Mystery Meaning in Tamil

Mystery Meaning in Tamil
பொருள்: (meaning)
மர்மம், தெளிவின்மை, மனித அறிவுக்கு எட்டாதது, பரமரகசியம், மாயமான, விளங்காச் செய்தி, ஒளிவு, மறைவு பழக்கம், மறைபொருள், உயர் தெய்வீக உணர்வு, ரகசியம், ஆன்மீக வாதம், நம்ப முடியாதது.
ஒத்த சொற்கள்:(Synonyms)
Mysterious, mystic, secrecy, puzzle, cryptical, inexplicable, incomprehensible. (மறைபொருள், பூடகமான, விளங்காத, ரகசியமான, புதிரான)
எதிர்சொற்கள்: (Antonyms)
Explicable, outward, public, exoteric (வெளிப்படையான தெளிவான)
விளக்கம்: (Explanation)
எது ஒன்று மனித அறிவுக்கு புரிந்து கொள்ள முடியாமல் அல்லது விளக்க கடினமாக உள்ளதோ அல்லது விளக்க சாத்தியமற்றதாக இருக்கிறதோ அது mystery என கூறப்படுகிறது. ரகசியத்தை அல்லது விசித்திரமாக இருப்பதையும் mystery என்கிறோம். அறியப்படாத ஒரு நபர் அல்லது விஷயத்தையும் குழப்பமானவற்றை mysterious அல்லது mystery என குறிப்பிடுவோம். நடைமுறை, திறன், வர்த்தகம் அல்லது செயல்பாட்டிற்கு விசித்திரமாக, ரகசியமாக இருப்பது.
ஒரு குழப்பமான குற்றத்தை கையாளும் ஒரு நாவல் அல்லது நாடகம் குறிப்பாக மனித புரிதலுக்கு அப்பாற்பட்டதாக கருதப்படுவது, புரிந்து கொள்ளுதலை தடுக்கும் அல்லது விளக்க முடியாத ஒன்று. ஒரு நாடகமும் நாவலும் திரைப்படமும் குறிப்பிடும் ஒரு குற்றம் பற்றிய கதை.
ஒரு மத நம்பிக்கை குறிப்பாக மனித புரிதலுக்கு அப்பாற்பட்டதாக கருதப்படுகிறது.
உதாரணங்கள்:(examples)
1. Aditya karikalan’s death is still a mystery
ஆதித்த கரிகாலனின் கொலை இன்றும் மர்மமாகவே உள்ளது.
2. The woman in the photograph is a mystery
அந்தப் புகைப்படத்தில் உள்ள பெண்மணி மர்மமாக உள்ளார்.
3. This is a landscape with mystery and charm
இது மர்மமும் வசீகரமும் கொண்ட நிலப்பரப்பு.
4.The story about the palace is shrouded in mystery
அரண்மனை பற்றிய கதை மர்மத்தில் மறைக்கப்பட்டுள்ளது.
5. Rajesh kumar is a mystery novel writer
ராஜேஷ்குமார் மர்ம நாவல்களை எழுதும் நாவலாசிரியர் ஆவார்.
6. Friends are separated by a mysterious wall
நண்பர்கள் பிரிவின் காரணம் ரகசியமாக உள்ளது.
7. We have a lot of mysteries in the space
வான்வெளியில் நமக்கு நிறைய புரியாத விஷயங்கள் உள்ளன.
8. Religious truth will always be a mystery for us
மதங்களைப் பற்றிய உண்மைகள் ரகசியமாக உள்ளன.
9. Past is always history and our future is mystery
கடந்த காலம் வரலாறாகவும் வருங்காலம் புதிராக ரகசியமாகவும் இருக்கிறது.