fbpx

Resume in Tamil

இந்த விளக்க உரையில் ‘Resume’ என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ்ப் பொருள் மற்றும் தமிழ் மொழியில் அவ்வார்த்தையின் பயன்பாடு, ‘இணைச்சொற்கள்’ (Synonyms) மற்றும் ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms), மேலும் இவற்றுடன் எளிதான எடுத்துக்காட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

‘Resume’ உச்சரிப்பு= ‘Resume’ என்ற எழுத்தாக்கத்தைக் கொண்ட சொல் இரு வேறு உச்சரிப்புகளையும், இரண்டிற்கும் வெவ்வேறு பொருட்களையும் கொண்டுள்ளது. 

உச்சரிப்புகள்: ரெஸ்யூம் அல்லது ரெஸ்யுமே

Resume meaning in Tamil

‘Resume’ என்பதன் அர்த்தம், ஒரு சிரிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்குவது அல்லது தன்னை பற்றிய குறிப்பு – வேலை தேடும் நபர், தன் படிப்பு, முன் அனுபவம் மற்றும் வேலையில் தான் செய்த சாதனைகள் ஆகியவற்றை இட்டு தயார் செய்யும் ஒரு ஆவணம்.

இந்த சொல் ‘noun’ (பெயர், பெயர்ச்சொல்) மற்றும் ‘verb’ (வினைச்சொல்)-ஆக செயல்படுகிறது.

Resume (noun) அல்லது résumé (ரெஸ்யுமே) என்ற பெயர்ச்சொல்லிற்கு பல தமிழ் அர்த்தங்கள் உண்டு. அவை கீழ்வருமாறு:

  • தன்னை பற்றிய குறிப்பு – வேலைவாப்பிற்கும் நேர்காணலுக்கும் பயன் படுத்தப்படுவது. 
  • இதன் நீட்டிக்கப்பட்ட வடிவத்தை கரிகுலம் விட்டே என்று அழைப்பர். 
  • சில அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் ரெஸ்யுமே-விற்கு பதிலாக பயோ டாட்டா-வும் (Bio Data) ஏற்கப்படும்.

Examples (உதாரணங்கள்):

இப்பொழுது இச்ச்சொல்லின் பயன்பாட்டை புரிந்து கொள்ள சில உதாரணங்களை பார்ப்போம்.

1. English: Keep your resume ready. You might be called for an interview anytime.

Tamil: தங்கள் ரெஸ்யுமேவை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். எந்த நேரமும் நேர்காணலுக்கு நீங்கள் அழைக்கப்படலாம்.

2. English: Your resume looks very impressive.

Tamil: தங்கள் ரெஸ்யுமே முத்திரை பதிக்குமாறு உள்ளது. 

3. English: Several factors go into the task of preparing a resume.

Tamil: ரெஸ்யுமே தயார் செய்யும் பணியில் பல முக்கிய விஷயங்கள் உட்படுத்தப்படுகின்றன.

Resume-வின் (Noun) வேறு வகைகள் (other forms) / வைஸி-வெர்ஸா (Vive-Versa):

கரிகுலம் விட்டே – (Curriculum Vitae)

பயோ டாட்டா-வும் – (Bio Data)

Resume (verb) – ரெஸ்யூம் என்ற வினைச்சொல்லிற்கு பல தமிழ் அர்த்தங்கள் உண்டு. அவை கீழ்வருமாறு:

  • மீண்டும் தொடர.
  • மறுதொடக்கம்.
  • ஒரு சிறிய அல்லது நீண்ட தடங்கலுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்.

Examples (உதாரணங்கள்):

இப்பொழுது இச்ச்சொல்லின் பயன்பாட்டை புரிந்து கொள்ள சில உதாரணங்களை பார்ப்போம்.

1. English: “Sorry for the interruption. Service will resume shortly.”

Tamil: தடங்கலுக்கு மன்னிக்கவும். விரைவில் சேவை மீண்டும் தொடங்கும்.

2. English: On Monday, the physical classes resumed in all the schools post Covid situation.

Tamil: கோவிட் நிலைமைக்கு பிறகு, அனைத்து பள்ளிகளிலும் திங்களன்று நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கின.

3. English: Electricity supply has resumed post power cut.

Tamil: மின் வெட்டிற்கு பிறகு மின்சார விநியோகம் மீண்டும் தொடங்கிவிட்டது.

இணைச்சொற்கள் (Synonyms for resume – verb):

Continue

Restart

எதிர்ச்சொற்கள் (Antonyms):

Stop

Halt

Standstill

Discontinued

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *