீதான வட்டியை ஒருவருடம் தள்ளுபடி செய்து அறிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அதேபோல சென்ற ஆண்டின் துவக்கத்தில் இலங்கை கடும் பொருளாதார சரிவை சந்தித்து நெருக்கடியில் இருந்த சமயத்தில் இந்தியா வழங்கிய 4 பில்லியன் டாலர் அளவிலான அவசரகால உதவித்தொகைக்கு வட்டியை ஒரு வருடத்திற்கு தள்ளுபடி செய்து அறிவித்தது, அது இந்த வருட மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் தற்போது கடன் தொகையை திருப்பி செலுத்த 12 வருடங்கள் கால அவகாசத்தை நீட்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

பின்னணி:

அரசியலில் நிகழ்ந்த மாற்றங்களினாலும், உள்நாட்டு கலவரங்களாலும் மிகவும் மோசமடைந்த இலங்கையின் நிதி நிலையை சீராக்க பல நாடுகளும் முன்வந்துள்ளன. கடன் வட்டி விகிதங்கள் குறைப்பு, கடன் திருப்பி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு, IMF இன் நிதியுதவி என்பன போன்ற பல உதவிகள் இலங்கை அரசும், மக்களும் மீண்டு வர உதவும் வகையில் மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. இந்தியா தனது கடன் தவணைகளை 12 வருடங்களுக்குள் திருப்பி தந்தால் போதுமானது என்று கூறியுள்ளது, சர்வதேச நிதி ஆணையம் இலங்கை பொருளாதாரமும், இலங்கை மக்கள் வாழ்வும் சீராக வேண்டுமென்ற நோக்கத்துடன் தனது முதல் தவணையை கடனாக வழங்கியுள்ளது.

இத்தகைய உதவிகளாலும், தளர்வுகாலாலும் சிறிது ஆசுவாசம் அடைந்து கொண்டுள்ள இலங்கை அரசு, தனது இறக்குமதி பொருட்களின் மீதான தடைகளையும் கட்டுப்பாடுகளையும் தளர்தியதன் மூலமாக வருவாய் இழப்பை சரி செய்துள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் வருவாய் அதிகரிக்கும் என தெரிகிறது. சுற்றுலா துறையில் சிறப்பான விரைவு நடவடிக்கைகள் மூலம் வளர்ச்சிகளை செய்து அதன் மூலமாக வருவாயை பெருக்கவும் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது. கூடிய விரைவில் அனைத்து சிக்கல்களும் முடிவுக்கு வந்து இலங்கை மீண்டும் உலகின் அழகான தேசமாக மிளிர வேண்டும் என்பதே இங்கு பலரது எதிர்பார்ப்பு.

தொடர்புடைய பதிவுகள் :

டெல்லி - சான்பிரான்சிஸ்கோ ஏர் இந்தியா விமானம் என்ஜின் கோளாறு காரணமாக ரஷ்யாவில் தரை இறங்கியது.
சமூகப் பொருளாதாரச் சமத்துவமின்மை: வரலாறு சொல்வதென்ன?
இந்தியாவில் அனைத்தும் நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருக்கின்றனவா..?
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் திருப்பதி பாலாஜி கோயில்கள்! பான்-இந்தியா கடவுளாகும் வெங்கடாஜலபதி!!
இலங்கைத் தமிழரான சங்கரி சந்திரனுக்கு ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த மைல்ஸ் பிராங்கிளின் இலக்கிய விருது
இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்
நுரையீரல் பிரச்சினைகளுக்குத் தீர்வு இலைக் காய்கறிகளைச் சாப்பிடுவதே! புதிய ஆய்வு முடிவு!
தமிழர்களின் தாயக நிலத்தில் இருந்து பௌத்த சின்னங்களை அகற்ற மோடியிடம் தமிழர்கள் கோரிக்கை!
பிபிசி நிகழ்ச்சிகளை இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது அமேசான்
புதிய மேப் விவகாரம், சீனாவிற்கு ஏன் இந்த வேலை?
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *