fbpx
LOADING

Type to search

சினிமா

ஒப்பன்ஹைமர் படம் புரியவில்லையா இதைப் படியுங்கள்

செய்தி சுருக்கம்:

ஒப்பன்ஹைமர் சமீபத்தில் வெளியான ஒரு ஹாலிவுட் திரைப்படமாகும். பிரபல இயக்குனரான க்ரிஸ்தோபர் நோலன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

ராபர்ட் ஜே. ஒப்பன்ஹைமர் எனும் தத்துவார்த்த இயற்பியல் விஞ்ஞானியின் சுயசரிதையை மையப்படுத்தி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் கதைக்களம் இரண்டாம் உலகப்போரின் முந்தைய காலகட்டங்களில் நடப்பதாக காட்டப்பட்டுள்ளது.

பின்னணி:

ஆயுதம் என்பது மனிதனின் கண்டுபிடிப்புகளில் இன்றியமையாததாக ஒன்றாக விளங்குகிறது. விலங்குகளை வேட்டையாட கல், எழும்பு, கூரிய தடிகள் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தியவன் அறிவு வளர்ச்சிப் பெற ஆயுத வளர்ச்சியையும் பெருக்கினான். வில்-அம்பு, பூமராங், பீரங்கி, துப்பாக்கி, ஏவுகணை என இறுதியாக அணு ஆயுதத்திற்கு வந்து நிற்கிறது.

முதல் உலகப் போரில் பீரங்கி, மற்றும் ஏவுகனைகளைக் கொண்டு சண்டையிட்ட நாடுகள் அதை விட சக்தி வாய்ந்த, நொடியில் தாக்கி அழிக்கக்கூடிய ஆயுததைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கின. அதற்கு விஞ்ஞானிகளை அரசாங்கங்கள் சாதகமாக பயன்படுத்தியது. அன்றைய காலக்கட்டதில் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் அசுர வளர்ச்சியடைந்து வந்தது. இந்த ஆயுதப் போட்டியினால் உலகில் உள்ள சிறந்த விஞ்ஞானிகளை ஊக்குவித்து தன் பக்கம் இழுத்தது அமெரிக்கா, அதில் ஒருவர் தான் ராபர்ட் ஜே. ஒப்பன்ஹைமர்.

சிறுவயதில் இருந்தே தான் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்று கனவு கண்டார் ஒப்பன்ஹைமர். விண்மீன்கள் பற்றிய சிந்தனை இவருக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு விண்மீன் எரிந்து அழிந்து போகும் அப்போது என்ன நடக்கும் என ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அதே நேரம் இவர் மனஊளைச்சலுக்கும் ஆளானார். இதுவே பின்னர் தான் உருவாக்கிய அணு ஆயுதம் சரியா தவறா என்ற குழப்பத்தில் அவரை ஆழ்த்தியது.

1920க்குப் பிறகு அணுவைப் பற்றி பல ஆராய்ச்சிகள் நடைபெற்றது. அணுவைப் பிளக்க முடியாது என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில், 1938ம் ஆண்டில், ஒரு நியூடிரானைக் கொண்டு அணுவை இரண்டாக உடைக்க முடியும் என்று கண்டுபிடித்தனர். இதுவே அணு சக்திக்கு ஒரு அடிப்படையாக அமைந்தது. ஒரு அணுவைப் பிளக்கும் போது பேராற்றலுடன் மேலும், மூன்று நியூடிரான்கள் வெளியாகி  ஒரு தொடர் எதிர்வினையைப் போல செயல்படத்துவங்கும். சில நிமிடங்களில் இது பன்மடங்கு ஆற்றலை வெளியிடும் ஒரு முறையாக இருந்தது. இதை கொண்டு அணுஆயுதத்தை செய்யத்துவங்கியது அமெரிக்கா. இதற்கு தலைமை தாங்கியவர் ராபர்ட் ஜே. ஒப்பன்ஹைமர்.

மன்ஹாட்டன் ப்ராஜக்ட் என்னும் பெயரில் அமெரிக்காவின் லாஸ் அலமோஸ் என்னும் சமதளப் பகுதியில் இந்த அணுகுண்டை சோதனை செய்ய அமெரிக்க ராணுவம் முடிவெடுக்கிறது. இதற்கு நடுவில் பல விஞ்ஞானிகளை ஒப்பன்ஹைமர் சந்திக்கிறார். அதில் ஆல்பர்ட் ஐனஸ்டைனும் அடக்கம். நாஜிகள் கையில் இது போன்ற ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் கிடைத்தால் உலகம் என்னவாகும் என்ற நினைப்பே ஒப்பன்ஹைமரை இந்த அணுகுண்டு சோதனையில் தீவிரமாக ஈடுபடுத்தியது. இறுதியாக அதில் வெற்றியும் பெற்றார் ஒப்பன்ஹைமர்.

நாஜிகளின் தலைவனான ஹிட்லர் தற்கொலை செய்துகொண்ட பிறகு ஜெர்மனி சரணடைகிறது. ஜப்பான் மட்டும் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வந்தது. ஒரு முறை அமெரிக்காவின் பியர்ல் ஹார்பரில் ஜப்பான் விமானங்கள் குண்டு மழை பொழிந்தது. இதை காரணமாக வைத்து ஜப்பானின் மேல் இந்த குண்டை வீச அமெரிக்க திட்டம் போடுகிறது. அது போல ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா நகரிலும், ஆகஸ்ட் 9 நாகசாகி நகரில் அடுத்ததுத்து அணுகுண்டைப் போட்டது அமெரிக்கா. அதனுடன் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

படத்தில் இதையெல்லாம் விரிவாக காட்டவில்லை என்றாலும் நோலான் சொல்லவந்ததை சிறப்பாக விவரித்து இருந்தார். ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் இந்த படத்தை எடுத்துள்ளார். எந்த ஒரு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளும் இல்லை என படம் வெளியாவதற்கு முன்பே தெரிவித்திருந்தார். அணுகுண்டு வெடிக்கும் காட்சிகள் கூட உண்மையாகவே சோதனை செய்து தான் பதிவு செய்திருப்பார் போல!

திரைப்படத்தில் ஒப்பன்ஹைமராக நடித்த சிலியன் மர்பி அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். கம்யூனிஸ்ட்களுக்கு உதவிதயக இவரை அமெரிக்கா இவர் மீது வழக்கு தொடரும் அதை அவர் எதிர்கொள்ளும் காட்சி எல்லாம் மிகத் தத்ரூபமாக உணர்ச்சிகளை வெளிக்காட்டி நடித்துள்ளார். படத்தில் குறைகள் என்று ஒன்றும் பெரியதாக தென்படவில்லை. இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார் போன்ற திரைப்படங்களில் குழப்பமான திரைக்கதையை அமைத்த நோலான் இதில் தெளிவாக புரியும்படி அமைத்துள்ளார். எனினும், நான் லீனியர் எடிட்டிங் யுக்தியையே கையாண்டு இருக்கிறார்.

அணுகுண்டு வெடிப்பதை ஆவலாக பார்க்க செல்லும் நபர்களுக்கு வெறும் ஏமாற்றமே மிஞ்சும். உலகப்போர் கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் என்றாலே சண்டைக்காட்சிகள் நிரம்பிவழியும், ஆனால் இத்திரைப்படத்தில் அப்படி ஒரு நொடி கூட கிடையாது என்பது ஒப்பன்ஹைமரின் தனிச்சிறப்பு!

தொடர்புடைய பதிவுகள் :

பொன்னியின் செல்வன் கதையின் கரு என்ன?
இயக்குனர்கள் கோபி நயினார், எஸ். பி. விஜய அமிர்தராஜ் ஆகியோர் தன்னிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி : பிரான்...
பொன்னியின் செல்வனில் வரும் வாணர் குளம் என்றால் என்ன?
பகவத் கீதையை அவமதிக்கும் பாலியல் காட்சியை நீக்குக - ‘ஓப்பன்ஹைமர்’ பட இயக்குநருக்கு இந்தியா கோரிக்கை!
சிங்களத் திரைப்படங்களைத் தயாரிக்கப்போகும் லைகா புரொடக்ஷன்ஸ்..!!
பொன்னியின் செல்வன் நாவல் ஏன் இவ்வளவு பிரபலமான ஒன்றாக கருதப்படுகிறது?
பொன்னியின்செல்வன் என்று பெயர் வரக் காரணம் என்ன?
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'ரகுதாத்தா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது
பிபிசி நிகழ்ச்சிகளை இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது அமேசான்
பொன்னியின் செல்வன் புதினத்தில் ஆதித்ய கரிகால சோழனை கொன்றது யார்?
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *