fbpx
LOADING

Type to search

இலங்கை பல்பொருள் வர்த்தகம்

சீனாவின் Sinopec நிறுவனம் இலங்கையில் தன்னுடைய எரிபொருள் விநியோகத்தை விரைவில் துவங்கவுள்ளது – இலங்கை அரசுடன் ஒப்பந்தம்.

செய்தி சுருக்கம்:

இலங்கையில் வாகன எரிபொருள் நிரப்பும் நிலையங்களை Sinopec நிறுவனம் அமைத்துக் கொள்ள அனுமதி அளித்து கடந்த வெள்ளிக்கிழமை (14-07-2023), இலங்கையின் (Board of Investments -BOI) முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பும் Sinopec Energy Lanka Pvt Limited என்கிற இலங்கையின் Sinopec கிளை நிறுவனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த முடிவு செய்துள்ளனர்.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் Sinopec நிறுவனம் இலங்கையில் 100 மில்லியன் US டாலர்களை பெட்ரோலிய பொருட்கள் சில்லறை விற்பனை துறையில் முதற்கட்டமாக முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலமாக பெட்ரோலிய மூலப்பொருட்கள் இறக்குமதி, பெட்ரோலிய பொருட்கள் சேமிப்புக் கிடங்கு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விற்பனை செய்தல் வரையிலான மூன்றடுக்கு திட்டங்களுக்கான நடைமுறை ஏற்பாடுகளை விரைவில் Sinopec துவங்கப்பட உள்ளதாக தகவல்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

Board of Investment – BOI அளித்துள்ள தகவலின்படி இலங்கையின் அரசு நிறுவனமான பெட்ரோலியம் கார்ப்பரேசன் மேற்பார்வையில் தனிநபர்கள் நடத்திக் கொண்டிருந்த 150 பெட்ரோலிய பொருட்கள் சில்லறை விற்பனை மையங்கள் Sinopec வசம் ஒப்படைக்கப்பட உள்ளது, மேலும் புதிதாக 50 இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களின் விற்பனை மையங்களை அமைத்துக்கொள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் Sinopec நிறுவனத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தமானது 20 வருட குத்தகை காலத்தை கொண்டதாகவும், Sinopec Energy Lanka நிறுவனத்தின் மேற்பார்வையில், இலங்கையில் BOI வகுத்துள்ள முதலீட்டு விதி எண் 17 இன் பரிந்துரைப்படி இந்த திட்டம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் Sinopec நிறுவனம் இலங்கையில் பலதரப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்து கொள்ள முடியும், அவற்றில் முக்கியமானதாக 92 மற்றும் 95 ரக Octane பெட்ரோல், 500 PPM மற்றும் 10CO PPM ரக டீசல், ஜெட் என்ஜின்களுக்கான ஒயிட் பெட்ரோல் மற்றும் சாதா ரக பெட்ரோல் டீசல் வகைகள்.

மேலும், இத்திட்டத்தின் சிறப்பம்சமாக பல புதிய முயற்சிகளை இணைத்துள்ளனர், அதாவது பெட்ரோல் விற்பனை மையங்களில் வாடிக்கையாளர்கள் தேவை சார்ந்த சில சேவைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளனர். அவை இலவச வாகன கழுவுமிடம், வாகனங்கள் பழுதுபார்க்கும் வசதி, இணையதள பிரவுசிங் பாயிண்ட், ATM மற்றும் உணவு விடுதிகள் போன்றவற்றை கொண்டிருக்கும்.

Sinopec நிறுவனமானது இலங்கையின் மாற்று எரிசக்தி துறைகளிலும் தனது காலை ஊன்றி விட முடிவு செய்துள்ளது. சோலார் தகடுகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் Photovoltaic பிளான்ட், மின்சார வாகன சார்ஜிங் மையங்கள், பேட்டரி மாற்றும் மையங்கள் அமைத்திடவும், மற்றும் வருங்காலத்தில் இலங்கையின் மாற்று எரிசக்தி, மாற்று எரிபொருள் தேவைக்கான அனைத்து மூலப்பொருட்களையும் இலங்கையில் சந்தை படுத்திட Sinopec திட்டமிட்டுள்ளது.

கடந்த மே மாதம் இலங்கையின் எரிசக்தி துறை (Energy Ministry) உடன் Sinopec நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், தற்போது போட்டுக்கொண்ட ஒப்பந்தம் முழுக்க முழுக்க பெட்ரோலிய பொருட்களின் சில்லறை விற்பனை மையங்களின் மீதான முதலீட்டை மட்டுமே சார்ந்த ஒப்பந்தம் எனவும் BOI வலியுறுத்தி கூறியுள்ளது.

பின்னணி:

Sinopec நிறுவனமானது சீனாவில் மிகப்பெரிய அளவில் எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்து உலக சந்தையில் விநியோகம் செய்யக்கூடிய உலகளாவிய சப்ளையர் நிறுவனம் ஆகும். இது சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிபொருள் உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். மேலும், இது மிகப்பெரிய பெட்ரோலிய மூலப்பொருட்கள் சுத்திகரிப்பு செய்யக்கூடிய ஆலையாகவும் உள்ளது, உலகின் மூன்றாவது மிகப்பெரிய கெமிக்கல் நிறுவனம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

மேலும், உலகம் முழுவதிலும் மிக அதிகமான எரிபொருள் சில்லறை விற்பனை மையங்களை வைத்துள்ள நிறுவனங்களில் Sinopec இரண்டாவது பெரிய நிறுவனமாகும். பெட்ரோலிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் அமைப்பதில் ஆர்வம் காட்டும் இந்நிறுவனம் தற்போது விரைவிலேயே 200 புதிய மையங்களை Sinopec பிராண்ட் அடையாளங்களுடன் இலங்கையில் திறக்கவுள்ளது. அதன் மொத்த சில்லறை விற்பனை மையங்களின் எண்ணிக்கையில் விரைவில் 200 கூடவுள்ளது.

Fortune நிறுவனத்தின் மூலம் வருடாவருடம் தேர்ந்தெடுக்கப்படும் உலகின் முதல் 500 சக்திவாய்ந்த நிறுவனங்களின் பட்டியலில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஐந்தாவது இடத்தை பிடித்திருந்தது இந்த Sinopec நிறுவனம்.

இந்த முதலீடுகளை கொண்டு இலங்கை அரசு அதன் பொருளாதார நெருக்கடிகளை ஓரளவு சமாளித்து விரைவில் மீண்டு வர திட்டங்களை வகுத்துள்ளது. இந்த வார இறுதியில் இந்தியாவுடன் நிகழ்த்தவுள்ள பேச்சுவார்த்தை மேலும் சில முதலீடுகளை ஈர்க்கும் என தெரிகிறது.

தொடர்புடைய பதிவுகள் :

இலங்கை அரசியலில் வலுவிழக்கும் புத்த பிக்குகள்! பலவீனமான அத்தியாயத்தின் தொடக்கம்!!
ஸ்பாட்டிஃபை செயலியில் ருசிகரத் தகவல்; இசையை விற்கிறதா நிறுவனம்?
அதிகம் போலிச் செய்திகளை பகிர்பவர்கள் யார்? ஆய்வு முடிவு தெரிவிப்பது என்ன?
Dude Tamil Meaning
ஓவியம் வரைவது எப்படி..?
‘AI டெக்னாலஜியால் தேர்தல் மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பு ஆட்டம் காணப்போகிறது!’ - பில் கேட்ஸ் எச்சரிக்கை...
செவ்வாய் கிரகம் கடலால் சூழப்பட்டிருந்ததா..? செவ்வாயில் உயிர்கள் உள்ளனவா..? இக்கிரகத்திலுள்ள நிலச்சரி...
Lying Tamil Meaning 
கூகுள் ஏன் தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்கிறது?பின்னணி என்ன?
வந்தே விட்டன டிரைவரில்லா டாக்சிகள்! கலிபோர்னியாவில் அறிமுகப்படுத்தப்படும் ரோபோடாக்சிகள்…!!
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *