fbpx
LOADING

Type to search

பல்பொருள்

Quite Meaning in Tamil

இக்கட்டுரையில் ‘Quite’ என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் அர்த்தம், அதன் ‘இணைச்சொற்கள்’ (Synonyms), ‘எதிர்ச்சொற்கள்’ (Antonyms) மற்றும் எளிதான எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

‘Quite’ உச்சரிப்பு= குஐட்

Quite meaning in Tamil

‘Quite’ என்பதன் அர்த்தம், முற்றிலும், மிகவும், மிதமான. 

‘Quite’ என்ற சொல் ‘degree adverb’ (ஒப்பீட்டு பட்ட வினையுரிச்சொல்) ஆக செயல்படுகிறது. 

Quite-(Degree Adverb) தமிழ் பொருள்

மிக / மிகவும்

முற்றிலுமான

முழுவதுமான

மிகுதியான

நன்றான

மிதமான

சிறிது

1. ‘Quite’ என்ற சொல் ஒரு பெயரடை சொல்லுடனோ (Adjective) அல்லது வினையுரிச்சொல்லுடனோ (adverb) இணைந்து வரும்.

2. இந்த சொல் ஒப்பீடு அல்லது degreeயை குறிக்கும்.

3. இந்த சொல்லுக்கு பின்னொட்டு வரும், பெயரடை சொல்லை பொறுத்து, ‘quite’ என்ற இந்த சொல் இரு வேறு அர்த்தங்களை அளிக்கும்.

4. இது ஒரு பெயரடை சொல்லின் தன்மையின் ஒப்பீடை வரையறுத்துக்காட்டும்.

5. ‘Quite என்ற வார்த்தை அனைவரும் பரவலாக பயன் படுத்தும் ஒரு சொல்லாகும். 

6. சில சமயங்களில், உரையாடலில், ‘very’, ‘very much’ போன்ற சொற்கள் சரியாக பொருந்தாத தருணங்களில், ‘quite’ என்ற இந்த சொல் பொருந்தும்.

‘Quite’ என்ற வார்த்தையின் எடுத்துக்காட்டுகள் (Examples) கீழே உள்ளன.

Examples (உதாரணங்கள்):

English: My day went quite well. 

Tamil: என்னுடைய நாள் மிக நன்றாக (quite well) இருந்தது.

English: She danced quite beautifully.

Tamil: அவள் மிக அழகாக (quite beautifully) நடனமாடினாள்.

English: I have quite a lot of pending work to complete.

Tamil: நான் முடிக்க வேண்டிய பற்பல (quite a lot) பணிகள் நிலுவையில் உள்ளன.

English: Your exam marks are quite low.

Tamil: உன் பரீட்சை மதிப்பெண்கள் மிகக்குறைவாக (quite low) உள்ளன.

English: Honest people need quite a bit of courage to face their challenges.

Tamil: நேர்மையான மனிதர்களுக்கு தங்கள் சவால்களை எதிர்கொள்ள மிக்க (quite a bit) தைரியம் தேவை.

English: The stuff in that mall is quite pricey.

Tamil: அந்த வணிக வளாகத்தில் உள்ள பொருட்கள் மிகவும் (quite) விலை உயர்ந்தவை.

English: Quite a few students failed in their exam.

Tamil: சில பல (quite a few) மாணவர்கள் தங்கள் தேர்வில் தோல்வியடைந்தனர்.

English: I am not quite ready yet.

Tamil: நான் இன்னும் முழுவதுமாக தயாராகவில்லை (not quite ready).

English: I am quite doubtful whether your solutions would work well.

Tamil: உங்கள் தீர்வுகள் நன்றாக வேலை செய்யுமா என்று எனக்கு மிகுவும் (quite) சந்தேகமாக உள்ளது.

‘Quite’ மற்ற அர்த்தங்கள்

Quite good= மிகவும் நன்று

Quite cheap= மிகவும் மலிவானது

Not quite right= அவ்வளவு சரி இல்லை

Don’t quite know = அவ்வளவாக தெரியவில்லை

‘Quite’ Synonyms-antonyms

‘Quite’ என்பதன் ஒத்த (Synonyms) சொற்கள் பின்வருமாறு.

முன் கூறியவாறு இந்த சொல்லுக்கு பின்னொட்டு வரும், பெயரடை சொல்லை பொறுத்து, இந்த சொல் இரு வெவ்வேறு அர்த்தங்களை அளிக்கும் என்பதால் இதன் ஒத்த சொற்களும் பல தரப்பட்டிருக்கும்.

very

moderate

fairly

totally 

a little

completely

rather

reasonably

relatively

truly

‘Quite’ என்பதன் எதிர்ச்சொற்கள் (Antonyms) பின்வருமாறு.

incomplete

indefinite

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *