பசிபிக் பெருங்கடலில் ஆழ்கடல் சுரங்கம் தோண்டும் இடத்தில் 5,000க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

செய்தி சுருக்கம்:
பசிபிக் பெருங்கடலில் ஆழ்கடல் சுரங்கப் பகுதியில் 5,000க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலம் (CCZ) என்று அறியப்படும் இந்த கனிமம் நிறைந்த இடம் மெக்சிகோவிலிருந்து ஹவாய் வரை ஆறு மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் அளவை விட இரண்டு மடங்கு அதிகம், எதிர்கால சுரங்க உரிமைகோரல்களில் CCZ , ஏற்கனவே பங்கீடு செய்யபட்டுள்ள்து, மாங்கநீசு மற்றும் கோபால்ட் போன்ற முக்கிய பேட்டரி கனிமங்களின் ஏராளமான வைப்புகளை அகழ்ந்து எடுக்க பல நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன
.ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
சீனா, அமெரிக்கா போன்ற நாட்டு நிறுவனங்கள் ஆழ்கடலில் சுரங்கம் தோண்டுவதில் ஆர்வமாக உள்ளபோதும் , பிரான்ஸ், சிலி, கனடா போன்ற நாடுகள், சுற்றுச் சூழல் நலன்களைக் கருத்தில் கொண்டு தங்கள் கடல் பகுதியில் ஆழ்கடல் சுரங்கம் தோண்டுவதை தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
பின்னணி:
கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்கள் கணுக்காலி, எச்சினோடெர்ம், புழுக்கள் மற்றும் ஸ்பாஞ்சுகள்(arthropods, echinoderms, worms and sponges) என்ற வகைகளிற்குள் அடங்குகின்றன். . புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இனங்களில் “குமிழி அணில்” என்று அறியப்படுவதும் அடங்கும்.