Threads செயலி அறிமுகம், சோசியல் மீடியாவிற்கு ஏன் இவ்வளவு போட்டி?

செய்தி சுருக்கம்:
Threads என்னும் புதிய சமூக ஊடக செயலியை, மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அச்சு அலசாக டிவிட்டரைப் போலவே இருப்பதாக நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
சமூக ஊடகம் என்பது இன்று தவிர்க்க முடியாத ஒன்றாய் மாறிவிட்டது. ஒரு வகை சோசியல் நெட்வொர்கிங் என்றும் சொல்லலாம். பழைய நட்புகள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என அனைவரையும் நம்முடன் தொடர்பிலேயே வைத்திருக்கும் என்பது தான் இதன் சைக்காலஜி. இதை பயன்படுத்தி, பல நிறுவனங்கள் தங்கள் சொந்த சமூக மேடையை உருவாக்கி பயனர்களை ஒன்று திறட்டுகிறார்கள். மக்கள் ஒன்றுகூடும் சந்தை போல இதிலும் பல வகையான வர்த்தகங்கள் நடைபெறுகிறது. மேலும் விளம்பரங்கள் மூலம் கொள்ளை லாபம் பார்ப்பதால், சோசியல் மீடியா எனும் யுக்தி பல நிறுவங்களை அதன் பக்கம் ஈர்க்கிறது. தற்போது, இந்த சமூக வலைதளப் போட்டியில் மெட்டாவின் ‘த்ரெட்’ செயலியும் புதிதாக இணைந்துள்ளது.
பின்னணி:
ஒரு காலத்தில் மனிதர்கள் பேசவேண்டும் என்றால் ஒருவரை நேரில் சந்தித்து தான் பேச முடியும். இப்போது அப்படி இல்லை, இணையம் உலகத்தையே இணைத்துவிட்டது. இணைய தளம் என்னும் சொல் பலருக்குப் புதிய புதிராக இருந்தது. இரண்டு தனிநபர்களை இணையம் இணைக்கிறது என்பதே ஒரு ஆச்சரியமான விஷயம் தான். எப்படி ஒரு அலைவரிசை மூலம், ஒரு செய்தியை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியுமோ, அது போல இணையம் வழியாகவும் செய்தியை பரிமாறிக்கொள்ள முடியும் என கணினி நிபுணர்கள் கண்டுபிடித்தனர். அதன் விளைவாக இ-மெயில் என்னும் சேவை தொடங்கியது.
அதில் ஒரு நபர் மற்றொரு நபருக்கு எழுத்து வடிவில் தகவல் அனுப்பிக்கொள்ள முடிந்தது. இந்த சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல புதிய கட்டமைப்புகள் உருவாகின. அதில் மிக முக்கியமான நபராக ஃபேஸ்புக்கை வடிவமைத்த மார்க் ஜுகர்பர்க் இருந்தார். தனது கல்லூரி காலத்தில் மார்க் ஒரு புதிய சிந்தனையை செயல்படுத்தினார். தனது கல்லூரியில் பயிலும் மாணவர்கள், குழுவாக இணைந்து தங்களுக்குள் தகவலை பரிமாறிக் கொள்ள ஏதுவாக ஒரு செயலியை உருவாக்கினார். பிறகு பல கல்லூரி மாணவர்களும் அதில் இணைந்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தினார். பின்னர் உலகம் முழுவதும் அதைக் கொண்டு சென்று ஒரு பெரிய சமூக வலைதளமாக ஃபேஸ்புக்கை விரிவுபடுத்தினார்.
அதே காலகட்டத்தில் டிவிட்டர் என்னும் சமூக வலைதளமும் வளர்ந்தது. இதற்கும் ஃபேஸ்புக்கிற்கும் என்ன ஒரு வித்யாசம் என்றால், டிவிட்டரில் சொல்ல வேண்டிய தகவலை நாற்பது வார்த்தைக்குள் சொல்லியாக வேண்டும் ஆனால் ஃபேஸ்புக்கில் அப்படி இல்லை. சமூக வலைதளம் என்றாலே இந்த இரண்டு நிறுவங்கள் தான் எனும் மாயை மக்களிடம் தோன்றியது. இரண்டு நிறுவனமும் போட்டியாளர்களாக இருந்தாலும் வெவ்வேறு பாதையை தேர்ந்தெடுத்து பயணித்தனர்.
சென்றவருடம் டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் சுமார் 44பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுத்து வாங்கினார். அனைவரும் அதை ஆச்சரியமாக பார்த்தார்கள். ஏனென்றால் அன்றைய டிவிட்டரின் மதிப்பு வெறும் 22 பில்லியன் டாலர்கள் தான். அதன் பிறகு டிவிட்டரில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார் மஸ்க். இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுகர்பர்க் ஜூலை 6, 2023 அன்று thread எனப்படும் ஒரு புதிய செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தினார். இதனை அறிந்த பலரும் அடுத்த விநாடியே அந்த செயலியை தரவிறக்கம் செய்தனர்.
பேஸ் புக் முழுக்க இந்த threads app மீம்கள் பரவலாக பகிரப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இந்த threads ஆப் ஆனது பயன்படுத்த அச்சு அசலாக டிவிட்டர் போலவே வடிவமைக்கப்பட்டிருந்தது என்பது தான். பல நாட்களாக எலான் மஸ்க் காட்டிவரும் அதிரடியால் தான் இந்த புதிய செயலியை மார்க் உருவாக்கியுள்ளார் என சர்ச்சை கிளம்பியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் மெட்டா நிறுவனம் ‘ப்ராஜக்ட் 92’ என்னும் பெயரில் புதியதொரு செயல்பாட்டை துவங்கியது தற்போது அந்த ‘ப்ராஜக்ட் 92’ என்னும் பெயரை threads என மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
டிவிட்டர் போல இருந்தாலும் இதன் வண்ணங்கள் மெட்டா நிறுவனத்தின் ‘இன்ஸ்டாகிராம்’ போலவே இருக்கிறது. மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் கணக்கு வைத்திருந்தால் தான் இந்த thread செயலியை பயன்படுத்த முடியும். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை மட்டும் தான் பகிர முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. கருத்துக்களை எழுதுக்கள் வழியாகவும் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த thread செயலியை உருவாக்கியுள்ளதாக மார்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் டிவிட்டரை வாங்குவதும், மார்க் புதிய செயலியை தொடங்குவதும் எதைக் காட்டுகிறது என்றால்? சோசியல் மீடியா தான் உலகை ஆளும் ஆயுதமோ!