சிட்னி பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட உலகின் முதல் சோதனையின்படி கடுமையான முதுகு மற்றும் கழுத்து வலிக்கு ஓபியாய்டுகள் தீர்வு அல்ல என்றும் அவை மிகவும் ஆபத்தானது என்றும் தெரிய வந்துள்ளது. இந்தச் சோதனையானது 157 முதன்மை பராமரிப்பு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுத் தளங்களிலிருந்த 350 பங்கேற்பாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. இவர்களில் திடீர் கழுத்து வலி மற்றும் முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தீவிர மற்றும் தொடர் கழுத்து வலி மற்றும் முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்குவர். இவர்கள் ஆறு வாரங்கள் தொடர்ந்து ஓபியாய்டுகள் […]
புகை பிடிப்பது எந்த முறையாக இருந்தாலும் ஆபத்தானதே.. குளிர் வாட்டும் மேலை நாடுகளில் புகை பிடிப்பதைக் கூட ஏதோ ஒரு வகையில் புரிந்துகொள்ளமுடிகிறது. வெயில் வாட்டி வதைக்கும் நம்மூரில் இவர்கள் வாயில் புகையோடு திரிவதை என்னவென்று சொல்வது..? போதாக்குறைக்கு நமது சினிமா ஹீரோக்கள் தங்கள் ஸ்டைலுக்கு நம்பி இருப்பது இந்த சிகரெட்டைத்தான். மேடைகளில் தங்கள் ரசிகர் நலனுக்காக வாய் கிழிய பேசிவிட்டு, திரையில் சிகரெட்டை தூக்கிப் போட்டு ஸ்டைலாக பிடிப்பார்கள். அதைப் பார்க்கும் நம்மவர்கள் தலைவன் வழியில் […]
மனிதன் கண்டுபிடித்த ஆகச்சிறந்த அழிவுப் பொருள் எது என்று கேட்டால், அது பிஸாஸ்டிக் என்றுதான் சொல்லவேண்டும். பிஸாஸ்டிக் இந்த உலகில் மண்ணை மட்டும் மலடாக்கவில்லை, மனித உடல்களையும் தடம் மாற்றுகிறது. சிறு சிறு துகள்களாக உடைந்து சிதைந்த மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இந்த பூமி முழுவதும் பரவிக் கிடக்கிறன. பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கழிவுகள் மண்ணில் மழைநீரைச் சார விடாமல் தடுத்து மண்ணுக்கும் மண்ணைச் சார்ந்திருக்கும் நுண்ணுயிர்களுக்கும் பெரும் பாதிப்பை உண்டு செய்கிறது என்பது இத்தனை வருடங்களில் நாம் […]
செய்தி சுருக்கம்: நிலவின் தென்பகுதியில் தற்போது இரவு சூழ்வதால் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டுமே ஸ்லீப் மோடுக்கு செல்கின்றன. இதனால் நிலவின் மீதான ஆய்வுப்பணிகள் தற்காலிகமாக முடிவடைந்துள்ளது. ஆனாலும் சூரிய சக்தியால் இயங்கக்கூடிய இந்த இயந்திரங்கள் நிலவின் தென் துருவத்தில் சூரியன் உதயமானதும் விழித்தெழுந்து பணிகளை விட்ட இடத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலாவின் இரவு நேரங்களில் அங்கு உருவாக்கக்கூடிய அதிகபட்ச குளிரால் இயந்திரங்களின் பாகங்களில் பழுது ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]
இலங்கையின் இருபெரும் இனங்களான சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் மரபணு ரீதியாக ஒருவருக்கொருவர் மிகவும் ஒத்துப் போகிறார்கள் எனச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் மொழி வேறுபாடுகள் இவ்விரண்டு இனங்களுக்கிடையே இருந்தபோதும் பல நூறு ஆண்டுகளாக இணைந்திருப்பதால் இந்த மரபணுத் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தியா மற்றும் இலங்கையைச் சார்ந்த டிஎன்ஏ விஞ்ஞானிகளால் கூட்டாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு குறித்த செய்தி ஐசயின்ஸ் என்னும் இதழில் வெளியாகியுள்ளது. இதில் இலங்கையில் உள்ள இனக்குழுக்களின் […]