நொடிப்பொழுதில் கட்டுரை எழுதி தரக்கூடிய ChatGPT செயலியின் நுண்ணறிவு திருடப்பட்டு கட்டமைக்கப்பட்டதா? – OpenAI நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரி NYT உட்பட பலர் வழக்குபதிவு.


செய்தி சுருக்கம்:
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை நிறுவனத்தின் இணையதள விவரங்களை ஒரு Autobot அணுகும் போது அதனை தடுக்கும் வகையில் அதனுடைய நிரலாக்கத்தை மாற்றியமைத்தது, இந்த விவரங்களை அதன் robot.txt endra பக்கத்தில் வெளியிட்டுள்ளது NYT. குறிப்பாக OpenAI நிறுவனத்தின் GPTBot ரக Autobotகள் வலைப்பக்கத்தில் நுழைந்து செய்திகளை சேகரிக்க முழுமையான தடையை உருவாக்கியுள்ளனர்.
OpenAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Autobot ரக வலை உலவிகளை பயன்படுத்தி பல்வேறு வலைதளங்களின் தகவல்களை சேகரிக்கும் வேலையை அந்நிறுவனம் செய்துவந்துள்ளது, இந்த சமயத்தில் New York Times செய்தி நிறுவனம் அதன் வலைதளங்களில் தகவல்களை அணுகுவதற்கு OpenAI நிறுவனத்தின் GPTBot ரக தானியங்கு தகவல் சேகரிக்கும் செயலிகள் அனைத்திற்கும் தடை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் வளர்ந்து வரும் மாற்றங்களால் எதிர்கால செயலிகளின் அறிவை நிர்ணயிக்க தேவையான தகவல்களை ஆன்லைனில் திருட்டு வழியில் சேகரிக்கும் வழியை NYT நிறுவனம் அடைத்துள்ளது. அதன் முழு விவரங்களையும் அதன் வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. “You are not a Robot” என்ற டெஸ்டிங் முறையை பல வலைப்பக்கங்களில் நாம் பார்த்திருப்போம், அதற்கும் அடுத்தகட்ட தடையை Autobot களுக்கு உருவாக்கி உள்ளனர் தற்போது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
உலகின் உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ள எல்லா வலைத்தளங்களிலும் உள்ள விவரங்களை சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட GPTBot ரக வலை உலவிகள் தற்போது அதிகரித்து வருவதால் ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய வலைப்பக்கத்தில் இருந்து விவரங்கள் களவுபோவதை தடுக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆகஸ்ட் 17 இல் தன் வலைப்பக்கத்தில் மாற்றங்களை கொண்டுவந்த New York Times நிறுவனம் அவற்றை தடுக்கும் வகையில் வலைப்பக்க நிரல்களில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அவை தடுக்கும் வலை உலாவிகளில் சிலவற்றின் பெயர்கள் CCBot, GPTBot, ia_archiver, omgili மற்றும் omgiliBot என்று உள்ளன.
தங்கள் வலைத்தளத்தில் உள்ள விவரங்களை கொண்டு OpenAI நிறுவனம் அவற்றின் AI மாடல் Botகளுக்கு பப்ளிகேஷன் பற்றிய விவரங்களை கற்று குடுக்கின்றனர். இதை தற்போது தடுத்து இருப்பதாக கூறும் NYT இம்மாத ஆரம்பத்தில் இதற்கான பணிகளை ஆரம்பித்து தற்போது அதில் வெற்றியும் அடைந்துள்ளனர்.
இந்த தகவலை பற்றி விசாரித்த போது NYT செய்தி தொடர்பாளர் Charlie Stadtlander எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க மறுத்து விட்டார், அதேபோல OpenAI நிறுவன அதிகாரிகளும் அந்த சம்பவத்தை பற்றிய கேள்விகளுக்கு உடனடியாக எந்த பதிலையும் கூற முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
அறிவுசார் சொத்துகளின் மீதான உரிமை மீறல்கள் தொடர்பாக OpenAI நிறுவனத்தின் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடரப் போவதாகவும் NYT கடந்த வாரத்தில் தெரிவித்து இருந்தது, இந்த வழக்கு நஷ்ட ஈடு கோரியதாக இருக்குமானால், இதே OpenAI மீது கடந்த ஜூலை மாதம் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்து காத்திருக்கும் இரண்டு எழுத்தாளர்கள் மற்றும் Sarah Silverman என்ற நபர்களின் வரிசையில் NYT சேர்ந்து கொள்ளும். அவர்களின் வழக்கில் ஒன்று Books3 என்ற புத்தகத்தை அத்துமீறி உபயோகித்து விட்டது என்றும், மற்றொன்று தகவல் சேகரிப்பு அனைத்தும் ChatBot களுக்கு பயிற்சியளிக்க OpenAi நிறுவனம் அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளது என்றும் இருக்கிறது. பதிப்புரிமை மற்றும் காப்பீட்டு உரிமை கொண்டிருக்கும் இதுபோன்ற பிரபல நிறுவனங்கள் மற்றும் நபர்களின் படைப்புகளையே ஆன்லைன் வாயிலாக அபேஸ் செய்து தவறாக பயன்படுத்தி தங்கள் AI டெக்னாலஜியை வளர்க்க நினைத்திருக்கும் OpenAI போன்ற நிறுவனங்கள் மீது நீதிமன்றம் எந்த விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள போகிறது என இவர்கள் காத்திருக்கின்றனர்.
இவர்களை தவிர Matthew Butterick என்கிற கணிப்பொறி துறையில் உள்ள நபர் இதே OpenAI நிறுவனம் தகவல்களை சேகரிக்கும் முறையானது மென்பொருள் திருட்டு என்கிற வகையில் மிகப்பெரும் piracy குற்றமாகும் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.
பின்னணி:
தற்கால டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஏற்ப மாறிவரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள சந்தைகளும், கல்வி கற்பிக்கும் முறையில் ஏற்பட்டுள்ள ஆன்லைன் மாற்றங்களும் அதிகளவில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் காலத்தில் நாம் தற்போது உள்ளோம். தகவல்கள்தான் தற்போதைய AI எனப்படுகின்ற செயற்கை நுண்ணறிவு துறையின் மாபெரும் சந்தை. இத்தகைய ChatGPT ரக தொழில்நுட்ப முன்னேற்ற வடிவமைப்பானது தகவல்களை விரைவில் முழுமையாக தேவையான வடிவில் (Audio, Video, Presentation and Article) தருகின்ற ChatGPT செயலிகளின் Autobot என்ஜின்களை தயார்படுத்த அனைத்து துறைகள் பற்றிய அடிப்படை விஷயங்களையும் அதற்கு தெரிய வைக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்காக தேவையான துறை சார்ந்த புத்தகங்கள் மற்ற தரவுகளை சேகரித்து வைக்கும் வகையில் சில Autobot உள்ளன, இவை வலைப்பக்கங்களில் உலாவி தேவையான தகவல்களை திரட்டி தருவதால் ChatGPt போன்ற செயலிகள் தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்கின்றன. தற்கால மாணவர்களும் எந்த விதமான தகவலை தேடவும் தெரிந்துகொள்ளவும் வலைதளங்களை மட்டுமே உபயோகிக்கின்றனர். இதனால் பலதரப்பட்ட காப்புரிமை பெறப்பட்ட விஷயங்கள் கூட அவற்றை உருவாக்கிய நபர்களுக்கு ராயல்டி என எதுவும் கிடைக்காமல் திருடப்பட்டு சேகரிக்க படுகிறது என்பது இவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.