Occupation Meaning in Tamil

Occupation meaning in Tamil: ‘Occupation’ என்கிற இந்த ஆங்கிலச் சொல்லின் தெளிவான தமிழ்ப் பொருள், அதன் ஒத்த சொற்கள் (Synonyms) எதிர்ச் சொற்கள் (Antonyms) மற்றும் எளிதான பயன்பாட்டு எடுத்துக்காட்டுகளோடு (Easy usage examples) சேர்த்து இங்கு சற்று விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
‘Occupation’ உச்சரிப்பு = ஆக்குப்பேஷன்.
‘Occupation’ என்பதன் பொருள், ‘பணம் சம்பாதிப்பதற்காக ஒருவர் செய்யும் தொழில்’ அல்லது ‘ஆக்கிரமிப்பு’ என்பதாகும்.
‘Occupation’ என்கிற சொல், noun (பெயர்ச் சொல்) ஆக செயல்படுகிறது.
Occupation-(noun) தமிழ்ப்பொருள்:
வேலை, தொழில், பணி, ஊழியம்.
ஆக்கிரமிப்பு.
Occupation-noun (பெயர்ச்சொல்):
- ஒருவர் தன் பொருளாதாரத்திற்காகச் செய்யும் ஒரு தொழில், வியாபாரம்.
- சம்பளத்திற்காகப் பார்க்கும் பணி.
- ஒரு குறிப்பிட்ட செயலில், பரபரப்பாக ஈடுபட்டிருத்தல்.
- ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.
Example (உதாரணமாக):
English: His occupation is cooking in ceremonies.
Tamil: விழாக்களில் சமைப்பதுதான் அவரது தொழில் ஆகும்.
English: The only occupation of him is doing nothing.
Tamil: எதுவுமே செய்யாமல் இருப்பதுதான் அவனுடைய ஒரே வேலை.
English: She is in highly paid occupation in the town.
Tamil: ஊரிலேயே அதிக சம்பளம் வாங்கும் பணியில் இருக்கிறாள் அவள்.
English: In British occupation of India, There were so many atrocities happened.
Tamil: இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த போது, இங்கு எத்தனையோ கொடுமைகள் நடந்தன.
‘Occupation’ Synonyms-antonyms:
‘Occupation’ என்பதன்ஒத்த (Synonyms) சொற்கள்பின்வருமாறு:
Activity
Business
Career
Employment
Incumbency
Holding
Position
Post
Trade
Vocation
Work
‘Occupation’ என்பதன்எதிர்ச்சொற்கள் (Antonyms) பின்வருமாறு:
Avocation
Entertainment
Fun
Giving up
Surrender
Unemployment
Pastime
Hobby
Recreation
Yielding