fbpx
LOADING

Type to search

அறிவியல் இந்தியா தெரிவு

வானிலையின் அரிதான நிகழ்வால் இந்தியாவின் வடக்கு பிரதேசங்களில் தொடர் பெருமழை – இது காலநிலை மாறுபாட்டினால் ஏற்பட்டதல்ல என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.

செய்தி சுருக்கம்:

INSAT செயற்கைக்கோள் தற்போதைய வானிலையை எடுத்து அனுப்பியுள்ள புகைப்படங்கள் 2013 இல் கேதர்நாத்தில் பெருமழையை கொட்டித்தீர்த்த “இமாலயன் சுனாமி” என்று பெயர் சூட்டப்பட்ட மேகவெடிப்பு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் மிகவும் ஒத்துப்போகின்றன. அதே போன்றதொரு மேகவெடிப்பு நிகழ்வுதான் தற்போது இந்தியாவின் வட மாநிலங்களில் உருவாகி பெருமழையாக தொடர்ச்சியாக பெய்து வருகிறது.

இதனை இந்தியா டுடே வை சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள், இருவேறு விதமான இடங்களின் தட்பவெப்ப நிலைகளில் உருவான பருவக்காற்றுகள் ஒன்றுடன் ஒன்று இணையும் போது அது பெருமழையை உருவாக்குவதால் பருவமழை பொழிவதில் மாற்றம் ஏற்படுகிறது என்று விவரிக்கின்றனர். இதன் காரணமாக தான் இடைவிடாத பெருமழை இந்தியாவின் வடக்கு பிராந்தியங்களில் தற்போது பெய்து வருகிறது. இப்போது இந்திய வானிலையில் நிகழும் மாற்றங்கள் அனைத்தும் 2013 இல் உத்தரகாண்ட் மாநிலத்தை தாக்கிய இமாலயன் சுனாமி என்ற பெருமழை நிகழ்வை ஒத்துப்போவதாக உள்ளன என்கின்றனர்.

2013 இல் உத்தரகாண்ட் மாநிலத்தில் 200 க்கும் மேற்பட்டோரின் உயிர்களை பறித்தும், கணக்கிலடங்கா சேதாரங்களை ஏற்படுத்தியும் சென்ற இமாலயன் சுனாமி நிகழ்வின் போது இருந்த அதே பயமுறுத்தும் செயற்கைக்கோள் புகைப்படங்களை போலவே தற்போது வட இந்தியாவில் பொழியும் பெருமழைக்கான வானிலையை செயற்கைக்கோள் மூலமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பார்க்கும் போது தெரிவதாக வானியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

சமீபத்தில் வட இந்திய நகரங்களில் ஏற்பட்டுள்ள மேகவெடிப்பு நிகழ்வினால் டெல்லியில் மட்டும் கடந்த ஞாயிறன்று 153மிமீ மழை 24 மணி நேரத்தில் பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது. 1982 க்கு பின்னர் ஜூலை மாதங்களில் ஒரு நாளில் பொழிந்த அதிகபட்ச மழையாக இந்நிகழ்வு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பெருமழைக்கான அபாய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது, இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் அதிவேகமாக பாய்ந்தோடும் என்று எச்சரித்துள்ளனர்.

மேகவெடிப்பு
The Indian Meteorological Department (IMD) எனப்படும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ” இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் பகுதிகளில் மிக அதிகமான மழைப் பொழிவிற்கு காரணமாக கூறுவது, “இருவேறு தட்பவெப்ப நிலையில் உள்ள நிலங்களில் இருந்து உருவாகும் பருவக்காற்றுகள் ஒன்றுடன் மற்றொன்று மோதும் போது இவ்வாறு நிகழும்” என்றும் தற்போது மத்திய தரைக்கடலில் உருவான பருவக்காற்றும் இந்தியாவின் தென்மேற்கு பருவக்காற்றும் இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் சந்தித்து கொண்டுள்ளதால் உருவான காற்றழுத்த மாறுபாட்டினால் இத்தகைய பெரும் மழை பொழிவதாக உறுதிபடுத்தி உள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்றில் வடகிழக்கு ராஜஸ்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்தம் குறைந்து உள்ளது தெரியவந்துள்ளது. அங்கு அதிகமான மழைப் பொழிவினை எதிர்பார்க்கலாம் என்று கூறுகிறது.

மேலும் இந்த மேற்கத்திய பருவக்காற்றுடன் நம் இந்திய பருவக்காற்று இணைந்து உருவான இந்த மேகவெடிப்பு பெருமழை இன்னும் 24 முதல் 36 மணி நேரங்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது. வானிலை மையத்தின் தற்போதைய தகவலின்படி இந்த நிகழ்வு இந்தியாவின் வடமேற்கு பிராந்தியங்களில் மிக அதிகமான மழைப்பொழிவை உண்டாக்கும் என்று தெரிகிறது.

சிம்லாவிலுள்ள வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் சுரேந்தர் பால் கூறும்போது, இம்மாதிரியான பெருமழைக்கு காரணமாக இந்திய பருவமழைகள் இருக்கும், ஆயினும் இந்த பருவக்காற்று மோதலினால் உண்டான மேகவெடிப்பு என்பது அரிதான ஒரு நிகழ்வாகவே இருக்கும். ஏனெனில், மேற்கத்திய பருவக்காற்றுடன் நம் பருவக்காற்று தொடர்பு கொண்டு பெருமழையை உருவாக்கும் போது அந்த மழை பொழியக் கூடிய இடங்களின் அளவு அதிகரிக்க சாத்தியக்கூறுகள் அதிகமாகின்றன. அந்த பருவக்காற்றுகள் இணைந்துள்ள பகுதிகளில் உள்ள அனைத்து மழைமேகங்களும் மழையை பொழிய ஆரம்பிக்கும், இதனால் அதிகமான இடங்களில் பெருமழை ஒரேநேரத்தில் பொழிகிறது என்று விவரித்தார்.

மேற்கத்திய மற்றும் இந்திய பருவமழை காற்றுகள்:
இங்கு மேற்கத்திய பருவக்காற்று என்பது மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகின்ற ஒரு வெப்பமண்டல புயல் அல்லது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஆகும், அங்கு உருவான இந்த காற்றின் போக்கானது Middle East மற்றும் Iran ஆகிய பாலைவன நாடுகளை கடந்து பயணித்து இந்திய நாட்டின் வடகிழக்கு பகுதிகளை வந்தடையும், அப்போது அந்த வெப்பம் ஏறிய காற்று இந்தியாவின் குளிரான வானிலையில் படும்போது மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

மேற்கத்திய பருவக்காற்றுகள் எப்போதும் இந்தியாவின் வடக்கு பகுதிகளில் அதன் தாக்கங்களை ஏற்படுத்தி கொண்டே தான் இருக்கிறது என்றும், இந்தியாவின் வடமேற்கு மாகாணங்களில் மேகங்களால் சூழப்பட்ட நிலையும், மழைப்பொழிவும் நிகழும், சிலசமயங்களில் இமயமலை பகுதிகளில் பனிப்பொழிவு உருவாகவும் இந்த மேற்கத்திய பருவக்காற்று காரணமாக அமைகின்றன.

இதேபோல, இந்தியாவின் பருவக்காற்று என்பது தக்க பருவங்களில் உருவாகும் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழைகளை குறிக்கும். இந்த இரண்டு பருவக்காற்றுகளும் இந்தியாவில் பல பகுதிகளில் மழை பொழிய காரணமாகிறது. குளிர்காலத்தில் உருவாகும் பருவக்காற்று வடகிழக்கு பருவமழையையும், வெயில் காலத்தில் உருவாகும் பருவக்காற்று தென்மேற்கு பருவமழையையும் இந்தியாவிற்கு தருகிறது.

இவ்வாறு, இருவேறு தட்பவெப்பம் கொண்ட நிலப்பரப்பில் இருந்து உருவாகும் பருவக்காற்றுகள் மிக அரிதாக சில சமயங்களில் ஒன்றையொன்று சந்திக்கும் போது அந்த பகுதிகளில் மேகவெடிப்பை உருவாக்கி பெரும் மழைக்கு காரணமாகும். தற்போது மேற்கத்திய பருவக்காற்றும் நம்முடைய தென்மேற்கு பருவக்காற்றும் இணைந்ததன் விளைவே வட இந்திய பகுதிகளில் பெய்யும் பெரு மழைக்கு காரணமாகும்.
இமாலயன் சுனாமி
2013 இல் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பேரழிவுக்கு காரணமாக பல அம்சங்கள் இருந்துள்ளன, அவற்றில் முக்கிய காரணியாக மிக அதிகமாக பொழிந்த பருவமழையை குறிப்பிடுகின்றனர் விஞ்ஞானிகள், இதன் விளைவாக அந்த பகுதியில் உடனடியாக ஏற்பட்ட ஆபத்து மிகுந்த நிகழ்வாக பார்க்கப்படுவது அங்கு இயற்கையாக அமைந்திருக்கும் பனிப்பாறைகள் மிகுந்த ஏரியில் ஏற்பட்ட உடைப்பாகும். இந்த உடைப்பானது திடீரென ஏற்பட்ட பெருமழையால் மட்டுமே ஏற்பட்டு விடவில்லை என்றும், அதற்கு இன்னும் சில ஆழமான, மறைந்திருக்கும் காரணங்களும் உண்டு என தெரிய வந்துள்ளது. இதைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் இந்த பெரு விபத்துக்கு காரணமாக இன்னும் பல சிக்கலான நிகழ்வுகள் பெரும் மழையுடன் கைகோர்த்து கொண்டதே ஆகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், 2013 இல் நிகழ்ந்த அந்த பேரழிவானது பல பாதகமான அம்சங்கள் ஒன்றுகூடியதால் ஏற்பட்ட விளைவு என்றும் கண்டறிந்துள்ளனர். அதாவது, அன்றைய நிலவரப்படி பெய்து கொண்டிருந்த பெரும் மழையுடன் சேர்ந்து எளிதில் உடையக்கூடிய வெதுவெதுப்பான பனிமூட்டமும், காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட குறிப்பிட்ட அளவிலான பனிப்பாறைகள் வெடிப்பும் ஒன்று சேர்ந்ததால் தான் அத்தகைய பேரிடர் நேரிட்டது என்றும் கூறினர்.

இந்த பெருமழையின் உடன் பனிப்பாறைகள் வெடிப்பும் நிகழ்ந்ததால் உருவான வெள்ளப்பெருக்கானது மலை உச்சியிலிருந்து ஆக்ரோஷமாக கீழிறங்கி வந்து கண்ணுக்கெட்டிய தூரங்களில் எல்லாம் அதன் கோர தாண்டவத்தை நிகழ்த்தியது, மிக அதிகமான அளவில் உயிர் மற்றும் பொருள் சேதாரங்களை ஏற்படுத்தி விட்டு சென்றது. அந்த பகுதி மக்களுக்கு இப்படியான ஒரு இயற்கை அச்சுறுத்தல் இதுவரை நிகழ்ந்ததாக நினைவிலில்லை, அப்படியொரு பேரழிவை நிகழ்த்தி விட்டது இமாலயன் சுனாமி. அந்த சமயத்தில் அரிதாக நிகழ்ந்த இந்த பருவக்காற்று மோதலால் உருவான மேகவெடிப்பும் இயற்கையின் குரூர செயலுக்கு உதவிபுரிய கைகோர்த்து கொண்டது தான் அழிவின் உச்சத்திற்கு காரணம்.

அந்த சமயத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த மழையானது இத்தகைய பேரிடர் ஒன்றை உருவாக்கும் என்று உணர்ந்திருக்கவில்லை, அவர்கள் வழக்கம்போல அதிக வெள்ளப்பெருக்கு அபாயம் இந்த பெருமழையால் நிகழக்கூடும் என்று மட்டுமே எதிர்பார்த்தனர், அதனால் இந்தியாவின் வடக்கு மாநிலங்களை சாதாரண எச்சரிக்கை மட்டுமே செய்து இருந்தனர். ஆனால் இமாலயன் சுனாமி 2013 இல் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்த்தி சென்றது பேரழிவுகளை என்றால் அது மிகையாகாது.

தற்போதைய நிலவரப்படியும், வானிலை ஆய்வறிக்கைகளின் அடிப்படையிலும் இந்திய வானிலை ஆய்வு மையம் பின்வரும் இந்திய மாநிலங்களுக்கு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மிக அதிக அளவில் மழைப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த மாநிலங்கள் பட்டியலில் இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாபின் வடக்கு ஓரங்கள் மற்றும் ஹரியானா, உத்திர பிரதேசம், ராஜஸ்தான், இமயமலை பகுதிகள், மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநிலங்கள் அடங்கியுள்ளன.

பின்னணி:

மிக அதிகமான மழைப் பொழிவினால் இந்தியாவின் தலைநகரமும், இமயமலை பகுதிகளும், மணாலி போன்ற சுற்றுலா நகரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மழையினால் உருவான வெள்ளப்பெருக்கில் பல கட்டிடங்களும், வாகனங்களும் நீரில் அடித்து செல்லப்படும் காட்சிகள் இணைய தளங்களில் பரவி வருகின்றன. டெல்லியில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதும், மேலும் மழை தீவிரம் அடையக்கூடும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையும் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. வரலாற்றில் மிக அதிகமான மழை பொழிவை டெல்லி கடந்த ஞாயிறன்று பதிவு செய்தது.

இப்படியே மழை தொடரும் பட்சத்தில் மேலும் பலவிதமான இன்னல்களுக்கு மக்கள் ஆளாவார்கள், இந்தியாவின் வடக்கு மாநிலங்கள் பலவற்றிற்கு பெருமழை பொழியும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் வானிலை குளறுபடியால் ஏற்பட்ட பெருமழை பலத்த சேதாரங்களை உருவாக்கி உள்ளது, மேலும் இன்னும் இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய பதிவுகள் :

Alzheimer's Disease in Tamil
நீண்ட நேரம் திரையைப் பார்ப்பதால் குன்றி நிற்கும் குழந்தைப்பருவம் பற்றிய ஆய்வு சொல்வதென்ன..?!
ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்பட்டு ஆகஸ்ட் 23 அன்று சந்திரனை அடையும்  சந்திராயன் 3..!! இஸ்ரோ தலைவர் அறி...
HIV எப்படி வரும்...?
டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு பெண்களின் உடலுறவு ஆர்வத்தைக் குறைக்கக்கூடும்! உங்களுடையதை அதிகரிப்பது எப்படி...
பொழுதுபோக்குகள் மன அழுத்த அபாயத்தை 30% குறைக்கும்:  புதிய ஆய்வு முடிவு
உடல் பருமன் என்பது ஆரோக்கியக் குறைவே - ஆய்வு முடிவு..!!
இனிப்பதெல்லாம் இனிப்பல்ல! செயற்கை இனிப்பூட்டிகள் புற்றுநோயை உண்டாக்கலாம் - ஆய்வு முடிவு!!
தமிழால் தலை நிமிர்வோம்! தமிழில் கையோப்பமிடுவோம்!
இந்த விலங்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இப்போது அது திரும்...
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *