மைக்ரோசிப் தொழில்நுட்பத் துறையில் 825 மில்லியன் டாலர்கள் இந்தியா முதலீடு – மைக்ரான் நிறுவனம் தகவல்.

செய்தி சுருக்கம்:
அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் அழப்பை ஏற்று அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Micron Technology கடந்த வியாழனன்று (22-06-2023) 800 மில்லியன் டாலருக்கும் மேலாக முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது, இந்தியா வழங்கும் கூடுதலான இந்த முதலீட்டை கொண்டு இந்தியாவில் செமிகண்டக்டர் (குறைக்கடத்தி) பரிசோதனை ஆய்வகத்தை அமைக்க முடிவு.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2.75 பில்லியன் டாலர்களில் 50 சதவிகிதம் மத்திய அரசிடமிருந்தும் 20 சதவிகிதம் குஜராத் அரசிடமிருந்தும் பெறப்படுகிறது.
மைக்ரான் நிறுவனத்தின் அறிவிப்பின் படி இந்த ஆய்வகத்தின் முதற்கட்ட கட்டுமான பணிகள் குஜராத்தில் 2023 ல் ஆரம்பிக்கப்பட்டு 2024- ன் இறுதியில் செயல்பாட்டிற்கு வருமென தெரிகிறது. மேலும் இத்திட்டத்தின் இரண்டாம்கட்ட பணிகள் 2026- ல் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. இவ்விரு கட்டங்களும் முழுமை அடையும் பொழுது அது 5000 பேர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை மைக்ரான் துறையில் உருவாக்கும் என தகவல்.
பின்னணி:
அமெரிக்காவின் Applied Materials நிறுவன அறிவிப்பின் படி இந்த செமிகண்டக்டர் ஆய்வகமானது இந்தியாவின் வணிகமயமாக்கலையும் புதுவிதமான தொழில்நுட்ப வசதிகளையும் ஊக்குவிக்கும் எனத்தெரிகிறது. மேலும் Lam Research எனும் செமிகண்டக்டர் உபகரணங்களை உற்பத்தி செய்யும் மற்றொரு நிறுவனம் 60000 இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இந்தந்துறையில் பயிற்சியளிக்க முன்வந்துள்ளது.
இதன் மூலமாக இந்தியா செமிகண்டக்டர் துறையில் வேகமான வளர்ச்சியை அடைந்து அதன் இலக்கினை விரைவில் எட்ட முடியும் என்றாகிறது.
Asian News International இந்த அறிவிப்பினை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
Micron Technology யின் இந்த முடிவானது இந்தியாவில் முதலீடு செய்ய வலியுறுத்தி அமெரிக்கா சிப் நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகையால் குடுக்கப்பட்ட அழுத்தங்களால் எடுக்கப்பட்ட முடிவாக தெரிகிறது. இதற்கு மேலும் பல நிறுவனங்கள் எதிர்காலத்தில் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளதாக பேச்சுவார்த்தை நடப்பதாக அமெரிக்க நிர்வாக அதிகாரிகள் Reuters செய்தி நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
ஜோ பிடன் அமெரிக்க நிறுவனங்களை சைனாவில் முதலீடு செய்வதால் உண்டாகும் சிக்கல்களை குறைத்துக்கொண்டு அமெரிக்காவை இந்தியாவுடன் சிறப்பான முறையில் ஒருங்கிணைக்க முற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பொருளாதாரத்தை சீராக்க விரும்புகிறார் என்றும் Reuters செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் சைனா அரசு தங்கள் உள்நாட்டு கட்டமைப்பை வலுப்படுத்தும் அமைப்பினை தடை செய்துள்ளது, இதன் காரணம் அமெரிக்காவின் மிகப்பெரும் மெமரி சிப் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அந்த அமைப்பு பொருட்களை இறக்குமதி செய்ததே ஆகும். மேலும் அமெரிக்காவின் மைக்ரான் சிப் நிறுவனம் சைனாவின் பாதுகாப்பு மதிப்பாய்வில் சிறந்த நம்பகத்தன்மை பெறவில்லை என்றும் சைனா கூறியுள்ளது, இது ஜோ பிடனின் வெள்ளை மாளிகையின் நிர்வாக அமைப்பை ஆத்திரம் அடைய செய்துள்ளதாக தெரிகிறது. இந்த காரணங்கள் தான் இந்த பெரும் முதலீட்டிற்கு அடிப்படை என தெரிய வருகிறது.