
சிப்ளிங் என்ற சொல்லை இப்போதெல்லாம் பல இடங்களில் கேட்கிறோம். நண்பர்களுக்கிடையிலான உரையாடல்கள், பள்ளி, கல்லூரி விரிவுரைகள், கதைகள், கட்டுரைகள், யூட்யூப் வீடியோக்கள், எஃப்.எம். வானொலிகள் என்று ஏராளமானோர் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.
உண்மையில்இந்தச்சொல்நெடுங்காலமாகநம்முடையபேச்சில்பரவலாகஇடம்பெற்றஒன்றுஇல்லை. அதேநேரம், இதுநமக்குமிகவும்புதியஒன்றும்இல்லை. முன்புநமக்குப்பழக்கமானஒருவிஷயத்தைப்புதியவடிவத்தில்கேட்கிறோம், அவ்வளவுதான்.
சிப்ளிங்என்றசொல்லின்தமிழ்அர்த்தத்தை, பொருளைஇந்தக்கட்டுரையில்தெரிந்துகொள்வோம்.
குடும்பஅமைப்பு
இந்தியாவில் முன்பெல்லாம் ஒவ்வொரு தம்பதியருக்கும் பல பிள்ளைகள் இருந்தார்கள். அப்போது மனித ஆற்றல் மிகுதியாகத் தேவைப்பட்டது. வீட்டிலும் வெளியிலும் கூடுதல் ஆற்றலைக் கொண்டுவருகிறவர்கள் நிலைமையை நன்கு சமாளிக்க இயன்றது. அதனால், நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொள்வது தேவைப்பட்டது.
அதன்பிறகு, மக்கள்தொகைப் பிரச்சனை காரணமாகக் குழந்தைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. ஒரு வீட்டுக்கு இரண்டு குழந்தைகள் போதும் என்று தொடங்கி, ஒரு குழந்தை என்ற நிலை வந்துவிட்டது. இந்த வரலாறு சிப்ளிங் என்ற சொல்லின் பின்னணியைப் புரிந்துகொள்ள முக்கியமாகிறது. ஏனெனில், சிப்ளிங் என்பது உடன்பிறந்த ஒருவரை அதாவது, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை போன்ற ஒருவரைக் குறிக்கிற பொதுவான சொல்லாக இருக்கிறது. தங்களுடைய பெற்றோருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்கள்தான் சிப்ளிங் கொண்டவர்கள்.
இன்னொருசொல்எதற்கு?
அண்ணன், தம்பி என்பதுபோன்ற சொற்கள் இருக்கிற நிலையில் இதற்கு இன்னொரு சோல் எதற்கு என்ற கேள்வி எழலாம். Gender Neutral எனப்படுகிற பாலினச் சமநிலை கொண்ட சொற்களுக்கான தேவையைப் புரிந்துகொண்டால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது எளிது.
ஒருவர் ஒரு கட்சிக்குத் தலைமை தாங்குகிறார் என்றால், அவர்ஆண்என்றால்தலைவன்என்றும்பெண்என்றால்தலைவிஎன்றும்குறிப்பிடுகிறவழக்கம்இருந்தது. இதுபோல்நடிகன், நடிகை, ஆசிரியன், ஆசிரியைஎன்றுபலஎடுத்துக்காட்டுகளைச்சொல்லலாம். இந்தச்சொற்கள்ஆண்பால்தனி, பெண்பால்தனிஎன்றுஅமைவதால்ஒருகுறிப்பிட்டபணியைஒருகுறிப்பிட்டபாலினத்துடன்இணைப்பதுபோல்அமைந்துவிடுகின்றன. அதனால், இப்போதெல்லாம்இந்தச்சொற்களுக்குப்பதில்பொதுவாகத்தலைவர், நடிகர், ஆசிரியர்என்பதுபோன்றசொற்களைப்பயன்படுத்துகிறார்கள்.
இந்தப்போக்கைஆங்கிலத்திலும்காணலாம். எடுத்துக்காட்டாக, Chairman என்றசொல்லில்உள்ள ‘man’ என்றபகுதிஆணைக்குறிக்கிறது. அதனால்அதை Chairperson எனமாற்றிஎழுதுகிறார்கள்.
இதுபோல்தான்அண்ணன், அக்காபோன்றசொற்கள்ஆண்பால், பெண்பால்வேறுபாட்டைக்கொண்டுவருவதால்சிப்ளிங்என்றசொல்பயன்படுத்தப்படுகிறது. இதுஆணுக்கும்பெண்ணுக்கும்பொருந்தும். அதனால்அண்ணன், தங்கைஆகியஇருவரைக்கூடசிப்ளிங்ஸ்என்றுஅழைக்கலாம்.
சிப்ளிங்என்பதைத்தமிழில்எப்படிஅழைக்கலாம்?
அடிப்படையில் சிப்ளிங் என்பது ஒருவருடன் பிறந்தவரைக் குறிக்கிறது. அதனால், தமிழில் ‘உடன்பிறப்பு’ அல்லது ‘உடன்பிறந்தவர்’ என்றசொல்லால்சிப்ளிங்கைஅழைக்கலாம். எடுத்துக்காட்டாக, ‘அவருடையஉடன்பிறப்புஅமெரிக்காவில்இருக்கிறார்’, ‘அந்தநிறுவனத்தின்இயக்குநர்கள்மூவரும்உடன்பிறந்தோர்’.
புதியசிந்தனைகள், புதியசொற்கள்
மாறுகின்ற உலகச் சிந்தனையை மக்கள் பயன்படுத்தும் சொற்கள் பிரதிபலிக்கின்றன. அவ்வகையில் சிப்ளிங், உடன்பிறப்பு, உடன்பிறந்தோர்ஆகியசொற்கள்இன்றையசூழ்நிலையைநன்குகாண்பிக்கின்றன. நாம்அவற்றைப்பொருத்தமாகப்பயன்படுத்துவோம்.