fbpx
LOADING

Type to search

அறிவியல் உடல் நலம் தெரிவு பல்பொருள்

மனிதர்கள் தாங்கக்கூடிய அதிகபட்ச வெப்பநிலை என்ன? ஆய்வு முடிவில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்!!

செய்தி சுருக்கம்:

 தினந்தோறும் வெயில் சுட்டெரித்துக் கொண்டே செல்லும் நம்பூமியில்  மனிதர்கள் வெப்பத்தைச் சமாளிக்கக் கற்றுக் கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.  சென்ற வருடத்தை விட இந்த வருடம் வெயில் அதிகம் தான் என்று சொல்லாத ஆட்களே இல்லை. அந்த அளவிற்கு நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

 இதை மனதில் கொண்டுதானோ என்னவோ இங்கிலாந்தின் ரோகாம்டன்  பல்கலைக்கழகத்தை சேர்ந்த லூயிஸ் ஹல்சி,  மனிதர்கள் எவ்வளவு அதிக வெப்பநிலையை தாங்கி உயிர் வாழ்வார்கள் என்ற ஆய்வை செய்ய தொடங்கினார்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

 ஆய்வின் முடிவில் ஹல்சி 104 முதல் 122 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை வரை மனித உடல் தாக்குப் பிடிக்கிறது என்ற உண்மையை கண்டறிந்துள்ளார். இந்த ஆய்வு முடிவு மனிதர்கள் பணி புரிய வேண்டிய சூழ்நிலை,  விளையாட்டு,  மருத்துவம்,  மற்றும் சர்வதேச பயணங்களில் உதவி புரியும் என்று  ஹல்சி நம்புகிறார். 

வெளி வெப்பநிலையானது மனிதனின் வளர்ச்சியை மாற்றத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.  அதே சமயம் மனிதர்கள் அதிக வெப்பநிலையை பாதகமான உடல்நல பாதிப்புகள் இல்லாமல் தாங்கிக் கொள்ள முடியும் என்றும் வெப்பநிலை 95 டிகிரி பாரன் ஹீட்டுக்கு கீழே குறையும் போது வளர்ச்சிதை மாற்றங்களில் ஏற்படும் விகிதம் அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் நிறுவியுள்ளன. 

 ஹல்சிக்கு முன்னதாகவே  இது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும் அந்த ஆய்வுகள் அரை ஆடையில் பங்கேற்கும் பங்கேற்பார்களின் ஆற்றல் செலவீனத்தை அளவிடவில்லை என்று ஹல்சி குறிப்பிடுகிறார். 

ஹல்சியின் ஆய்வில்  ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பாளர்களை ஆய்வரைக்குக் கொண்டு வரும்போது ஈரப்பதம் கட்டுப்படுத்தப்பட்ட அந்த அறையில் பங்கேற்பாளர்கள் ஒரு மணி நேரம் ஓய்வெடுக்கின்றனர்.  அப்போது அவர்களின் இதயத்துடிப்பு,  ரத்த அழுத்தம்,  உடல் வெப்பநிலை,  வியர்வை விகிதம்,  வளர்ச்சிதை மாற்ற விகிதம்  ஆகியவை அளவிடப்படுகின்றன. 

இவ்வாறு செய்யப்பட்ட ஆய்வில் சிலருக்கு 104 டிகிரி  பாரன்ஹீட்டில், உடலில் வளர்ச்சிதை மாற்ற விகிதங்கள் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டின. 122 டிகிரி பாரன்ஹீட் மற்றும் 50 சதவீதம் ஈரப்பதத்தில் வளர்சிதை மாற்ற விகிதம் 20 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது.  25 சதவீத ஈரப்பதத்துடன் வளர்ச்சிதை மாற்ற விகிதம்  மிகக் குறைந்த அளவே இருந்தது. 

வளர்ச்சிதை மாற்ற விகிதத்தைக் கவனிப்பதுடன் இந்த ஆய்வானது இதயத்தின் செயல்பாட்டை அதிகபட்ச வெப்பநிலை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் ஆய்வு செய்கிறது. 

உலகமெங்கும் பொதுவாக வெப்பநிலை அதிகரித்து வரும் இன்றைய சூழலில் மனிதர்கள் வாழும் பல்வேறு தளங்களில் இந்த ஆய்வு முடிவுகள் சிறப்பான முறையில் பலன்களைத் தரக்கூடும்.  வளர்ச்சிதை மாற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் மற்றும் இதயத்தின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் வெப்பநிலையை கண்டறிவதன் மூலம் நோயாளிகள், முதியோர்கள்,  இதய பாதிப்பு உள்ளவர்களை  எத்தகைய வெப்பமான  சூழல்களில் இருந்து  பாதுகாக்க வேண்டும்  என்ற  தெரிவு நமக்கு ஏற்படும்.

தொடர்புடைய பதிவுகள் :

எச்.ஐ.வி எனும் இந்நூற்றாண்டின் மாபெரும் கொடிய சாத்தான்
இலங்கையின் டி. ஆர். சி வரைவில் தமிழர்களின் கவலைகளுக்கு தீர்வு எதுவும் இல்லை - சுமந்திரன்
ஆளுநரின் தேனீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிக்கும் : மு.க.ஸ்டாலின்! நீட் தேர்வில் ஆளுநரின் நிலைப்பாட...
பகவத் கீதையை அவமதிக்கும் பாலியல் காட்சியை நீக்குக - ‘ஓப்பன்ஹைமர்’ பட இயக்குநருக்கு இந்தியா கோரிக்கை!
Fair Meaning in Tamil 
இந்தியாவின் ரஷ்யாவில் இருந்தான எண்ணெய் இறக்குமதி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது
வெயிட் லாஸ்'க்கு இப்படி சாப்பிடுங்கள். எளிமையாக கொழுப்பை கரைக்க எளிமையான மூன்று டிப்ஸ்.
இதயநோய் ஆபத்தைக் குறைக்கும் ஆறு உணவு பொருள்கள்
சிக்கல்களைத் தீர்ப்பதற்கான மூன்று விதிகள்
Attitude Meaning in Tamil
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *