Obsessed Meaning in Tamil

‘Obsessed’ என்கிற இந்த ஆங்கிலச் சொல்லின் தெளிவான தமிழ்ப் பொருள், அதன் ஒத்த சொற்கள் (Synonyms) எதிர்ச் சொற்கள் (Antonyms) மற்றும் எளிதான பயன்பாட்டு எடுத்துக்காட்டுகளோடு (Easy usage examples) சேர்த்து இங்கு சற்று விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
‘Obsessed’ உச்சரிப்பு = அப்சஸ்டு.
‘Obsessed’ என்பதன் பொருள், ‘வேறு எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட செயலைப் பற்றி மட்டுமே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது’ என்பதாகும்.
‘Obsessed’ என்கிற சொல் ‘adjective’ (உரிச்சொல்) ஆக செயல்படுகிறது.
Obsessed-(adjective) தமிழ்ப்பொருள்:
ஒருமுகப்படுத்தல்.
சிந்தனைகளில்/வேலைகளில் மூழ்கிப் போகுதல்.
ஆழ்ந்த எண்ணம்.
முழுவதும் தன்னை மறந்திருக்கிற.
ஒன்றை மட்டுமே குறித்த யோசனை.
Obsessed-adjective (உரிச்சொல்):
1. ஒரு குறிப்பிட்ட செயலைப் பற்றி மட்டுமே எப்போதும் யோசித்துக் கொண்டிருக்கும் குணம்.
2. ஒரு வேலையை, அதன் கடைசி எல்லை வரை சென்று அதனுள் இறங்கி மிகுந்த ஆர்வத்துடன் செய்வது.
3. ஏதேனும் ஒரு பழக்கத்தின் மீது இருக்கிற தீராத மோகம், ஒரு நபர் அல்லது பொருளின் மீது வைத்திருக்கும் மிதமிஞ்சிய பற்று.
4. மிகுந்த ஈடுபாட்டுடன், தன்னை மறந்து இரசிக்கும் தன்மை.
Example (உதாரணமாக):
English: Obsessed with some thought, he drove off his car into the accident.
Tamil: ஏதோ யோசனையில் மூழ்கிய அவர், தனது வண்டியை விபத்துக்குள்ளாக்கினார்.
English: Boss knows that he is very obsessed with his work.
Tamil: அவர் தன் வேலையில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பதை, முதலாளி அறிவார்.
English: She went obsessed in his music skill.
Tamil: அவனுடைய இசைத் திறமையில் அவள் மயங்கிப் போனாள்.
English: He is very obsessed with drinking.
Tamil: குடிப்பழக்கத்தில் மிகவும் வெறி கொண்டவர் அவர்.
English: Daily She does yoga with obsessed, to reduce her weight.
Tamil: உடல் எடையை குறைப்பதற்காக, தீவிரமாக யோகா செய்கிறாள் அவள்.
‘Obsessed’ Synonyms-antonyms
‘Obsessed’ என்பதன்ஒத்த (Synonyms) சொற்கள்பின்வருமாறு:
Absorbed
Anxious
Beset
Bewitched
Captivated
Distracted
Dominated
Engrossed
Fixated
Gripped
Haunted
Infatuated
Into
Impressed in
Knee-Deep
Passioned
Preoccupied
Prepossessed
Seized
Taken over
Worried
‘Obsessed’ என்பதன்எதிர்ச்சொற்கள் (Antonyms) பின்வருமாறு:
Apathetic
Casual
Cool
Detached
Dispassionate
Incurious
Indifferent
Nonchalant
Unconcerned
Unenthusiastic
Uninvolved