fbpx
LOADING

Type to search

பல்பொருள்

Regret Meaning in Tamil 

English: regret (noun/verb)

Tamil: வருத்தம் (பெயர்ச்சொல்), வருந்து (வினைச்சொல்)

Explanation: 

வருத்தம் என்பது ஒருவர் செய்த அல்லது செய்யத் தவறிய ஏதோவொன்றைப் பற்றிய சோகம், செய்ததற்கு வருத்தப்படுதல், அல்லது செய்யாத ஏமாற்றத்தின் உணர்வு. நாம் அனைவரும் வருத்தத்தை அனுபவித்திருக்கிறோம். யாரையேனும் புண்படுத்தும் கருத்தைச் சொன்ன பிறகோ தீங்கு விளைவிக்கக் விதத்தில் செயல்பட்ட பிறகோ வருத்தம் அடைந்திருக்கிறோம். 

வருத்தத்தின் உளவியலை ஆராய்ந்த விஞ்ஞானிகள், ஒரு ஆச்சரியமான முடிவுக்கு வந்துள்ளனர். நம்மை மிகவும் தொந்தரவு செய்யும் வருத்தங்கள் நாம் செய்த தவறுகள் அல்ல, நாம் செய்யத் தவறிய செயல்கள்தாம் என்பதுதான் அது. 

எடுத்துக்காட்டாக, ஒருவர் இளம்பருவத்தில் சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று முடிவுசெய்திருந்தால், ஒரு வழக்கறிஞராக ஆகவில்லையே என்ற வருத்தத்தோடு முதுமையில் அவர் வாழ நேரலாம். இதுபோல நமது கடந்தகாலச் செயல்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏதும் இல்லாதபோது வருத்தத்தைச் சமாளிப்பது கடினமாகும். 

ஒரு வருத்தத்தை நேர்மறையான விஷயமாக மாற்றுவது சாத்தியமே. நமது வருத்தத்தின் அனுபவத்தை மனதில் கொண்டு சரியான விதமாக நடந்துகொண்டால் எதிர்காலத்தில் அதே போன்ற செயலை நாம் முன்பை விட இன்னும் சிறப்பாகச் செய்யலாம். இப்படிச் செய்தால் வருத்தம் ஒரு கற்றல் கருவியாகப் பயன்படும். எடுத்துக்காட்டாக, ஒருவரது வணிகம் தோல்வியுற்றால், என்ன தவறு நடந்தது என்பதை அவர் பகுப்பாய்வு செய்து என்ன செய்திருக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம். அடுத்தமுறை செயல்களை அவர் வேறுவிதமாகச் செய்து வெற்றி பெறலாம். இப்படிச் செய்யும்போது வருத்தம் ஒருவரது சுயஉணர்வை மேம்படுத்தி அவரை முன்னைவிடச் சிறந்த நபராக ஆக்குகிறது.

Examples: 

  1. எந்த அளவு வருத்தமும் கடந்த காலத்தை மாற்ற முடியாது; எந்த அளவு கவலையும் எதிர்காலத்தை மாற்ற முடியாது. (No amount of regretting can change the past, and no amount of worrying can change the future.)
  2. ரீட்டா தனது குடும்பத்துடன் இருப்பதற்காக தனக்கு முதன்முதலில் கிடைத்த வேலையை ஒத்துக் கொள்ளாததற்காக இப்போது வருந்துகிறாள். (Rita now regrets not accepting her very first job to be with her family.) 
  3. தனக்குப் பரிச்சயமில்லாத ஒரு தொழிலைத் தொடங்குவதற்காகத் தனது மொத்த சேமிப்பையும் முதலீடு செய்ததற்காக அவர் வருந்தினார். (He regretted investing his entire savings to start a business with which he was not familiar.)
  4. அப்பாவுடன் இத்தனை வருடங்கள் பேசாதிருந்ததை எண்ணி அவன் வருந்துவான். (He will regret not having spoken to his father for so many years.)
  5. திருத்துசெயலை ஊக்குவிப்பதால் வருத்தம் என்பது கற்றலுக்கான ஒரு பயனுள்ள கருவியாக விளங்குகிறது. (Regret is an effective tool for learning as it motivates corrective action.)
  6. திருமணம் செய்து கொள்ளுங்கள், நீங்கள் அதற்கு வருந்துவீர்கள்; திருமணம் செய்து கொள்ளாதிருங்கள், நீங்கள் அதற்கும் வருந்துவீர்கள். (Marry, and you will regret it; don’t marry, you will also regret it.) 
  7. அந்த வார்த்தைகளை நான் உச்சரித்த கணத்தில் நான் வருந்தினேன். (I regretted the words the moment I uttered them.)
  8. அவர்கள் தாஜ் மஹாலைப் பார்க்கவில்லை என்பது மட்டுமே அவர்களின் ஒரே வருத்தம். (Their only regret was that they didn’t see the Taj Mahal.)
  9. நாம் செய்த காரியங்களுக்காகப் படும் வருத்தம் காலத்தால் தணிக்கப்படலாம்; நாம் செய்யாத காரியங்களுக்காகப் படும் வருத்தம்தான் தணிக்கப்பட முடியாதது. (Regret for the things we did can be tempered by time; it is regret for the things we did not do that is inconsolable.)
  10. இன்று நான் நேர்மையாக இருக்கிறேன் என்றால், நாளை அதற்கு நான் வருத்தம் அடைந்தால் அது ஒரு விஷயமா என்ன? (If I’m sincere today, what does it matter if I regret it tomorrow?) 

தொடர்புடைய பதிவுகள் :

ஜாதகம் பார்ப்பது எப்படி..?
Electronic Tamil Meaning
உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க உடலுறவு அவசியமா? நெருக்கமும் உடலுறவும் ஒன்றா..? வித்தியாசத்தைத் த...
வாழ்க்கையிலும் பணியிலும் நீங்கள் அதிக திருப்தியை உணர உதவும் 3 புத்தகங்கள் இவை: மகிழ்ச்சி ஆராய்ச்சியா...
இந்தியாவின் எதிர்கட்சிக் கூட்டணி பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
வந்தே விட்டன டிரைவரில்லா டாக்சிகள்! கலிபோர்னியாவில் அறிமுகப்படுத்தப்படும் ரோபோடாக்சிகள்…!!
அதிகம் புரோட்டீன் வேணுமா? பிக்கி சோய் சாப்பிடலாம்
பெண்ணியவாதிகள் அழகு சாதனப் பொருட்களை அதிகம் விரும்புபவர்களா? ஆராய்ச்சி முடிவுகள் சொல்வது என்ன?
Freelancer Meaning in Tamil
கலவர பூமியாக மாறி இருக்கும் பிரான்ஸ்:  அழிக்கப்படும் வணிக நிறுவனங்கள்!
Tags:
முன்னைய பதிவு
அடுத்த பதிவு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Next Up