Reference in Tamil

இந்த விளக்க உரையில் ‘Reference’ என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ்ப் பொருள் மற்றும் தமிழ் மொழியில் அவ்வார்த்தையின் பயன்பாடு, ‘இணைச்சொற்கள்’ (Synonyms) மற்றும் ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms), மேலும் இவற்றுடன் எளிதான எடுத்துக்காட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
‘Reference’ உச்சரிப்பு= ரெஃபெரென்ஸ்
Reference meaning in Tamil
‘Reference’ என்பதன் அர்த்தம், சந்தேகம் வரும்பொழுது பார்க்கும் மூலம், ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது பொருளின் குறிப்பு ஆகும். ஆதாரபூர்வமான ஒரு நபரின் பரிந்துரையையும் “reference” என்று கூறுவர்.
‘Reference’ என்ற சொல் ‘noun’ (பெயர், பெயர்ச்சொல்) ஆகும்.
Reference என்ற பெயர்ச்சொல்லிற்கு பல தமிழ் அர்த்தங்கள் உண்டு. அவை கீழ்வருமாறு:
- குறிப்பு (reference),
- பரிந்துரை செய்யும் செல்வாக்கு மிகுந்த ஒரு நபர் (referred by),
- நாம் படிக்கும் புத்தகம் அல்லது கட்டுரை (reference material),
- ஒரு நிலையான பின்னணியை சார்ந்த குறிப்பு (எழுத்து வடிவத்தில் அல்லது பேச்சு வடிவத்தில்) (with reference to context)
- ஒரு நிகழ்வு அல்லது உரையாடலின் தொடர்பில்
Examples (உதாரணங்கள்):
இப்பொழுது இச்ச்சொல்லின் பயன்பாட்டை புரிந்து கொள்ள சில உதாரணங்களை பார்ப்போம்.
- English: I took reference from that book for the article I wrote.
Tamil: நான் எழுதிய என் கட்டுரைக்கு, அந்த புத்தகத்திலிருந்து குறிப்பு எடுத்தேன் (taken reference from).
- English: With reference to our telephonic conversation, I wish to confirm that all formalities are completed.
Tamil: நம் தொலைபேசி உரையாடலின் குறிப்பில் (with reference to the telecom), அனைத்து சம்பிரதாய தேவைகளும் பூர்த்தி அடைந்தன என்று உறுதிப்படுத்துகிறேன்.
- English: Do you currently require a home loan? Mr. Anand has given your reference for a discussion regarding a home loan.
Tamil: தங்களுக்கு தற்பொழுது வீட்டு கடன் தேவை படுகிறதா? ஆனந்த் அவர்கள் தங்களது தொடர்பு விபரங்களை அளித்துள்ளார் (given your reference).
- English: Keep this image for your reference. If you get any doubts in the future, it might help you in clarifying them.
Tamil: இந்த படத்தை தங்கள் குறிப்பிற்காக (for reference) வைத்துக்கொள்ளுங்கள். வருங்காலத்தில் தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால், இது உங்களுக்கு அவற்றை தெளிவு படுத்த உதவும்.
- English: Please find attached the details for your immediate reference.
Tamil: தங்களது உடனடி குறிப்பிற்காக (for immediate reference) விபரங்களை இணைத்துள்ளேன்.
- English: Miss. Geetha has referred your name for this job opening.
Tamil: இந்த வேலை வாய்ப்பிற்கு செல்வி கீதா தங்களது பெயரை பரிந்துரை செய்த்துள்ளார்
இச்ச்சொல்லின் வேறு வடிவங்கள் (other forms):
Have Referred – பரிந்துரை செய்துள்ளேன்
Referring – பரிந்துரை செய்கிறேன்
Reference to – குறிப்பின் பேரில்
இணைச்சொற்கள் (Synonyms for refer):
Cite
Quote
Recommend
Introduce
எதிர்ச்சொற்கள் (Antonyms):
Blacklist
Criticize