fbpx
LOADING

Type to search

அறிவியல் உடல் நலம்

பார்கின்சன்ஸ் நோய் அறிகுறிகளை தீவிரமாக்கும் இரண்டு விஷயங்கள் எவை தெரியுமா?

parkinson's

செய்தி சுருக்கம்:

பார்கின்சன்ஸ் என்னும் நடுக்க நோய் மிகவும் சிக்கலானது. இந்த நோய் உள்ளவர்களுக்கு பொதுவான சில அறிகுறிகள் காணப்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்க்கூறுகள் சில விஷயங்களால் தீவிரமடைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பார்கின்சன்ஸ் பாதிப்புள்ளவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த தரவுகளைக் கொண்டு ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் சில முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

பார்கின்சன்ஸ் நோய்ப் பாதிப்புள்ளவர்களுக்கு உடலின் சில குறிப்பிட்ட உறுப்புகளில் நடுக்கம் ஏற்படும். இந்த நடுக்கத்தை கட்டுப்படுத்த இயலாது. நோய் பாதிப்புள்ளவர்கள் மெதுவாகவே இயங்குவார்கள். தசைகள், தளர்வாக இல்லாமல் இறுக்கமாக காணப்படும். பார்கின்சன்ஸ் நோயாளிகளை சிகரெட் புகைத்தல், காஃபி அருந்துல் மற்றும் ஆஸ்பிரின் மருந்து பயன்படுத்துதல் ஆகியவை பாதிக்கின்றனவா என்ற ஆய்வு நடத்தப்பட்டது.
அமெரிக்காவில் சராசரியாக 60 வயது நிறைந்த, ஏறக்குறைய 40 ஆயிரம் பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். நோய் தாக்கி ஐந்து வருடங்கள் கடந்தவர்களே ஆய்வுக்கு தெரிந்தெடுக்கப்பட்டிருந்தனர். அந்த ஆய்வின் முடிவாக சிகரெட் புகைப்பதும், ஆஸ்பிரின் மருந்து சாப்பிடுவதும் நோய் கூறுகளை தீவிரமாக்குகின்றன என்றும், காஃபி அருந்துவது தீவிர பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி:

மூளையின் ஒரு பகுதியிலுள்ள நரம்பு செல்கள் அழிவதே பார்கின்சஸ் நோய்க்குக் காரணமாகிறது. நரம்பு செல்கள் அழிவதற்கான காரணம் இன்னும் தெளிவாக கண்டுபிடிக்கப்படவில்லை. மரபு மற்றும் சூழலியல் காரணிகள் இருக்கலாம் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

டோபமைன்

நரம்பு செல்கள் அழிவதால், மூளையில் டோபமைன் என்னும் வேதிப்பொருளின் அளவு குறைகிறது. உடலின் இயக்கத்தை ஒழுங்குப்படுத்துவதில் டோபமைன் முக்கிய பங்கு வகிக்கிறது. டோபமைன் ஒரு நியூரோடிரான்ஸ்மிட்டர் ஆகும். உடல் அசைவில் பங்குபெறும் கோடிக்கணக்கான நரம்பு மற்றும் தசை செல்களை ஒருங்கிணைக்க டோபமைன் உதவுகிறது.
மூளையில் எலெக்ட்ரிக் என்னும் மின்னணு இயக்கம், மின்னலை விட வேகமாக நடக்கிறது. அவை தகவலையும் தரவுகளையும் மூளை வழியாக மத்திய நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகின்றன. அதன் காரணமாகவே நம்மால் அசையவோ, பதில் வினையாற்றவோ முடிகிறது. இந்த டிரான்ஸ்மிட்டர்களின் இயக்கம் தடைபடும்போது, அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

மூளையின் குறிப்பிட்ட பாதைகள் வழியாக டோபமைன் பயணிக்கிறது. பார்கின்சன்ஸ் பாதிப்பு உள்ளோருக்கு இந்தப் பாதைகள் வழியாக நியூரான்கள், மூளையின் மற்ற பகுதிகளுடன் உண்டாகும் தொடர்பு துண்டிக்கப்படுகிறது.
டோபமைன் குறைவே பார்கின்சன்ஸ் நோய்க்கூறுகள் பலவற்றுக்கு காரணம். டோபமைன் இல்லாததால் உடல் சமநிலை சீர்குலைகிறது. கைகள், கால்கள், தாடைகள் நடுங்குகின்றன. டோபமைன் சுரப்பை தூண்டுவதற்கான மருந்துகளை கொடுத்து தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நோயாளிகளின் எண்ணிக்கை

அமெரிக்காவில் ஆண்டுதோறும் புதிதாக 60,000 பேருக்கு பார்கின்சஸ் பாதிப்பு கண்டறியப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் 15 லட்சம் பேரில் ஒருவருக்கு இந்த நோய் உள்ளது. இந்தியாவில் 70 லட்சம் பேருக்கு இந்தப் பாதிப்பு உள்ளது.

நோயின் பாதிப்பு

பார்கின்சன்ஸ் நோயின் அறிகுறிகளை உடல் இயக்கம் சார்ந்தவை, உடல் இயக்கம் சாராதவை என்று இருவகைப்படுத்தலாம்.

மனக்கலக்கம், மலச்சிக்கல், மனச்சோர்வு, சலிப்பு, புலனுணர்வு குறைபாடு, அசதி, விநோத சத்தங்களை கேட்டல், பிரமை காட்சிகள், குறை இரத்த அழுத்தம், வலி, பாலுறவு குறைபாடு, தூக்கத்தில் பிரச்னை, பேசுதல் மற்றும் மெல்லுதலில் பிரச்னை, வாசனை அறிதலில் அதாவது நுகரும் உணர்வில் குறைபாடு ஆகியவை உடல் இயக்கம், அதாவது உடலை அசைத்து செய்யக்கூடிய வேலைகளை சாராத பாதிப்புகள் என்று சொல்லாம்.
உடலில் நடுக்கம், விறைப்பு மற்றும் அசைவுகளில் தாமதம், தசைகளில் பிடிப்பு ஆகியவை உடல் செயல்பாடுகள் சார்ந்த பாதிப்புகளாகும்.

பலருக்கு ஐம்பது வயதை கடந்த பின்னரே பார்கின்சன்ஸ் நோய்க்கூறுகள் தென்பட ஆரம்பிக்கின்றன. வேறு சிலருக்கோ நாற்பது வயதை எட்டும் முன்னரே அறிகுறிகள் தெரிகின்றன.

பாதிக்கப்பட்ட பிரபலங்கள்

பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி, அமெரிக்க நடிகரும் இயக்குநருமான ஆலன் ஆல்டா, நடிகர் மைக்கேல் ஜே. ஃபாக்ஸ், அமெரிக்க கிறிஸ்தவ பேச்சாளர் பில்லி கிரஹாம், போப் இரண்டாம் ஜாண் பால் ஆகியோர் பார்கின்சஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிரபலங்களுள் சிலராவர்.

நோயை தீவிரமாக்கும் பழக்கங்கள்

பார்க்கின்சஸ் நோய் பாதிப்பு உள்ளவர்களின் நோய் அறிகுறிகள் சிகரெட் புகைத்தல், ஆஸ்பிரின் மருந்து பயன்படுத்துதல், காபி அருந்ததுதல் ஆகியவற்றை பொறுத்து மாறுபடுகின்றனவா என்று ஆராய்வதற்காக நடத்தப்பட்ட ஆய்வில், இந்நோய் பாதிப்புள்ளவர்களுக்கு காணப்படும் அறிகுறிகள் சிகரெட் புகைப்பதாலும், ஆஸ்பிரின் மருந்து பயன்படுத்துவதாலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்பிரின், காய்ச்சலை குறைப்பதற்கும் தசை, பல், தலைவலியை குறைக்கவும், சாதாரண சளிக்கு சிகிச்சையாகவும் எடுக்கப்படுகிறது. ஆர்த்ரைடிஸ் என்னும் மூட்டுவலி மற்றும் அது சார்ந்த வீக்கத்தை குறைக்கவும் ஆஸ்பிரின் பயன்படுத்தப்படுகிறது.

டோபமைன் அதிகரிக்க இயற்கை வழியாக சில கூறப்படுகின்றன. உடற்பயிற்சி செய்தால் டோபமைனின் அளவு கூடும். ஒரு நாளைக்கு 7 முதல் 9 மணி நேரம் நன்கு உறங்கினால் டோபமைன் அதிகரிக்கும். புரத சத்து நிறைந்த இறைச்சி மற்றும் டைரோசின் என்ற அமினோ அமிலம் நிறைந்த பால் பொருள்கள் ஆகியவையும் மூளையில் டோபமைன் உற்பத்திக்கு உதவுகின்றன. பயிறு வகைகள் மற்றும் சோயாவும் நல்ல பலனளிக்கும்.
பார்கின்சன்ஸ் பாதிப்புக்கு ஆரம்ப கட்ட சிகிச்சை அவசியம். நோயின் தீவிரத்தை பொறுத்து மருந்துகளும், கூடுதலாக பிசியோதெரபி சிகிச்சையும், ஆழ்மூளை தூண்டல் சிகிச்சையும் அளிக்கப்படும்.

தொடர்புடைய பதிவுகள் :

மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் குட்டித்தூக்கம் - ஆய்வு முடிவு!
மனிதர்களின் செக்ஸ் ஆசைக்கான மூளையில் உள்ள சுவிட்ச் கண்டுபிடிப்பு..! இனி தேவையற்ற சபலத்தை குறைக்கவும்...
வயதுக்கேற்ப மாறும் தற்கொலைக்கான காரணங்கள்! காலம் மாறுகையில் காரணங்களும் மாறுகின்றன!! - ஆய்வு சொல்வதெ...
‘AI டெக்னாலஜியால் தேர்தல் மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பு ஆட்டம் காணப்போகிறது!’ - பில் கேட்ஸ் எச்சரிக்கை...
நரம்பு தளர்ச்சி வர என்ன காரணம்?
பின் மண்டை வலி வருவதற்கு என்ன காரணம்?
வழுக்கை விழுந்த ஆண்கள் ஆண்மை மிக்கவர்களா? - அமெரிக்க மருத்துவர் முடி உதிர்தலுக்கும் செக்ஸ் ஆசைக்கும்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, 'இந்தியா மிகப்பெரிய மா...
புத்தாடைக்குள் ஒளிந்திருக்கும் அபாயம்
விண்வெளியில் சாதிக்க தயாராக உள்ள இந்தியா, 2040ல் வின்வெளித்துறையில் அசுர வளர்ச்சி அடைந்து விடும் என்...
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *