Possessiveness in Tamil

English: possessiveness
Tamil: மிகைப்பற்றீடுபாடு
Explanation:
மிகைப்பற்றீடுபாடு என்பது ஒரு பொருள் அல்லது நபர் மீது அளவுக்கு அதிகமாக உரிமை பூணும் அல்லது ஆதிக்கம் செலுத்தும் குணம். நாம் அனைவரும் ஓரளவிற்கு மிகைப்பற்றீடுபாட்டை உணர்கிறோம். இது அல்லது இவர் நமக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணமும் பெருமிதமும் கொள்வதைத் தாண்டி, அந்தப் பொருளோ நபரோ தனக்கு மட்டுமே சொந்தம் என்பது போல் நடப்பது மிகைப்பற்றீடுபாடு இருப்பதைக் காட்டும். அந்தப் பொருளை வேறு யாரேனும் தொட்டாலோ அந்த நபர் மற்றவருடன் இருக்கும்போது சற்று எரிச்சலடைவதைத் தாண்டியோ மிகைப்பற்றீடுபாடு சென்றுவிடுகிறது. மிகவும் தீவிரமானால், மிகைப்பற்றீடுபாடு பல விதமான உறவுச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஒரு தீவிரப் பிரச்சினையாக மாறும். பொறாமை கொள்ளுதல், நிந்தித்தல், மனப்பிரமை கொள்ளுதல் அல்லது பின்தொடர்தல் போன்றவை தொடங்கும். மிகைப்பற்றீடுபாடு என்பது அடிப்படையில் ஒருவருக்கு மிகப் பிடித்த அல்லது முக்கியமான பொருளின் அல்லது நபரின் இழப்பைப் பற்றிய பயம்தான். இது பெரும்பாலும் ஒருவருக்கு பாதுகாப்புணர்ச்சி இல்லாதால் உருவாகிறது. வரம்புக்கோட்டு தனிமனிதஇயல்புக் கோளாறின் அறிகுறியாகவும் மிகைப்பற்றீடுபாடு இருக்கலாம்.
Examples:
- என் பெற்றோரின் மிகைப்பற்றீடுபாட்டை நான் இத்தனை காலமாக உணரவில்லை. (I did not realise the possessiveness of my parents so long.)
- அவளது தாயின் மிகைப்பற்றீடுபாடு அனைவரும் நன்கு அறிந்ததே. (The possessiveness of her mother is well known to everyone.)
- அவரது மிகைப்பற்றீடுபாடு அவருக்கு வரம்புக்கோட்டு தனிமனிதஇயல்புக் கோளாறு இருப்பதை வெளிப்படுத்தியது. (His possessiveness revealed that he had borderline personality disorder.)
- குழந்தையின் மீதான நாயின் மிகைப்பற்றீடுபாடு நம்பமுடியாததாக இருந்தது. (The dog’s possessiveness about the child was unbelievable.)
- தன் கணவன் தன்னை யாரிடமும் பேச அனுமதியாதபோதுதான் ஷீலா அவனது மிகைப்பற்றீடுபாட்டைப் பற்றித் தெரிந்துகொண்டாள். (Only when her husband did not allow her to speak to anyone, Sheela came to know about his possessiveness.)
- அவளுடைய மிகைப்பற்றீடுபாடு அவளை தனது தோழியுடன் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கவில்லை. (Her possessiveness did not allow her to share that photo with her friend.)