உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க உடலுறவு அவசியமா? நெருக்கமும் உடலுறவும் ஒன்றா..? வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்…

உங்கள் துணையுடன் இணக்கமாக இருக்கவும் உறவில் நெருங்கி இருக்கவும் உடலுறவு ஒன்றுதான் ஒரே வழி என்று நீங்கள் கருதுகின்றீர்களா..? ஆரோக்கியமான பிணைப்புக்கு செக்ஸ் மட்டுமே காரணம் என்று நம்புகின்றீர்களா..? உங்கள் ஜோடியுடன் ஆரோக்கியமான மற்றும் வலுவான பிணைப்பை உருவாக்க உதவும் நான்கு நிலைகள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்..
செக்ஸ் மற்றும் நெருக்கம் (Intimacy):
செக்ஸ் மற்றும் நெருக்கம் பெரும்பாலும் வெவ்வேறு அர்த்தத்தை அளிக்கும் சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டு சொற்களும் முற்றிலும் வேறுபட்டவை என்பதும் உண்மைதான். உடலுறவு என்பது உடலால் தொடர்பு கொள்வதைப் பற்றியது என்றாலும், நெருக்கம் என்பது உடலால் இணைவதன் எல்லைகளைத் தாண்டிச் செல்கிறது. ஆரோக்கியமான உறவை வளர்க்க உதவும் வேறு எதையும் விட இது சிறந்தது.
இரண்டு சொற்களும் தரும் அர்த்தங்கள் வேறு..
செக்ஸ் மற்றும் நெருக்கம் இரண்டும் வெவ்வேறு சொற்கள். உடல் உறவு என்பது நெருக்கத்தின் ஒரு பகுதியாகும், ஆனால் நெருக்கம் என்ற சொல் மேலும் அர்தங்களை உள்ளடக்கியது. இது ஜோடிகள் ஒருவருக்கொருவர் அணுக்கமாக இருப்பதையும் புரிதலோடு இருப்பதையும் குறிக்கிறது.
உடலுறவு உங்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் தரும். இருப்பினும், நெருக்கம் என்பது ஒரு உணர்ச்சித் தொடர்பை ஜோடிகளுக்குள் உருவாக்குகிறது. இது உறவுகளில் உள்ளவர்களை உள்ளடக்கமாகவும், பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உணர வைக்கிறது.
உடலுறவு உண்மையில் உறவை உருவாக்குகிறதா?
இல்லை. முன்பின் அறிமுகமில்லாத இருவர்கூட உடலுறவில் ஈடுபட முடியும். உடலுறவு உண்மையில் எந்த அன்னியோன்யத்தையும் தனியாக உருவாக்குவதில்லை.
செக்ஸ் என்பது நெருக்கத்தின் ஒரு பகுதிதான். உடலுறவு நெருக்கம் இரண்டு நபர்களை நெருக்கமாக கொண்டு வரக்கூடும். ஆனால் அது மட்டும் ஒரு உறவை உருவாக்க முடியாது. காதலர்களிடையே நெருக்கத்தை அதிகரிக்க மட்டுமே உடலுறவு உதவலாம்.
நெருக்கத்தின் 4 நிலைகள் என்ன?
நெருக்கத்தில் நான்கு நிலைகள் உள்ளன
பாலியல் நெருக்கம்: இது உடலுறவைக் குறிக்கிறது
உணர்ச்சி நெருக்கம்:
உடல் நெருக்கம்:
ஆன்ம நெருக்கம்:
இரண்டு பேர் ஒரே மாதிரியாக சிந்திக்கும்போதுஆன்ம நெருக்கம் அடையப்படும். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் உணர்கிறார்கள் மற்றும் ஒன்றாக நேரத்தை செலவிட விரும்புகிறார்கள்.
எந்தவொரு ஆரோக்கியமான உறவுக்கும், உங்களுக்கு நான்கு நிலைகளிலும் நெருக்கம் இருந்தால், நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தலாம்.
நெருக்கத்தை விட செக்ஸ் சிறந்ததா?
நெருக்கத்தை அடைய உடலுறவு அவசியமில்லை என்பதை பல தம்பதிகள் நம்ப மாட்டார்கள். செக்ஸ் மற்றும் நெருக்கம் ஆகியவற்றின் வரையறை கூட ஒருவருக்கொருவர் வேறுபடலாம்.
செக்ஸ் என்பது ஒருவரோடு நெருங்கும் செயல் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். செக்ஸ் இருவருக்கும் இடையில் நெருக்கத்தை உருவாக்க உதவுகிறது மற்றும் பாலியல் இன்பத்தை அடைய உதவுகிறது. அவ்வளவுதான். அதில் நீடித்த உறவுக்கான வாய்ப்புகள் எதுவுமில்லை. முன்பின் அறிமுகமில்லாத ஒருவருடன் கூட இந்த இன்பத்தை ஒருவர் அடையலாம்.
பாலியல் மற்றும் நெருக்கத்தைப் பற்றிக் குழப்பிக்கொள்வதற்குப் பதிலாக, தம்பதிகள் ஒருவருக்கொருவர் நெருங்கி வரவேண்டும். மற்றவர் என்ன நினைப்பார் என்று கவலைப்படாமல் அவர்கள் விருப்பு வெறுப்புகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நிறைவாக ஒரு வார்த்தை!
உடலுறவு என்பது உணவில் சேர்க்கும் உப்பைப் போன்றது. அது இல்லாவிட்டால் பெரிய குறையாகத் தெரியும். சரியான அளவில் சேர்க்கும்போது உணவை அது மிகவும் ருசியானதாக்கும். ஆனால் ஜோடிகளுக்குள் இருக்கும் நெருக்கம் என்பது அந்த உணவைப் போன்றது. அதில் உப்பு, உறைப்பு, இனிப்பு என்று அனைத்து சுவையும் இருக்க வேண்டியது. அது உயிர்வாழ ஆதாரமானது.
உறவில் நெருக்கமே நீடித்த நிலையான உறவுகளுக்கு அடிப்படை. அதில் உடலுறவென்பது இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.