fbpx
LOADING

Type to search

உலகம் தெரிவு பல்பொருள் பொழுது போக்கு

எப்படிப்பட்டவர்கள் தங்களுக்குள் ஈர்க்கப்படுகிறார்கள்? புதிய டேட்டிங் ஆப்கள் சொல்வதென்ன?!

எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கப்படுகின்றனவா? ஆதி மனிதன் காலம் தொட்டே இந்த குழப்பம் மனித இனத்தில் இருந்துவருகிறது. ஆண் பெண்ணிடையே ஈர்ப்பு அரும்புவதற்கு எந்த அம்சம் காரணமாக அமைகிறது? ஒரே தன்மையுடையவர்கள் ஈர்க்கப்படுகின்றனரா? இல்லை ஒரே மாதிரி உள்ளவர்கள் நெருக்கமாகின்றார்களா? 

குணாதிசியங்களில் எதிர் துருவங்கள் ஈர்க்கப்படலாம்!

எல்லா காலத்திலும் இளம் தலைமுறையினர் பதில் தேடத்துடிக்கும் கேள்வி இது. திரைப்படங்களில்கூட அமைதியான பெண், முரடான கோபமான ஆண் மீது காதல் கொள்வதுபோல காட்டப்படும். கலகலப்பான, அதிகம் பேசக்கூடிய பெண்ணானவள் அவள் வட்டத்தில் அமைதியான அதிகம் பேசாத ஆணால் ஈர்க்கப்படுவதை காணக்கூடும்.  

குணாதிசியங்களில் எதிரெதிர் துருவங்களில் இருப்பவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள் என்பது ஓரளவிற்கு ஒத்துக்கொள்ளக் கூடியதுதான். பேசிப் பழகி ஒருவரது குணாதிசயத்தைத் தெரிந்துகொள்வதற்கு சற்று நாட்கள் ஆகலாம். இன்றைய அதிவேகமான உலகத்தில் அதற்கெல்லாம் நமக்கு அவகாசமில்லை. 

வேகமான யுகத்தில் விரைவான தேர்வு முறைகள்!

இன்றைய யுகத்தில் நம் இளசுகள் எல்லோரும் டேட்டிங் ஆப்புகளையே அதிகம் பயன்படுத்தி தங்கள் இணையைத் தேடுகின்றனர். இவ்வாறான டேட்டிங் ஆப்புகளில் ஒரு பெண்ணோ அல்லது ஆணோ எத்தகைய எதிர்பாலினத்தாரால்  ஈர்க்கப்படுகின்றனர்? பார்த்தவுடன் பத்திக்கொள்ளும் அம்சமாக ஒரு பெண்ணிலோ அல்லது ஆணிலோ இருப்பது என்ன? 

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் எவல்யூஷன் மற்றும் மனித நடத்தையில் துறை நடத்திய ஒரு ஆய்வில் இதற்கான தெரிந்துள்ளது. டேட்டிங் ஆப்புகளில் நாம் ஒருவரை பார்க்கிறோம். அவரால் ஈர்க்கப்படும்போது அவரது புகைப்படத்தை வலது பக்கத்தில் தள்ளுகிறோம். எந்த ஈர்ப்பும் இல்லாத முகத்தைப் பார்க்கையில் இடது புறம் தள்ளிவிருகிறோம். இனி அந்த முகத்தை நாம் பார்க்கப்போவதில்லை. 

நொடி நேரத்தில் நிகழும் இந்த டேட்டிங் ஆப் தேர்வுகள் எந்த அடிப்படையில் நடக்கிறது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

முகம் மற்றும் உடல் அமைப்பைப் பொறுத்தவரை ஒத்த துருவங்களே ஈர்க்கின்றன!!

ஒரே புவியியல் அமைப்பு மற்றும் இனக்குழுவைச் சேர்ந்த எதிர்பாலினத்தவரை நாம் ஈர்ப்புடையவராக கருதுகிறோமாம். அதிலும் தங்களைப் போலவே உருவ ஒற்றுமை கொண்டவர்களை நாம் அதிகம் ஈர்ப்புடையவராக நினைக்கிறோமாம். 

அதிலும் குறிப்பாக ஒரேமாதிரியான முக அமைப்பு கொண்டவர்கள், இனக்குழுக்கள் வேறாக இருந்தாலும் அதிகம் ஈர்க்கப்படுகின்றார்களாம். 

நம்பகத்தன்மை மற்றும் ஒத்துப்போதல்

நம்மைப் போலவே தோற்றம் உடையவர்களை நாம் நம்பக்கூடியவர்கள் என்றும் நம்மோடு அதிகம் ஒத்துப்போகக்கூடியவர் என்றும் நம் உள்ளுணர்வு நினைக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

Iஇந்த தன்மைக்கு ஒரு பெயர் உள்ளது: “டோப்பல்பேங்கர்ஸ்.” இது கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தோற்றத்திற்கான ஜெர்மன் வார்த்தையான doppelganger என்ற பதத்தில் இருந்து பிறந்தது. 

உடன் பிறந்தவர்கள் நம்மை ஈர்ப்பதில்லையே..ஏன்?

உங்கள் உடன் பிறந்தவர்கள் ஈர்க்கக் கூடியவர்களாக இருக்கின்றார்களா என்று கேட்டால் அனைவரும் இல்லை என்றே சொல்லக்கூடும். பெரும்பாலானவர்கள் சற்றே அசூசையுடன் இல்லை என்பர். இதற்கு உயிரியல் ரீதியான நமது வாழ்க்கை முறைதான் காரணம் என்கின்றனர். 

பல நூறு ஆண்டுகளாகவே நாம் நம் உடன்பிறந்தவர்களை பாலியல் ரீதியாக பார்ப்பதை தவிர்த்துவந்ததன் பலனாக இப்போது நமது உடன் பிறந்தவர்கள் நம்மைப் போலவே இருப்பினும் நமக்கு ஈர்ப்புடையவர்களாக இருப்பதில்லை. 

ஆய்வு முடிவு இறுதியாகச் சொல்வதென்ன?

உடல் தோற்றம் என்று வரும்போது எதிரெதிர் துருவங்கள் ஈர்க்காது என்பதை ஆய்வில் கண்டறிந்திருக்கின்றார்கள். அதிகமும் ஒத்த தோற்றம் கொண்டவர்களே தங்களுக்குள் ஈர்க்கப்படுகின்றனர். 

அடுத்த முறை டேட்டிங் ஆப் அல்லது இணையதளம் மூலம் ஸ்க்ரோலிங் செய்யும் போது, ​​தோற்றத்திற்கு அப்பால் சென்று ஒருவரின் சுயவிவரத்தைப் படிக்க கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். திடீரென்று சராசரியாகத் தோற்றமளிக்கும் நபர், அவர்கள் எப்படிப்பட்டவர்கள்  என்பதைக் கண்டறியும் போது, ​​அவர்கள் மிகவும் சுவாரஸ்யமானவர்களாக  மாறலாம்.

தோற்றத்தை மட்டும் கொண்டு ஒரு துணையை தேர்ந்தெடுப்பதைவிட  ஒருவரை – முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்காவது – புரிந்துகொண்டு ஈர்க்கப்படுவது நலம்பயக்கும். 

தொடர்புடைய பதிவுகள் :

உயிரினப் பேரழிவு ஏற்பட உண்மையான காரணம் என்ன? ஆய்வு தரும் தகவல்
பங்குச் சந்தை முதலீட்டில் வெற்றி ரகசியம் என்ன?
முதுமையை இனிமையாக்க முத்தான நான்கு வழிகள்
இலங்கை அரசியலில் வலுவிழக்கும் புத்த பிக்குகள்! பலவீனமான அத்தியாயத்தின் தொடக்கம்!!
எண்பதிலும் ஆசை வரும்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் சீனாவின் உயர்மட்ட தூதர் சந்திப்பு: இந்திய-சீன உறவு பலப்படுமா...
சீனப் படகில் இருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது
கட்டுரைஎழுதுவதுஎப்படி?
Resume in Tamil
வெகுஜன புதைகுழிகள் தொடர்பான நம்பகமான விசாரணையை வலியுறுத்தி இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிக...
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *