fbpx
LOADING

Type to search

இந்தியா

வரும் ஆண்டுகளில் இந்தியாவில் பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் –  ஆய்வு முடிவு!

செய்தி சுருக்கம்:

பீப்பிள்ஸ்  ரிசர்ச்  என்ற அமைப்பு இந்தியாவின் நுகர்வோர்  பொருளாதாரம் மற்றும் குடிமக்களின் வாழ்க்கைச் சூழல் குறித்து நடத்திய ஆய்வில் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் பெரும் பணக்காரக் குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

 கடந்த ஐந்தாண்டுகளில் ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் குடும்பங்களின் எண்ணிக்கை 1.8 மில்லியன் ஆக அதிகரித்துள்ளதாம். இதில் வியப்பு என்னவென்றால்  நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் இந்த பெரும்பணக்காரக் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுதான். 

கிராமங்களில் இந்த வளர்ச்சி 14.2  சதவீதமாகவும் நகரங்களில்10.6  சதவீதமாகவும் உள்ளது.  25 மாநிலங்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 2032 ஆம் ஆண்டுக்குள் இத்தகைய பெரும்பணக்கார குடும்பங்களின் எண்ணிக்கை 9.1 மில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் வணிக ரீதியாக செய்யப்படும் விவசாயமானது அதிகரித்துள்ளதும் விவசாயம் அல்லாத நடவடிக்கைகளில் கிராமப்புற மக்கள் அதிகம் ஈடுபட்டு இருப்பதும் இந்த வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.  பணப்புழக்கம் அதிகமானதை அடுத்து   வெளிநாட்டு வங்கிகள் மற்றும் முதலீட்டு  ஆலோசனை நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக முதலீடும் வருமானமும் மேலும் அதிகரித்துள்ளது.

2018 முதல் 2022க்கு இடையிலான காலகட்டத்தில் இந்தியா ஒவ்வொரு நாளும் 70 புதிய மில்லியனர்களை உருவாக்கி வந்துள்ளது. இந்தியாவின் நுகர்வு கலாச்சாரம் உச்சத்தை தொட்டிருக்கும் இந்நிலையில் அது முதலீட்டாளர்களுக்கும் தொழில் முனைவோர்களுக்கும் பெரும் வருவாயை ஈட்டித்தந்து இருக்கிறது. 

இது மட்டுமல்லாமல்,  ஆண்டுக்கு 6000 டாலர் முதல் 36,000 டாலர் வரை சம்பாதிக்கும் நடுத்தர வர்க்க மக்கள் தொகையானது மேலும் விரிவடைந்து 2031 ஆம் ஆண்டில் 715 மில்லியன் என்ற எண்ணிக்கையை எட்டும்.  அதே சமயம் ஆண்டுக்கு 1520 டாலருக்கு குறைவாக வருமானம் ஈட்டும் பிரிவினர் பாதியாக குறைந்து 79 மில்லியன் என்ற எண்ணிக்கையிலேயே இருப்பர். 

இந்தியர்களாக நாங்கள் இன்னமும் உழைக்கும் வெறி கொண்ட நடுத்தர மக்களாகவே இருக்கிறோம் எனினும் விரைவாக உயர் நடுத்தர வர்க்கம் என்ற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இப்பொழுது வளர்ந்த நாடுகளாக உள்ள அனைத்தும் இந்த படிநிலைகளைக் கடந்து தற்போதைய நிலையை அடைந்துள்ளனர்.  பணக்கார குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் அதன் மூலம் பணப்புழக்கம் அதிகமடைந்து நடுத்தர மற்றும் ஏழை வர்க்கம் வருமானத்தில் ஏற்றம் கண்டு அவர்கள் நிலை உயரக்கூடும். 

 இந்த பொருளாதார முன்னேற்றத்தின் பலன்களை நாம் முழுமையாக அடைய வேண்டும் எனில் மது மற்றும் போதைப் பழக்கத்தில் இருந்து நம் சமூகம் விடுபட வேண்டியது அவசியமாகும்.  இல்லையெனில் இப்பொழுது வளர்ச்சியாக தோன்றும் இந்த வருமான உயர்வு வெறும் வீக்கம் என்ற நிலையை அடையக் கூடும். 

தொடர்புடைய பதிவுகள் :

சென்னையில் சுந்தர் பிச்சையின் பூர்வீக வீட்டை வாங்கிய தமிழ் நடிகர்
ராக்கெட்டில் ஏறிய தக்காளி விலை, காய்கறிகள் விலையனைத்தும் எக்குத்தப்பாக உயர்கிறது - பருவமழை காலங்கடந்...
சந்திரனின் பார்க்கப்படாத பக்கங்களை வெளியிட்ட சந்திராயன் - 3..! தரையிறங்கும் முன்பே அதகளம்..!!
ஐஐடி மெட்ராஸ் உடன் கைகோர்க்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்! புதிய பாதை ஒன்று திறந்தது!!
சென்னையின் காற்றில் பாதுகாப்பான அளவை விட பல மடங்கு துகள்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்...
அரசுப் பள்ளிகளில் தமிழ்க் கொடை திட்டம்: தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
தமிழால் தலை நிமிர்வோம்! தமிழில் கையோப்பமிடுவோம்!
இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்
காவல்துறையில் புகார் அளிப்பது எப்படி?
புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைத்தாலும் தொடர்ந்து மது அருந்தினால் உயிர் தப்ப முடியாது! ஆய்வாளர்களின்...
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *