Nephew in Tamil Meaning

English: nephew
Tamil: மருமகன்; மருமான்; உடன்பிறந்தவர் மகன் (ஆண்பால்)
Explanation:
Nephew என்றால் சகோதரன்/சகோதரி (அல்லது அந்த முறை உடையவரது) மகன். இதன் பெண்பால் niece (மருமகள், மருமாள், உடன்பிறந்தவர் மகள்).
Examples:
- அவன் என் மகன் அல்ல, என் மருமகன். (He is not my son but my nephew.)
- லீலா தன் தம்பியின் மகனைப் பார்த்ததும் மகிழ்ந்தாள். (Leela was delighted to see her nephew.)
- என் மருமகன் எப்போதும் அழுதவண்ணம் இருக்கிறான். (My nephew’s always crying.)
- அவனுடைய மருமான்தான் அவனுடைய உலகம். (Only his nephew is his world.)
- உன் அக்காவின் மகன் லண்டனிலா இருக்கிறான்? (Is your nephew in London?)
- சாரா தன் அண்ணன் மகன் வீட்டுக்கு நடந்து சென்றாள். (Sarah walked to her nephew’s house.)
- என் மருமகன் இப்போது என்னை வேறுவிதமாகப் பார்க்கிறான். (My nephew looks at me differently now.)
- அவரது மருமானும் மருமாளும் இரட்டையர்கள். (His nephew and niece are twins.)
- என் தங்கையின் மகனும் என் மகளும் ஒரே வகுப்பில் படிக்கின்றனர். (My nephew and my daughter are in the same class.)
- நிப்ளிங் (nibling) என்பது ஒருவரின் உடன்பிறப்புகளின் குழந்தையை, “மருமகள்” அல்லது “மருமகன்” என்று கூறுவதற்கு மாற்றாகக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பாலினம்சாராச் சொல். (Nibling is a gender-neutral term used to refer to a child of one’s sibling as a replacement for “niece” or “nephew”.)
தொடர்புடைய பதிவுகள் :
அதிகம் போலிச் செய்திகளை பகிர்பவர்கள் யார்? ஆய்வு முடிவு தெரிவிப்பது என்ன?
சிங்கப்பூரில் துவங்கவுள்ள தமிழ் இளைஞர் திருவிழா - மூன்றாம் ஆண்டு கோலாகல கொண்டாட்டம் ஆரம்பம்.
பெண்ணியவாதிகள் அழகு சாதனப் பொருட்களை அதிகம் விரும்புபவர்களா? ஆராய்ச்சி முடிவுகள் சொல்வது என்ன?
மணிப்பூர் : பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆயிரக்கணக்கானோர...
1984: சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் - நடந்தது என்ன...?
Imposter Syndrome: இம்போஸ்டர் சிண்ட்ரோம்:
ஸ்பாட்டிஃபை செயலியில் ருசிகரத் தகவல்; இசையை விற்கிறதா நிறுவனம்?
Vlog Meaning in Tamil
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார இணைப்பு! திட்டங்களை புதுப்பிக்கும் முயற்சியில் இருதரப்ப...
Possessiveness in Tamil