fbpx
LOADING

Type to search

பல்பொருள்

Queries in Tamil 

‘கொரீஸ்’ என்ற ஆங்கிலச் சொல்லின் நேரடியான பொருள் கோரிக்கைகள் அல்லது வினவல்கள் என்பதாகும். இது பன்மையில் உள்ளது. இதன் ஒருமை ‘கொரி’ ஆகும். இவ்வார்த்தைக்கு ஒன்றிக்கும் மேற்பட்ட பயன்பாடுகள் உள்ளன. எந்த அமைப்பில் இவ்வார்த்தை வருகிறதோ, அந்த இடத்தைத் தழுவியே இதன் பொருள் அமையப்பெறும். ஆகையால், இந்த சொல்லின் பொருளை பிழை இன்றி புரிந்துகொள்ள, இது இடம் பெரும் அமைப்பை கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வார்த்தை இடம் பெரும் இடங்கள் பின்வருமாறு:

கணினியை மையமாகக்கொண்டு எழுதப்படும் “programing language” அல்லது கணினியின் மொழியில் ‘கொரி’: 

கணினியின் மொழியில் இந்த ‘கொரி’ என்ற பதத்தை தமிழில் வினவல் என்று கூறலாம். இங்கு, ஒரு தளத்திலிருந்து நமக்குத் தேவையான தகவல் அல்லது விவரத்தை கண்டெடுக்க இந்த வினவலானது பயன்படுகின்றது. 

கணினியின் மொழியில் எழுதப்படும் இந்த கோரிக்கையானது தரவுத்தளதில் உபயோகப்படும் வினவல் மொழியாகவோ (database query language), அல்லது ஒரு தகவலை மீட்டெடுக்கும் வினவல் மொழியாகவோ (information retrieval query language) அமைந்து இருக்கும்.

கணினியை சார்ந்த வினவல் அமைப்பு மொழிகளின் உதாரணங்கள்: எஸ் கியூ எல் (SQL – Structured Query Language), மை எஸ் கியூ எல் (MySQL), சி கியூ எல் (CQL – Contextual Query Language) முதலியன.

மேலும், நாம் தினசரி இணையதளங்களில் ஒரு விவரம் அல்லது சம்பவத்தைப் பற்றி அறிய, தேடல் பட்டியில் உள்ளிடும் தனித்தன்மை வாய்ந்த, முக்கிய வார்த்தைகளும் ஒரு வகையான வினவலே.

ஆங்கில மொழியில் கோரிக்கை:

ஆங்கில மொழியில் உரைக்கும் பொழுதும் நாம் “query” என்ற வார்த்தையை உபயோகிப்பது வழக்கம். அங்கு அதன் அர்த்தம் – சந்தேகம், கேள்வி அல்லது தெளிவுபடுத்துதல் என்பதைக் குறிக்கும்.

வர்த்தக நிறுவனங்கள் நமக்கு அனுப்பும் கடிதங்களிலும், வங்கிக் கணக்கு அல்லது வாகன மற்றும் வீட்டுக் கடன் கணக்கு அறிக்கைகளிலும் இந்த வார்த்தை பெரும்பாலும் பயன் படுவதை நாம் பார்க்கலாம். ஆங்கில மொழியில் கேட்கப்படும் கேள்விகளில் இடம்பெறும் வினவலின் விடையாக, தெளிவான விளக்கங்கள் இருக்கும். இப்பொழுது இந்த வார்தையைக் கொண்ட சில உதாரணத் தொடர்களைப் பார்க்கலாம்:

  1. மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், எங்களைத் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.
  2. இந்த சந்திப்பு இங்கே முடிவடைகிறது. ஏதேனும் கேள்விகள் உள்ளனவா?
  3. எனக்கு ஆவணத்தில் சில சந்தேகங்கள் உள்ளன.
  4. ஒவ்வொரு கேள்வியும் தனியே ஆராயப்படும்.
  5. என் முடிவின் மேல் ஒருவரும் சந்தேகம் எழுப்பவில்லை.
  6. என் கேள்விக்கு இன்னும் நல்ல விளக்கம் தர முடியுமா?

மேற்கண்ட எழுத்து விளக்கம், “query” என்ற ஆங்கிலச் சொல்லின் பயன்பாட்டையம், இடங்களுக்கு தகுந்தாற்போல் வரும் வேறுபாடுகளையும் நன்கு விளக்கி இருக்கும் என்று நம்புகிறோம்.

———————————————-முற்றும்———————————————–

Tags:
முன்னைய பதிவு
அடுத்த பதிவு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Next Up