fbpx
LOADING

Type to search

பல்பொருள்

New Year Wishes in Tamil

English: New Year wishes

Tamil: புத்தாண்டு வாழ்த்துகள்! புது வருட வாழ்த்துகள்! புத்தாண்டு நல்வாழ்த்துகள்! புதுவருடப் பிறப்பு வாழ்த்துகள்!

Explanation: 

புத்தாண்டு (New year) என்பது ஒரு புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழா. அந்த விழாவின்போது அனைவரும் தம் உற்றார் உறவினருக்கு வாழ்த்துக் கூறி மகிழ்வர். புத்தாண்டு அல்லது புது வருடம் (New Year) என்பது வரப்போகும் அல்லது புதிதாகத் தொடங்கியிருக்கும் ஆண்டின் முதல் நாள் அல்லது நாட்களைக் குறிக்கிறது. உலகின் பெரும்பான்மையான கலாசாரங்களில் புதிய ஆண்டின் தொடக்கம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கும் மக்கள் ஜனவரி முதல் தேதியை ஆங்கிலப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.  உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். இவற்றைப் போலவே சீனப் புத்தாண்டு, இஸ்லாமியப் புத்தாண்டு, சிங்களப் புத்தாண்டு, உகாதிப் பண்டிகை எனப்படும் தெலுங்கு மற்றும் கன்னடப் புத்தாண்டு போன்றவை உண்டு. ஜனவரி முதல் தேதி பலர் புத்தாண்டு சபதம் மேற்கொள்வது வழக்கம். 

Examples: 

  1. உங்கள் குடும்பத்தினருக்கும் எனது புதுவருட வாழ்த்துகளைத் தெரிவியுங்கள். (Please convey my New Year wishes to your family members as well.)
  2. அன்பு உறவுகள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! (New Year wishes to all our beloved relatives!) 
  3. தங்களுக்கு என் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! (My New Year wishes to you!)
  4. சிறப்பான சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! (Special wishes on the Tamil New year Subhakruthu!) 
  5. உளம்கனிந்த 2௦22-ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துகள்! (My heartfelt New Year wishes on the New Year 2022!) 
  6. என் அன்பான அம்மாவுக்கு புது வருட வாழ்த்துகள்! (New Year wishes to my beloved mom!)
  7. புத்தாண்டு வாழ்த்துகள் அனுப்பிய அனைவருக்கும் என் நன்றி உரித்தாகுக! (I thank everyone who sent me New Year wishes!)
  8. மேலாளர் பணியாளர்களுக்கு புதுவருடப் பிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்தார். (The manager conveyed New Year wishes to the employees.)
  9. இந்த நாட்டில் இருக்கும் நமது இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஹிஜிரி புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகுக! (Hijri New Year wishes to our Muslim friends in this country.)

தொடர்புடைய பதிவுகள் :

Deserve Meaning in Tamil
Goggle Meaning in Tamil
கருத்தடைக்கான தடையை உடைத்தது அமெரிக்கா! வரலாற்றில் முதன்முறையாக கருத்தடை மாத்திரைக்கு அமெரிக்காவில் ...
பெண் ஏன் அடிமையானாள்..?
சூரியனின் வெளிப்புற வெப்பத்தின் இரகசியம் வெளிப்பட்டது!
நீண்ட நேரம் திரையைப் பார்ப்பதால் குன்றி நிற்கும் குழந்தைப்பருவம் பற்றிய ஆய்வு சொல்வதென்ன..?!
இனிப்பதெல்லாம் இனிப்பல்ல! செயற்கை இனிப்பூட்டிகள் புற்றுநோயை உண்டாக்கலாம் - ஆய்வு முடிவு!!
1983  கறுப்பு யூலை படுகொலைகள்: 40 வருடங்களாக ஆறாத ரணம்…
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார இணைப்பு! திட்டங்களை புதுப்பிக்கும் முயற்சியில் இருதரப்ப...
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்த விவேக் ராமசாமி யார்? எலான் மஸ்க்கால் அங்கீகரிக்கப்பட்ட இ...
முன்னைய பதிவு
அடுத்த பதிவு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Next Up