Meningitis Meaning in Tamil

(மெனிங்கிட்டிஸ்) – மூளைக்காய்ச்சல்
பொருள்: (meaning)
மூளைக்காய்ச்சல், மூளை உறை அழற்சி, தண்டு மூளை சவ்வு காய்ச்சல், மூளை நோய், மேல் தோல் அழற்சி, மூளை வீக்க நோய், மூளை சவ்வு வீக்கம்.
விளக்கம் (Explanation)
வைரஸ் அல்லது பாக்டீரியா போன்ற கிருமிகளால் தொற்று ஏற்பட்டு அதனால் விளைவதே மூளை காய்ச்சல் (meningitis) ஆகும். மூளை உறை அழற்சி என்பது மூளை மற்றும் தண்டுவடத்தை பாதுகாக்கும் திசுவின் அடுக்கு ஆகும். இந்த அடுக்குகளிலும் அதனை சுற்றியுள்ள திரவங்களிலும் தொற்று ஏற்பட்டு, அதன் விளைவால் மண்டையோட்டில் வீக்கம் மற்றும் அழற்சி ஏற்படுகிறது. இது அரிதாக சில மருந்துகளினாலும் கூட ஏற்படும்.
இதில் ‘spinal meningitis’ என்பது தண்டுவட வீக்கம், நரம்புத் தண்டு மூளை உறை அழற்சி எனப்படும்.
‘Fungal meningitis’ என்பது பூஞ்சை மூளைக்காய்ச்சல் ஆகும் இதில் பார்வை பறிபோகுதல் போன்ற சில பின்விளைவுகள் உண்டு.
இது தொற்றக்கூடியதாகவோ அல்லது தொற்றாததாகவோ இருக்கலாம். தொற்றக்கூடிய மூளையுறை அழற்சி நுண்ணுயிர்களால் ஏற்படுவதாகும்.
பொதுவான அறிகுறிகளாவன: –
தலைவலி, கழுத்து விறைப்பு ஆகியவற்றுடன் கூடிய காய்ச்சல், மனக்கலக்கம் அல்லது சுய நினைவு மாறுபடுதல், வாந்தி, வெளிச்சம், ஒலியைச் சகிக்கும் தன்மைக் குறைவு, ஒளியச்சம் (photophobia), ஒலியச்சம் (phonophobia) ஆகியன. சிலருக்கு வலிப்பு மயக்கம் மற்றும் இறப்புக்கு வழிவகுக்கிறது.
இந்நிலை மருத்துவ நெருக்கடி நிலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் மூளையில் ஏற்படும் பாதிப்பு மற்றும் இறப்பினை தவிர்க்கலாம்.
முதுகு தண்டுவட துளையிடுதல், உயர்ந்த இரத்த வெள்ளை அணு எண்ணிக்கைகள், தலையினில் எடுக்கப்பட்ட சி.டி. ஸ்கேன் அறிக்கைகள், மெனிங்கிட்டிஸ் தடிப்பிற்கான பாசிட்டிவ் கண்ணாடி சோதனை போன்ற பறிசோதனைகள் மூலம் இந்நோயைக் கண்டறியலாம்.
பாக்டீரீயா மூளைக்காய்ச்சலுக்கு சம்பந்தப்பட்ட பாக்டீரீயாவை பொறுத்து சிகிச்சை மாறுபடும். வைரஸ் மூளைக்காய்ச்சலுக்கு நரம்பு வழியாக எதிர்ப்பு மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்படும். பூஞ்சை மூளைக்காய்ச்சலுக்கு ஆன்டிஃபங்கல் சிகிச்சை அளிக்கப்படும்.
Synonyms:(ஒத்த சொற்கள்)
Brain fever, bacterial meningitis, cerebrospinal meningitis, ague, anthrax, adrenitis, and atropic inflammation.
மூளைகாய்ச்சல், குளிர்காய்ச்சல், நச்சுப்பரு, கால்நடைகளுக்கு உண்டாகும் சீக்கட்டு, நாடி அழற்சி, மூட்டு வீக்கம், தண்டுவட வீக்கம்.
உதாரணங்கள்:(Examples)
She has meningitis.
அவளுக்கு மூளைக்காய்ச்சல்.
Meningitis is caused by viruses, bacteria, and fungus.
மூளைக்காய்ச்சல் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படுகிறது.
The symptoms of meningitis should not be neglected.
மூளைக்காய்ச்சலின் அறிகுறிகளை உதாசீனப்படுத்தக்கூடாது.
Meningitis will lead to deafness and blindness to the patient.
மூளைக்காய்ச்சலின் பின்விளைவாக நோயாளிகளுக்கு செவிட்டுத் தன்மை மற்றும் பார்வை இழப்பு ஏற்படுகிறது.
The doctors didn’t even know what was wrong with her, at first; it was later that they diagnosed meningitis.
முதலில் அவளுக்கு என்ன பிரச்சனை என்று மருத்துவர்களுக்குத் தெரியவில்லை; பின்னர் அவர்கள் மூளைக்காய்ச்சலைக் கண்டறிந்தனர்.
Even children who survive meningitis, apparently without any complications, may develop learning difficulties.
மூளைக்காய்ச்சலில் இருந்து தப்பிக்கும் குழந்தைகள் கூட, வெளிப்படையாக எந்த சிக்கல்களும் இல்லாமல் இருப்பினும், கற்றல் சிரமங்களை பெற நேரிடலாம்.
Meningitis can be a serious complication following a skull fracture
மூளைக்காய்ச்சல் என்பது மண்டை ஓட்டின் முறிவுக்குப் பிறகு ஒரு தீவிர சிக்கலாக இருக்கலாம்