fbpx
LOADING

Type to search

பல்பொருள்

Since Tamil Meaning

| தமிழில் எளிதான அர்த்தம்

Since meaning in Tamil: இக்கட்டுரையில் ‘Since’ என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் தமிழில் அதன் ‘இணைச்சொற்கள்’ (Synonyms) மற்றும் ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms) சொற்களுடன் எளிதான எடுத்துக்காட்டுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

Since உச்சரிப்பு= சின்ஸ்

Since meaning in Tamil

Since, குறிப்பிடப்பட்ட நேரம் மற்றும் பரிசீலனையில் உள்ள நேரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இருப்பதை குறிக்கும். கடந்த காலத்திலிருந்து பரிசீலிக்கப்படும் காலம் வரை நேரத்தை குறிக்கும், பொதுவாக தற்போது நடக்கும் காலமாகும். ‘அந்த காரணத்திற்காக’, ‘ஏனெனில்’ என்பதை குறிக்கும். ‘அதற்கும்’, ‘இன்றும் இடையில்’, ‘முன்பு’, என்பதை குறிக்கும். 

Since, என்பது ஒரு Preposition முன்னிடைச்சொல், Conjunction இடைச்சொல், and an Adverb வினையுரிச்சொல் ஆகும்.

Since தமிழ் பொருள்

 1. குறிப்பிடப்பட்ட நேரம், முதற்கொண்டே
 2. ஏனெனில்
 3. முன்பு
 4. இருந்து
 5. அதன்பிறகு, இருந்து இதுவரை
 6. தொடங்கி

Since (Preposition)

 1. ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திலிருந்து இன்னொரு குறிப்பிட்ட கால கட்டம் வரை குறிப்பிட்டு சொல்ல Since, பயன்படுகிறது.

Examples உதாரணத்திற்கு

1. English: I haven’t seen my friends since 2020, due to the pandemic.

Tamil: தொற்றுநோய் காரணமாக 2020 முதல் எனது நண்பர்களைப் பார்க்கவில்லை.

2. English: It has been raining like this since yesterday.

Tamil: நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

3. English: You don’t seem to have been well since yesterday.

Tamil: நேற்றிலிருந்து உனக்கு உடம்பு சரியில்லை போலிருக்கிறது.

4. English: My Cousin is in the US since 2006, they even got the permanent Citizenship there.

Tamil: எனது உறவினர் 2006 முதல் அமெரிக்காவில் இருக்கிறார், அவர்களுக்கு நிரந்தர குடியுரிமையும் கிடைத்தது.

5. English: Since you left, I have been thinking about you.

Tamil: நீ போனதிலிருந்து உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

Since (Conjuction)

 1. கடந்த காலத்திலிருந்து நிகழ் காலம் வரை கூற பயன்படுகிறது, பொதுவாக தற்போது வரை நிகழ்ந்துயிருக்கும் சம்பவத்தை கூற பயன்படும்.
 2. அந்த காரணத்திற்காக இந்த சம்பவம் நடந்தது; ஏனெனில் இந்த சம்பவம் நடந்தது என்று குறிப்பிட்டு சொல்ல ‘Since’, இங்கு பயன்படுகிறது.

Examples உதாரணத்திற்கு

1. English: Ever since I was a child, i used to like this song.

Tamil: சின்ன வயசுல இருந்தே இந்தப் பாட்டு எனக்குப் பிடிக்கும்.

2. English: Now they own two cars since their son went for a job.

Tamil: மகன் வேலைக்குச் சென்றதால் இப்போது இரண்டு கார் வைத்திருக்கிறார்கள்.

3. English: Since he was angry, he refused to hear her explanation.

Tamil: அவர் கோபமாக இருந்ததால், அவரது விளக்கத்தை கேட்க மறுத்துவிட்டார்.

4. English: It’s been so long since we visited this place.

Tamil: நாங்கள் இந்த இடத்திற்குச் சென்று இவ்வளவு நாட்கள் ஆகிறது.

5. English: He is talking non-stop since we started from his place, leaving the others in the conversation.

Tamil: நாங்கள் அவரவர் இடத்தில் இருந்து ஆரம்பித்ததில் இருந்து, மற்றவர்களை உரையாடலில் விட்டுவிட்டு அவர் இடைவிடாமல் பேசி வருகிறார்.

Since ( Adverb)

 1. கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் இடையில் நடந்தது, மற்றும் ‘முன்பு’ நடந்த வற்றை குறிப்பிடுவது ஆகும்.

Example உதாரணத்திற்கு

1. English: They haven’t met since that incident that happened 10 years ago.  

Tamil: 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்திற்கு பிறகு அவர்கள் சந்திக்கவில்லை.

2. English: He bought this car after his first year of job, since then he goes to office in car only. 

Tamil: அவர் தனது முதல் ஆண்டு வேலைக்குப் பிறகு இந்த காரை வாங்கினார், அதன் பிறகு அவர் காரில் மட்டுமே அலுவலகத்திற்கு செல்கிறார்.

3. English: I am very much afraid of dogs, ever since one bit me when I was a kid.

Tamil: நான் சிறுவயதில் ஒரு நாய் என்னைக் கடித்தது முதல் எனக்கு நாய்கள் என்றால் மிகவும் பயம்.

‘Since Synonyms-antonyms
‘Since’ என்பதன் ஒத்த (Synonyms) சொற்கள் பின்வருமாறு.

 1. Because
 2. As
 3. Considering
 4. Given that
 5. Being that
 6. Seeing that
 7. After all 

‘Since’ என்பதன் எதிர்ச்சொற்கள் (Antonyms) பின்வருமாறு.

 1. Even though
 2. Despite the fact
 3. In spite of being
 4. However
 5. Even if
 6. Though
 7. Yet. 

தொடர்புடைய பதிவுகள் :

இந்தியாவின் உள்நாட்டில் தயாராகும் நீண்டதூர நிலப்பரப்பு ஏவுகணை! 400 கி.மீ தூரத்தில் விமானங்கள் மற்றும...
தென்கொரியாவில் தடை செய்யப்படும் நாய் இறைச்சி உற்பத்தி! பல நூற்றாண்டு பழக்கத்திற்கு கொரியாவில் எதிர்ப...
வாரன்பஃபெட்பங்குச்சந்தையில்எப்படிமுதலீடுசெய்கிறார்?
Nephew in Tamil Meaning
உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க உடலுறவு அவசியமா? நெருக்கமும் உடலுறவும் ஒன்றா..? வித்தியாசத்தைத் த...
ஆளுநரின் தேனீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிக்கும் : மு.க.ஸ்டாலின்! நீட் தேர்வில் ஆளுநரின் நிலைப்பாட...
இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ளும் இலங்கை! இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் எல...
காட்டுத் தேனீக்கள் மனித இனத்திற்கு அத்தியாவசியத் தேவை..! காரணங்கள் என்ன..?
மனித உடலில் மெல்லக் கலக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்! உங்கள் மூளைக்குள்ளும் செல்லும் பிளாஸ்டிக் க...
உங்கள் கீ பேட் சத்தத்தை வைத்தே உங்கள் பாஸ்வேர்டுகளைத் திருடும் AI தொழில்நுட்பம்! வலைதளவாசிகளே எச்சரி...
Tags:
முன்னைய பதிவு
அடுத்த பதிவு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Next Up