fbpx
LOADING

Type to search

அறிவியல் உடல் நலம் சிறப்புக் கட்டுரைகள்

பெண்களுக்கு உச்சக்கட்ட இன்பம் சாத்தியமா?

orgasam

செய்தி சுருக்கம்:

பாலியல் இன்ப நோக்கில் ஆண், பெண் இருபாலருக்கும் உச்சக்கட்ட இன்பம் பெறுவதில் குறிப்பிட்ட இடைவெளி இருப்பதாக கூறப்படுகிறது. பெண்களின் உச்சக்கட்ட இன்பத்தை ஒட்டிய குறைபாடுகளை புறந்தள்ளிவிடக்கூடாது என்றும் பாலியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். பெருமளவு ஆண்கள் பாலியல் உறவு மற்றும் புணர்ச்சியில் உச்சக்கட்ட இன்பத்தை பெறுவதாகவும், ஆண்கள் அடையும் அளவுக்கு பெண்கள் உச்சக்கட்டத்தை எட்டுகிறார்களா என்பது கேள்விக்குறி என்றும் கருதப்படுகிறது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

2017ம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் பெண் இணையை நாடும் வகையை சார்ந்த ஆண்களில் 95 சதவீதத்தினர் எப்போது பாலியல் உறவில் ஈடுபட்டாலும் முழு திருப்தி நிலையை எட்டுவதாகவும், ஆண் இணையை நாடும் வகையை சார்ந்த பெண்களில் 65 சதவீதத்தினரே முழு திருப்தியடைவதாகவும் தெரிய வந்தது. பெண்கள் உச்சக்கட்ட நிலையை எட்டுவது குறித்து காலங்காலமாக இருக்கும் அலட்சியமே இதற்குக் காரணம் என்பதும் விளங்குகிறது.

பின்னணி:

ஆண் – பெண் உடலுறவை பொறுத்தமட்டில், பாலியல் உறவென்பது புணர்ச்சியை மாத்திரமே குறிப்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது. வெறுமனே புணர்ச்சி மட்டுமே பாலுறவு ஆகாது. பாலியல் உறவு, பல கட்டங்களைக் கொண்டது. பெரும்பாலான இணைகள் இது குறித்து சரியான புரிதல் இல்லாமல் உறவு கொள்ள முயற்சிப்பதால் பெண் இணைக்கு பாலுறவில் உச்சக்கட்ட இன்பமோ, முழு திருப்தியோ கிடைப்பதில்லை.

புணர்ச்சி ஒன்றே போதுமா?

கல்லூரி பெண்கள் 800 பேரிடம் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 39 சதவீதத்தினர் தாங்கள் சுய இன்பம் பெறும்போது எப்போதுமே உச்சக்கட்டத்தை எட்டுவதாகவும், இணையுடன் பாலியல் உறவு கொள்ளும்போது உச்சக்கட்டத்தை எட்டுவதாக 6 சதவீதம் பேரும் குறிப்பிட்டனர். அந்த ஆய்வானது, பெண்ணும் ஆணும் பாலியல் உறவில் ஈடுபடும்போது, புணர்ச்சி ஒன்றே போதுமானதாகாது என்று கூறுகிறது. அதாவது இணை, தன்னை புணர்வதால் மட்டும் பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை எட்டுவதில்லை என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

ஒரு பெண், இன்னொரு பெண்ணுடன் பாலியல் சார்ந்த உறவு கொள்ளும்போது பெரும்பாலும் தன் இணையின் மூலம் உச்சக்கட்ட இன்ப நிலையை எட்ட முடிகிறது என்று கூறப்படுகிறது. ஆனால், பெண் இணை உச்சக்கட்டத்தை எட்டுவதற்கு ஆண் குறி தடை செய்கிறது என்று ஒட்டுமொத்தமாக குற்றஞ்சாட்டி விட முடியாது. அதற்கு தற்கால நடைமுறைகளே பெரும்பாலும் காரணமாக அமைந்துள்ளன.

ஆபாச படங்கள்

முறையான பாலியல் அறிவு இல்லாததே ஆண்களால் தங்கள் பெண் இணையை உச்சக்கட்ட இன்ப நிலைக்கு அழைத்துச் செல்ல முடியாததற்கு காரணமாக இருக்கிறது. பாலியல் உறவுக்கு ஆபாச படங்களையே இளந்தலைமுறையினர் வழிகாட்டியாக கருதுகின்றனர். பெண்களின் உச்சக்கட்ட நிலையைக் குறித்து ஆபாச படங்கள் முறையாக காட்டுவதில்லை. ஆண், தன் குறியை நேரடியாக பெண்ணுறுப்பினுள் நுழைத்து உறவு கொள்வதையே ஆபாச படங்கள் காட்டுகின்றன. பெரும்பாலான பெண்களுக்கு இந்த அதிரடி உடலுறவு இன்பத்தை அல்ல; வலியையே கொடுக்கிறது என்று பாலியல் மனோதத்துவ நிபுணர் லாரி மிண்ட்ஸ் கூறுகிறார்.

இன்ப ஊற்று

புணர்ச்சிக்கு முன்னால் ஈடுபடக்கூடிய ஃபோர்பிளே என்னும் விளையாட்டு, புணர்ச்சிக்கு பின்னான விளையாட்டு போன்ற முறையான வழிமுறைகளை ஆண்கள் பின்பற்றுவதில்லை. பெண்ணின் பிறப்புறுப்பு என்றால் அது வர்ஜினா என்னும் யோனி மட்டுமே என்று புரிந்துகொள்ளுகிறோம். அப்படியல்ல, பெண்ணுக்கு உச்சக்கட்ட இன்பத்தை அளிக்கக்கூடியது கிளிட்டோரிஸ் என்ற பகுதியாகும்.

பெண்ணின் கிளிட்டோரிஸ் என்பது யோனியின் திறப்புக்கு மேலே அமைந்திருக்கும். இது பெண்ணுக்கு உச்சக்கட்ட இன்பத்தை அளிக்கும் பகுதியாகும். கிளிட்டோரிஸின் சிறு பகுதியை மாத்திரமே பார்க்க இயலும். அதன் பெரும்பகுதி உறுப்பின் உள்பக்கமாக அமைந்திருக்கும். கிளிட்டோரிஸில் அநேக நரம்புகள் முடிவடைந்திருப்பதால் அது இன்ப சுரங்கமாக திகழ்கிறது. பெண்ணுறுப்பின் வெளிப்புற பகுதியின் ஓர் அங்கமே கிளிட்டோரிஸ் ஆகும். கிளிட்டோரிஸ் இரு பாகமாக பிரிந்துள்ளது. பாலுணர்வு தூண்டப்படும்போது இரத்தம் நிறைந்து கிளிட்டோரிஸின் இரு பகுதிகளும் உப்புகின்றன.

கிளிட்டோரிஸ் மூலம் அனைத்துப் பெண்களும் ஒரே முறையில் தூண்டப்படுவதில்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் வித்தியாசமான முறையே உச்சக்கட்ட இன்பத்தை அளிக்கும். குறிப்பாக, பாலியல் உறவுக்கு மனநிலையை ஆயத்தப்படுத்தவேண்டும். உறவுக்கு ஏற்ற சாதகமான சூழலை அமைத்துக்கொள்ளவேண்டும். முத்தமிடுதல், அணைத்தல் போன்ற ஃபோர்பிளே மூலம் உறவுக்கேற்ற மனநிலையை அடைய வேண்டும். பிறகு கிளிட்டோரிஸுக்கு அண்மையான உடல் பகுதிகளை தொட்டு உணர்ச்சியை தூண்டவேண்டும்.

கிளிட்டரேட் என்று அழைக்கப்படும் முறையில், பெண்ணின் யோனியினுள் இருக்கும் கிளிட்டோரிஸை வாய் மூலம் அல்லது வேறு முறையில் தொட்டு தூண்டுவது, உச்சக்கட்ட இன்ப இடைவெளியை நிரப்ப உதவும் என்று மிண்ட்ஸ் கூறுகிறார். மட்டுமல்ல, நீண்டகாலம் பாலியல் உறவு இணையாக இருந்தாலும், புதிதாக உறவு கொள்பவராக இருந்தாலும் தங்களுக்குள் முழுமையாக உரையாடிக்கொள்ளவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

பேச தயங்கும் பெண்கள்

பாலியல் உறவில் வெளிப்படையாக தன் தேவையை கேட்கும் அல்லது குறைபாட்டை சுட்டிக்காட்டும் பெண் தவறாக புரிந்துகொள்ளப்படக்கூடிய ஆபத்து இருப்பதால் பெண்கள் வெளிப்படையாக கேட்க தயங்குகின்றனர் என்று டெப் லாய்னோ என்ற பாலியல் வல்லுநர் கூறுகிறார்.

ஆண் இணை, தன் குறியை வாயால் சுவைக்கும்படி பெண்ணை கேட்பது இயல்பான ஒன்றாக காணப்படுகிறது. ஆனால், என் கிளிட்டோரிஸை தூண்டு என்று ஒரு பெண் கேட்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக கருதப்படுகிறது என்று பெண்கள் தன்னிடம் பகிர்ந்துகொண்டதாகவும் மிண்ட்ஸ் கூறுகிறார்.

பாலியல் உறவென்பது வெறுமனே உடல் சார்ந்தது மட்டுமல்ல, அது மனதுடன் இணைந்தது. பெண்கள் மனமுவந்து ஈடுபட்டால்தான் உச்சக்கட்டத்தை எட்ட முடியும். ஆகவே, பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை பெறுவதற்கு இணையர் அவர்களின் தேவையை, விருப்பத்தை அறிந்து, நிறைவாக உறவு கொள்வதே வழியாகும்.

தொடர்புடைய பதிவுகள் :

உண்ணா நோன்பு என்னும் தலைசிறந்த மருத்துவம்!
இந்தியப் பெருங்கடலில் 'துளை' இருக்கிறதா?
பசிபிக் பெருங்கடலில் ஆழ்கடல் சுரங்கம் தோண்டும் இடத்தில் 5,000க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டு...
இந்தியாவின் முதல் ட்ரோன் போலீஸ் படைப்பிரிவு தமிழ்நாட்டில் துவங்கப்பட்டது - இன்றுமுதல் செயல்பாட்டிற்க...
காட்டுத் தேனீக்கள் மனித இனத்திற்கு அத்தியாவசியத் தேவை..! காரணங்கள் என்ன..?
ராக்கெட்டில் ஏறிய தக்காளி விலை, காய்கறிகள் விலையனைத்தும் எக்குத்தப்பாக உயர்கிறது - பருவமழை காலங்கடந்...
உடல் பருமன் அதிகரிப்பதற்கு பிரக்டோஸ் காரணமாகிறதா? ஆய்வுகள் சொல்வதென்ன?
மருந்துகளைச் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள உதவும் பில் ட்ராக்கர்: இந்திய வம்சாவளி மாணவி சாதனை
செவ்வாய் கிரகத்தில் ஓடிய ஆறுகளுக்கு என்ன நடந்தது?
Depression Meaning in Tamil 
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *