அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, ‘இந்தியா மிகப்பெரிய மாசுபடுத்தும் ‘ என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்

செய்தி சுருக்கம்:
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரும், ஐ. நா. வுக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான நிக்கி ஹேலி , உலகின் மோசமான மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சீனாவுடன் சேர்த்து கருத்து தெரிவித்தார்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
ஆனால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரின் கருத்து உண்மைக்கு புறம்பாக உள்ளது.
2022 ஆம் ஆண்டின் உமிழ்வு இடைவெளி அறிக்கையின் படி(Emission Gap Report), சீனாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்கா 15 கிகா டன் கரியமில வாயு(Carbon Dioxide) உமிழ்வு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இன்று இந்தியா உலகின் நான்காவது பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளராக உள்ளது. அதன் மின்சாரத் திறனில் 40 சதவீதம் படிம எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து வருகிறது.
பின்னணி:
இந்தியா மற்றும் சீனா தான் உலகில் மிக மோசமான மாசுபடுத்திகள் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நாம் தீவிரமாக இருக்க வேண்டுமானால், இந்தியா மற்றும் சீனாவை எதிர்கொள்ள வேண்டும். அவர்கள்தான் மிகப்பெரிய மாசுபடுத்திகள் என்று அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
If we want to be serious about saving the environment, we need to confront India and China. They are some of the biggest polluters.
— Nikki Haley (@NikkiHaley) June 5, 2023