fbpx
LOADING

Type to search

இந்தியா சினிமா தெரிவு பல்பொருள் பொழுது போக்கு

பகவத் கீதையை அவமதிக்கும் பாலியல் காட்சியை நீக்குக – ‘ஓப்பன்ஹைமர்’ பட இயக்குநருக்கு இந்தியா கோரிக்கை!

செய்தி சுருக்கம்:

கிறிஸ்டோபர் நோலனின் சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஓப்பன்ஹைமர்’ இல் ஒரு பாலியல் காட்சியில் இந்து மத நூலான பகவத்கீதை பயன்படுத்தப்பட்டிருப்பது இந்தியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும்,  ஆகையால், இந்தக் காட்சியை உலகம் முழுவதும் நீக்க வேண்டும் என்றும் இந்தியத் தகவல் ஆணையர் உதய் மஹுர்கர் கோருகிறார்.

கிரிஸ்டோபர் நோலன் என்னும் அறிவுஜீவி 

உலகமெங்கும் இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன் அவர்களுக்கு பரவலான ரசிகர் பட்டாளம் உண்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அவருடைய வெறியர்கள் அதிகம் என்றே சொல்லலாம். சற்றே அறிவாளித்தனமாக படம் இயக்க முயலும் நம்ம ஊர் இயக்குநர்களை ‘பெரிய நோலன் இவரு..’ என்பார்கள் நம்மாட்கள். 

அர்ப்பணிப்போடு படத்தை இயக்குவது, தன் ரசிகர்களை மதித்து திரைக்கதையை அமைப்பது, எந்த கிராபிக்ஸ் காட்சியும் இல்லாமல் கூடுமானவரை காட்சிகளை உண்மைத்தன்மையுடன் படமாக்குவது என்று நோலன் உலக திரைப்பட இயக்குநர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். இருப்பினும் அவரது சமீபத்திய திரைப்படம் இந்தியாவில் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது. 

நோலன் போட்ட அணுகுண்டு!

‘ஓப்பன்ஹைமர்’ என்பது அமெரிக்க அணுகுண்டை உருவாக்கிய ராபர்ட் ஓப்பன்ஹைமரின் கதையைச் சொல்லும் ஒரு த்ரில்லர் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம். ஒரு காட்சியில், கதாநாயகன் தனது காதலியான ஜீன் டாட்லாக் உடன் உடலுறவு கொள்ளும்போது, அவர்கள் உடலுறவை இடைநிறுத்துகிறார்கள். பிறகு, டாட்லாக் பகவத் கீதையை எடுத்து, ஓபன்ஹெய்மரை அதிலிருந்து ஒரு வாசகத்தைப் படிக்கச் சொல்கிறார். 

ஓப்பன்ஹைமர் இந்த வாசகங்களைப் படிக்கிறார் – “இப்போது நானே மரணமாக இருக்கிறேன். உலகில் அழிவை ஏற்படுத்துபவன் நான்”. இந்த வாசகம் படத்தில் பிறகு பல இடங்களில்  பயன்படுத்தப்படுகிறது. 

பாலியல் காட்சி ஒன்றில் இந்து மதத்தின் புனித நூல்களில் ஒன்று பயன்படுத்தப்பட்டது இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம்,  இந்தியாவில் இந்த படத்தைப் புறக்கணிக்க மக்களை அழைப்பு விடுக்கும் அளவிற்குச் சென்றுள்ளது. 

இஸ்லாம் மதத்திற்கு இருக்கும் மரியாதை இந்து மதத்திற்கு ஏன் இல்லை?

சேவ் கல்ச்சர் சேவ் இந்தியா அறக்கட்டளையின் நிறுவனர் மஹுர்கர் சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், இந்த காட்சியை “ஒரு பில்லியன் சகிப்புத்தன்மையுள்ள இந்துக்களின் மத நம்பிக்கைகள் மீதான நேரடி தாக்குதல்” என்றும், இது “இந்து எதிர்ப்பு சக்திகளின் பெரிய சதி” யின் ஒரு பகுதி என்றும் கூறியுள்ளார் .

திரைப்படங்களில் இஸ்லாமிய பயங்கரவாதத்தைப் பற்றி பேசும் போது கூட, முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில் குர்ஆன் மற்றும் இஸ்லாத்தை சித்தரிக்காமல் ஹாலிவுட் இயக்குநர்கள் மிகவும் கவனத்துடன் இருப்பதை சுட்டிக்காட்டினார். “ஏன் அதே மரியாதை இந்துக்களுக்கும் கொடுக்கக் கூடாது?”  என்று அவர் கேள்வி எழுப்புகிறார். 

மஹூர்கர் தனது கடிதத்தில் நோலனை நேரடியாகக் குறிப்பிட்டு, “உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ள உங்கள் படத்திலிருந்து இந்தக் காட்சியை அகற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் “இந்த முறையீட்டைப் புறக்கணிக்க நீங்கள் தேர்வு செய்தால், அது இந்திய நாகரிகத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலாகக் கருதப்படும்” என்றும் கூறியுள்ளார்.

இந்த கடிதத்திற்கு நோலன் இன்னும் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை.

படத்தின் வெற்றி

இதுவரை, ‘ஓப்பன்ஹைமர்’  திரைப்படம், உலகளாவிய பாராட்டைப் பெற்றுள்ளது, அமெரிக்கா மற்றும் கனடாவில் $80.5 மில்லியனையும், அதன் தொடக்க வார இறுதியில் உலகளவில் $93.7 மில்லியனையும் வசூலித்துள்ளது. இந்தியாவிலும் இப்படம் வெற்றியடைந்து, $3 மில்லியனுக்கும் மேல் வசூலித்துள்ளது. 

ஹாலிவுட் படங்களில் பகவத் கீதையை வைத்து சர்ச்சையை ஏற்படுத்துவது இது முதல் முறையல்ல. 1999 இல், ஸ்டான்லி குப்ரிக், ‘ஐஸ் வைட் ஷட்’ திரைப்படத்தில் ஒரு களியாட்டக் காட்சியில் புத்தகத்தின் வரிகளைப் பயன்படுத்தினார். அந்த நேரத்தில், படத்தைத் தயாரித்த வார்னர் பிரதர்ஸ், இந்து குழுக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த பகுதியை படத்தில் இருந்து நீக்கினர்.

தொடர்புடைய பதிவுகள் :

கூகுள் ஏன் தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்கிறது?பின்னணி என்ன?
ரியல்எஸ்டேட்வீழ்ச்சியால், கனேடியக்குடும்பங்களுக்கு பில்லியன்கணக்கில்நட்டம்.
இலங்கை அரசியலில் வலுவிழக்கும் புத்த பிக்குகள்! பலவீனமான அத்தியாயத்தின் தொடக்கம்!!
வந்தே விட்டன டிரைவரில்லா டாக்சிகள்! கலிபோர்னியாவில் அறிமுகப்படுத்தப்படும் ரோபோடாக்சிகள்…!!
ஸ்மார்ட் போனில் மூழ்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள்: ஒரு எச்சரிக்கை
Lying Tamil Meaning 
‘AI டெக்னாலஜியால் தேர்தல் மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பு ஆட்டம் காணப்போகிறது!’ - பில் கேட்ஸ் எச்சரிக்கை...
அதானி நிறுவன ஆடிட்டர் பதவி விலகுகிறார்! - Hindenburg, அதானி குழும நிதிநிலை அறிக்கை பற்றி கேள்வி எழுப...
Virtual Meaning in Tamil
Possessiveness in Tamil
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *