உலக நாடுகளில் மிகவேகமாக உயரும் அரிசியின் விலை – இதற்கு முக்கிய காரணங்களாக “சீரற்ற பருவமழையால் பாதிக்கும் விளைச்சல்” மற்றும் “இந்திய அரசின் குறைந்தபட்ச நெல் கொள்முதல் விலை நிர்ணயம்” ஆகியவை உள்ளன.

செய்தி சுருக்கம்:
உலக சந்தையில் அரிசி ஏற்றுமதி செய்யும் முதன்மையான நாடுகளின் பட்டியலில் உள்ள இந்தியா ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யக்கூடிய அரிசியின் அளவானது உலக நாடுகளின் அரிசி ஏற்றுமதி அளவில் 40% ஆகும். கடந்த 2022 ல் மட்டும் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி அளவு 56 மில்லியன் டன்கள். ஆனால் இந்த ஆண்டு உற்பத்தி அந்த அளவு ஏற்றுமதி இலக்கை அடைய முடியாத அளவு உள்ளது, ஏனெனில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததாலும், கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வரும் ரஷ்ய உக்ரைன் போரினால் ஏற்பட்ட போக்குவரத்து தடைகளாலும் குறைவான உற்பத்தி இலக்கையே எட்ட முடியும். அதன் காரணமாக ஏற்றுமதி அளவு குறைந்துள்ளது, எனவே உலக நாடுகள் அனைத்தும் அரிசியின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது. அரிசி சார்ந்த உணவுகளின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது.
உலக சந்தையில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவு அரிசியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது, இது மேலும் உயர வாய்ப்புள்ளது என கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்திய அரசு, விவசாயிகளுக்கான குறைந்தபட்ச அரிசி கொள்முதல் விலையை சமீபத்தில் உயர்த்தியதன் மூலம் அரிசி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதேபோல El Nino என்றழைக்கப்படும் பருவமழை கால மாற்றம் அரிசி விளைச்சலில் பாதிப்பை ஏற்படுத்தும், இது மிக அதிக அளவில் அரிசி உற்பத்தியாளர்களின் விளைச்சலை பாதிக்கும், இதனால் அரிசிக்கான மாற்று உணவுப் பொருட்களின் விலையும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் விரைவில் உயரும் என தெரிய வருகிறது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
உலக சந்தையின் அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு மட்டுமே 40% ஆகும். கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்திய ஏற்றுமதி செய்த அரிசியின் அளவு 56 மில்லியன் டன்கள், இந்த ஆண்டின் ஏற்றுமதி, விளைச்சல் குறைந்ததால் குறைந்துள்ளது. மேலும், சீரற்ற வானிலையும் விளைச்சலை பாதிக்க போவதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன. பல நாடுகளின் வாணிபமும் விவசாயமும் ரஷ்ய உக்ரைன் போரினால் பாதிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவின் அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்க(REA – Rice Exporters Association) நிர்வாகியான B.V. Krishna Rao அவர்கள் Reuters செய்தியாளர்களிடம் “மிக குறைந்த விலையில் அரிசி சப்ளை செய்யும் நாடாக இதுவரை இருந்துவந்த இந்தியா, இனி அரிசி விலையை உலக சந்தையில் உயர்த்தும், இதற்கு காரணம் இந்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச நெல் கொள்முதல் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகும், இதனால் இந்திய அரிசியின் விலை சர்வதேச நாடுகளில் உயருமென தெரிவிக்கின்றார், இதன் காரணமாக மற்ற அரிசி உற்பத்தி செய்யும் நாடுகளும் தங்கள் அரிசியின் விலையை உயர்த்தக்கூடும்<span;>” என தெரிவித்தார்.
உலக மக்கள் தொகையில் சுமார் 3 பில்லியன் மக்களின் பிரதான உணவாக அரிசி உள்ளது, அரிசியை விளைவிப்பதில் நீர்வளம் மிகுந்த ஆசிய நாடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன, உலகின் மொத்த உற்பத்தியில் 90% அரிசி ஆசிய நாடுகளில் உற்பத்தியாகிறது. தற்போது நிலவி வரும் பருவமழை மாறுபாட்டினால் இந்த வருடம் மழைப்பொழிவு குறைவாக தான் இருக்கும். இந்த El Nino எனப்படும் சீரற்ற பருவகால மாற்றம் அரிசி விளைச்சலில் பாதிப்பை உண்டாக்கும். தற்போது அரிசியின் விலை உலக சந்தையில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது, இனி இந்த வருட உற்பத்தியும் பாதிக்கப்பட்டால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது என உணவு மற்றும் விவசாய அமைப்புகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் USDA (U.S Department of Agriculture) வெளியிட்டுள்ள அறிக்கை நிலவரப்படி இந்த ஆண்டு அரிசி உற்பத்தியில் பருவமழை சரியாக இருக்கும் பட்சத்தில் பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய ஆறு நாடுகளின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
இந்தியாவின் அரிசி ஏற்றுமதி செய்யும் Olam நிறுவனத்தின் Vice President ஆக இருக்கும் Nitin Gupta கூறுகையில் “இந்த El Nino வினால் ஏற்படும் பருவகால மாற்றம் குறிப்பிட்ட ஒரு நாட்டின் உற்பத்தியை மட்டும் பாதிக்கப் போவதில்லை, இது இந்த ஆண்டு அனைத்து நாடுகளின் அரிசி உற்பத்தியையும் பாதிக்கும்” என்கிறார். மேலும், சென்ற மாதம் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார நெல் கொள்முதல் விலையை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது, இதனால் அரிசியின் கொள்முதல் விலை தற்போது 7 மடங்கு அதிகமாகி இருக்கிறது, எனவே இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகின்ற அரிசியின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவு 9 மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளில் ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் விலை உயர்ந்து வருகிறது. ஆனால், இந்தியாவின் இந்த தீடீர் விலை உயர்வுக்கு காரணம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் அரிசியின் அடிப்படை விலை மாற்றமே, இந்த ஆண்டு நடக்கவுள்ள மாநில தேர்தல்களையும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மத்திய தேர்தலையும் கருத்தில் கொண்டு விவசாயிகளின் வாக்கை கவர்வதற்காக இந்த விலை உயர்வு அரசால் செய்யப்பட்டதாக தெரிகிறது.
சமீப காலங்களில் முட்டை, பால், சர்க்கரை மற்றும் மாமிச உணவுகளின் விலை உலகம் முழுவதும் பலமடங்கு அதிகரித்துள்ளது, எனவே உற்பத்தி செய்யும் நாடுகள் ஏற்றுமதியை குறைக்கும் பட்சத்தில் உள்நாட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும். சில உலக வர்த்தக அமைப்புகள் ஆசிய நாடுகளில் இவ்வாண்டு அரிசி விளைச்சல் El Nino காரணமாக குறைய வாய்ப்புள்ளதாகவும், அனைத்து முதன்மை உற்பத்தியாளர்களையும் இது பாதிக்கும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், Gupta கூறும்போது “முக்கிய நாடுகளின் அரிசி ஏற்றுமதியின் அளவு குறைந்துள்ளதால் உலக நாடுகளில் அரிசியின் விலையேற்றம் அதிகரித்து காணப்படுகிறது, இந்நிலையில் உற்பத்தியின் அளவும் குறையுமெனில் அரிசியின் விலை புதிய உச்சத்தை தொடவும் வாய்ப்புள்ளது” என்கிறார்.
உலக நாடுகளின் அரிசி கையிருப்பு நிலவரம் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு மிக குறைந்து உள்ளது,<span;> 2023-24 ஆண்டின் இறுதி நிலவரப்படி 170.2 மில்லியன் டன்கள் இருப்பு உள்ளது. உலகெங்கும் சமீப காலத்தில் உயர்ந்துள்ள அரிசியின் தேவைப்பாடு காரணமாக உலகின் மிகப்பெரும் அரிசி உற்பத்தி செய்யும் நாடுகளான சீனாவும் இந்தியாவும் கூட அரிசி கையிருப்பு வைக்கும் அளவினை குறைத்துள்ளன.
ஐந்து மடங்கு விலை உயரக்கூடும்:
பருவமழை பொய்த்து அனைத்து நாடுகளிலும் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டு மிகவும் விளைச்சல் குறையுமானால், இந்த ஆண்டு உலக நாடுகளில் அரிசியின் விலை சுமார் ஐந்து மடங்கு அல்லது அதற்கும் மேலும் விலை கூட வாய்ப்புள்ளது என்றும், சீரற்ற பருவமழை இவாண்டு அனைத்து ஆசிய நாடுகளின் அரிசி உற்பத்தியை பாதிக்கும் என்றும், சராசரியை விட குறைந்த அளவே உற்பத்தி இலக்கை எட்ட முடியும் என்றும் டில்லியை சேர்ந்த அரிசி விற்பனையாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அரிசி ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது பெரிய நாடான தாய்லாந்து, மே மாதத்தில் பொழிய வேண்டிய மழையின் அளவு 26% அளவுக்கும் குறைந்து போனதால் தங்கள் நாட்டு விவசாயிகளை வறட்சியை தாங்கும் ஒரு குறிப்பிட்ட அரிசி ரகத்தை மட்டும் பயிரிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
<span;>இந்தியாவில் நெல்சாகுபடியின் இரண்டாம் கட்ட நடவுப்பணிகள் நவம்பர் மாதத்தில் தான் துவங்கும், முதல் கட்டமாக நடவு செய்யப்பட்ட பயிர்களின் மகசூல் கடந்த ஆண்டை விட 26% சரிந்துள்ளது, இந்த ஆண்டு வழக்கமான பருவமழையில் 8% குறைவான மழைப்பொழிவை மட்டுமே எதிர்பார்க்க முடியும் என அரசின் தரவுகள் தெளிவாக கூறுகின்றன.
<span;><span;>Shanghai JC Intelligence இல் Analyst ஆக இருக்கும் Rosa Wang கூறும்போது, அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் சைனாவில் பருவகாலத்திற்கு உகந்த பயிர்களை அந்த நேரத்தில் மட்டுமே விளைவிக்க நினைக்காமல், தேவை அதிகமான அரிசி போன்ற பயிர்களை அதிகளவில் முன்கூட்டியே உற்பத்தி செய்து இருப்பு வைத்து கொள்வோம் எனவும், விளைச்சல் குறைந்த காலங்களில் அந்த இருப்பை பயன்படுத்திக் கொண்டு மேலும் ஏற்றுமதிக்கு அதிக தேவை ஏற்படாமல் பார்த்து கொள்வதாகவும் கூறினார்.
<span;><span;>இந்தியாவை தற்போது ஆளும் கட்சிக்கு உணவுப்பொருட்களின் விலைவாசி மீது எப்போதுமே அக்கறை உண்டு, உள்நாட்டு தேவையை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற திட்டத்தோடு கடந்த ஆண்டில் கோதுமை ஏற்றுமதியை தடை செய்தது, அதேபோல இந்த ஆண்டு அரிசி மற்றும் சர்க்கரை ஏற்றுமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டு விலைவாசி கட்டுக்குள் இருக்கும் என்று நம்புகின்றனர். இவ்வகையில் உள்நாட்டின் விலையுயர்வை கட்டுப்படுத்தும் முனைப்போடு செயல்படும் நரேந்திர மோடியின் BJP ஆட்சி வரவுள்ள பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு மெது மெதுவாக உயர்ந்து வரும் உள்நாட்டு விலைவாசியை கட்டுப்படுத்த மேலும் சில கட்டுப்பாடுகளை உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் விதிக்கும் எனத்தெரிகிறது.
<span;><span;>புது டில்லியை சேர்ந்த தரகர் ஒருவர் கூறும்போது “மோடியின் அரசாங்கம் கோதுமையின் விலையை நிர்ணயம் செய்வதில் காட்ட வேண்டிய முனைப்பை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகளை விதிப்பதில் காட்டுகிறது” என்கிறார். கட்டுப்பாடுகளை தளர்த்த அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறார். இந்தியாவின் அரிசி ஏற்றுமதி செய்வதில் உள்ள இந்த புதிய விதிகள் மற்ற நாடுகளின் அரிசி விநியோகத்தை பாதிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உலக வர்த்தக அமைப்பிலுள்ள சிங்கப்பூரை சேர்ந்த தரகர் கூறும்போது “உலகில் உணவுப்பொருள் விநியோகம் மிகவும் குறைந்துள்ளது, இந்தியாவின் இந்த ஏற்றுமதி அளவில் ஏற்பட்ட மாற்றம் உலகம் முழுவதும் உணவுப்பொருட்களின் விலையை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்” என்கிறார். மியான்மர், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் ஏற்றுமதி அளவானது 3 மில்லியன் மெட்ரிக் டன்னில் இருந்து 4 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயர்ந்தால் மட்டுமே இந்த விநியோக சங்கிலியில் தடை எதுவும் உருவாக்காமல் இருக்க செய்யும் என்றும் கூறினார்.
<span;><span;>விலைவாசி உயரும் இந்த சமயங்களில் சரக்குகளை இருப்பு வைத்துக் கொள்வதும் சிக்கலை உருவாக்கும்.
<span;><span;>இந்தியாவின் Satyam Balajee என்ற ஏற்றுமதி நிறுவன மேலாளர் Himanshu Agarwal கூறும்போது, பணவீக்கம் குறைவாக உள்ள ஆப்பிரிக்க நாடுகளின் அரிசி இறக்குமதி அளவில் இந்த வருடம் தொய்வு ஏற்பட்டுள்ளது, இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாடுகள்<span;><span;><span;> பாரம்பரிய அரிசி உற்பத்தி நாடான<span;><span;> வியட்நாமிலிருந்து தேவைக்கு அதிகமான அரிசியை இறக்குமதி செய்து சரக்குகளை இருப்பு வைத்துள்ளனர் என்கிறார்.
<span;><span;>கடந்த மாதம் இந்தோனேசிய அரசு இந்திய அரசுடன் இணைந்து ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது, அதன்படி இவ்வாண்டு பருவமழை பொய்த்து விளைச்சல் சரிந்து உள்நாட்டு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுமானால் 1 மில்லியன் டன் அரிசியை இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்து கொள்வதற்கான ஒப்பந்தம் அது. இந்தோனேசியா அரசு எப்போதும் தங்கள் அண்டை நாடுகளான தாய்லாந்து, வியட்நாம் இல் இருந்து மட்டுமே அரிசி இறக்குமதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
<span;><span;>சிங்கப்பூரை சேர்ந்த தரகர் கூறும்போது, “இதுவரை வாங்கும் நபர்களின் சந்தையாக இருந்த அரிசி, பருவமழையால் விளைச்சல் பாதிப்பு அடைந்தால் அது இனிமேல் விற்பனையாளர்களின் சந்தையாக மாறும்” என்றார். வாங்குபவர் நிர்ணயம் செய்த விலைக்கு விற்கப்பட்ட அரிசி இனி விற்பவர் சொல்லும் விலைக்கு வாங்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை.
பின்னணி:
உலக நாடுகள் அனைத்திலும் அரிசி மற்றும் அரிசி சார்ந்த உணவுப்பொருட்களின் விலையும், பிற உணவுப்பொருட்களின் விலையும் வேகமாக உயர்ந்து வருவதை தவிர்க்கும் வகையில் அனைத்து நாடுகளுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
உபயோகம் அதிகமாக இருக்கும் போது உற்பத்தியும் அதற்கேற்றவாறு உயர வேண்டும். இவ்வாண்டு El Nino (பருவகால மாறுபாடு) காரணமாக அரிசி உற்பத்தி செய்யும் நாடுகளில் பெருமளவு விளைச்சல் பாதிக்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது. இந்த நிலையை சரிசெய்ய சரக்குகளை இருப்பு வைத்துக் கொள்வதிலும், ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதாலும் உள்நாட்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முயன்று வருகின்றன.
மூன்று பில்லியனுக்கும் மேலான மக்களின் பிரதான உணவாக விளங்கும் அரிசியின் உற்பத்தியில் வீழ்ச்சி நேர்ந்தால் அது மற்ற உணவுப்பொருட்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே பருவமழை சீராக பொழிந்து அரிசி உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளிலும் விளைச்சல் தன்னிறைவை அடைய வேண்டும், அதோடு மட்டும் அல்லாமல் ஏறுமதியையும் அதிகரித்து அரிசி உணவின் தட்டுப்பாட்டை குறைக்க வேண்டும் என்பதே இங்கு அனைத்து அரிசி உபயோகிப்பார்களின் வேண்டுதல் ஆகும்.